சம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்போ
Sambo
Cамбо
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை
தோன்றிய நாடுஉருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு உருசிய சோவியத்து கூட்டு சோசலிசக் குடியரசு
பெயர் பெற்றவர்கள்விளாதிமிர் பூட்டின்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitewww.sambo.com

சம்போ உருசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[1][2] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் சிபிரிடோனோ மற்றும் வசிலி ஒசுசேற்கோ என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒசுசேற்கோவின் மாணவரான அன்டோலி காரலம்பியே சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

முறைகள்[தொகு]

சம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.

  • விளையாட்டு சம்போ
  • போராட்ட சம்போ
  • திறந்த முறை சம்போ

மேற்கோள்கள்[தொகு]

மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்போ&oldid=3791616" இலிருந்து மீள்விக்கப்பட்டது