பாபில் மாகாணம்

ஆள்கூறுகள்: 32°37′N 44°33′E / 32.617°N 44.550°E / 32.617; 44.550
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபில் கவர்னரேட்
محافظة بابل
பாபிலோன் மாகாணம்
மாகாணம்
Location of பாபில் கவர்னரேட்
ஆள்கூறுகள்: 32°37′N 44°33′E / 32.617°N 44.550°E / 32.617; 44.550
நாடு ஈராக்
தலைநகரம்கில்லா
பரப்பளவு
 • மொத்தம்5,119 km2 (1,976 sq mi)
மக்கள்தொகை (2018 கணக்கெடுப்பு)
 • மொத்தம்2,065,042
ம.மே.சு. (2017)0.677[1]
medium

பாபில் கவர்னரேட் அல்லது பாபிலோன் மாகாணம் (Babil Governorate அல்லது Babylon Province [2] ( அரபு மொழி: محافظة بابل‎ ) என்பது நடு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 5,119 சதுர கிலோமீட்டர்கள் (1,976 sq mi), 2018 ஆகும். இந்த மாகாண மக்கள் தொகை 2,065,042 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கில்லா நகரம் உள்ளது. இது யூப்ரடீஸ் நதிக்கரையில் இருந்த பண்டைய நகரமான பாபிலோனுக்கு (بابل) எதிரே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இன்றைய பாபிலோன் மாகாணத்தில் உள்ள பண்டைய நகரமான பாபிலோன் பண்டைய பாபிலோனியாவின் தலைநகராக இருந்தது. இந்த நகரம் ஈராக்கின் பாக்தாத்திற்கு தெற்கே யூப்ரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3]

கிமு மூன்றாயிரம் ஆண்டுகளிலிருந்து இந்த நகரம் இருந்துவருகிறது. ஆனால் பாபிலோனின் முதல் வம்சத்தின் மன்னர்களின் கீழ் கி.மு இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில்தான் இது முக்கியம் பெற்றது. இந்த வம்சத்தின் ஆறாவது மன்னரான அம்முராபி (கிமு 1792–1750), பாபிலோனை தன் பேரரசின் தலைநகராக மாற்றினார். இவரது சட்ட விதிகளுக்காக சிறந்த முறையில் இவர் நினைவுகூரப்படுகிறார்.

இரண்டாம் நெபுகாத்நேசர் (கிமு 605–562) மேற்கு ஆசியாவின் பெரும்பகுதிக்கு பாபிலோனியப் பேர்ரசை விரிவுபடுத்தியபோது இந்த நகரம் மேலும் முக்கியத்துவம் பெற்றது.

1991 இல் பாபில் மாகாணம் ஷியா எழுச்சியின் மையமாக இருந்தது. [3]

நிலவியல்[தொகு]

பாபிலோன் மாகாணமானது 32 ° முதல் 33.25 ° வடக்கு அட்சரேகை மற்றும் 44 ° முதல் 45 ° கிழக்கு தீர்க்கரேகைக்கு இடையே அமைந்துள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

பாபில் மாகாணமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவை: [3]

  • அல்-மஹாவில் மாவட்டம் ( அல்-மஹாவில் )
  • அல்-முசயாப் மாவட்டம் ( அல்-முசயாப் )
  • ஹாஷிமியா மாவட்டம் ( அல் ஹாஷிமியா )
  • ஹில்லா மாவட்டம் ( ஹில்லா )

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  2. Mohammad, Mohammad Hadi (2012). "Prevalence of Bovine Sarcocystosis in Babylon province (مجلة الكوفة للعلوم الطبية البيطرية)". Kufa Journal For Veterinary Medical Sciences 3 (2): 78–83. http://www.uokufa.edu.iq/journals/index.php/kjvs/article/viewFile/1567/1426. பார்த்த நாள்: 2020-12-03. 
  3. 3.0 3.1 3.2 "Babil Governorate Profile" (PDF). NGO Coordination Committee for Iraq (NCCI). 15 July 2015. Archived from the original (PDF) on 29 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபில்_மாகாணம்&oldid=3220414" இலிருந்து மீள்விக்கப்பட்டது