சீனாவில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்காய் நகரத்தின் இரவு வெளிநாட்டு ம்ற்றும் உள்ளூர் பயணிகளை ஈர்க்கிறது

சீனாவில் சுற்றுலா (Tourism in China) என்பது வளர்ந்து வரும் ஒரு தொழிலாகும். இது சீனப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறி வருகிறது. சீனப் பொருளாதாரம் சீர்திருத்தம் மற்றும் திறப்பு தொடங்கியதிலிருந்து கடந்த சில தசாப்தங்களாக சுற்றுலா விகிதம் பெரிதும் விரிவடைந்துள்ளது. புதிதாக பணக்கார நடுத்தர வர்க்கத்தின் தோற்றமும், சீன அதிகாரிகளின் இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது இரண்டும் இந்த பயண வளர்ச்சியைத் தூண்டுகின்றன. சீனா உலகின் மற்றும் வெளிச்செல்லும் சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சின்குவானெட் என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகம் ஒரு தொடர்ச்சியான சீன சுற்றுலா வளர்ச்சியின் கூட்டத்தில் உள்ளது.

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரான்சு, அமெரிக்கா, எசுப்பானியா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக வருகை தரும் நாடுகளில் சீனா நான்காவது இடத்தில் உள்ளது. சீனா ஆண்டுக்கு 56.9 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுள்ளது. [1]

2017 ஆம் ஆண்டில், சுற்றுலா சிஎன்ஒய் 8.77 டிரில்லியன் (அமெரிக்க டாலர் 1.45 டிரில்லியன்), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.04% பங்களித்தது. மேலும் 28.25 மில்லியன் மக்கள் வரை நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. 139.48 மில்லியன் உள்வரும் பயணங்களும் ஐந்து பில்லியன் உள்நாட்டு பயணங்களும் இருந்தன. [2] [3] சீனாவின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் தென் கொரியா மற்றும் யப்பானில் இருந்து வந்தார்கள் (வந்து சென்றார்கள்) என்று 2016 ஆம் ஆண்டின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது. குறைந்தது ஒரு இரவு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், தென் கொரியாவிலிருந்து 4.19 மில்லியன், யப்பானிலிருந்து 2.69 மில்லியன். வெளிநாடுகளில் இருந்து நேரடியாக சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21.65 மில்லியன் ஆகும். [4]

2014 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (943.1 பில்லியன் டாலர்) பயண மற்றும் சுற்றுலாவின் பங்களிப்புக்காக சீனா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பயண மற்றும் சுற்றுலாவின் வேலைவாய்ப்புக்கான பங்களிப்பில் உலகில் முதலிடம் (2014 இல் 66,086,000 வேலைகள்) வகிக்கிறது. நேரடி, மறைமுக மற்றும் தூண்டப்பட்ட தாக்கத்தின் அடிப்படையில் சுற்றுலா 2013 இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3 சதவீதமாக இருந்தது. [5]

2012 ஆம் ஆண்டு முதல், சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சர்வதேச சுற்றுலாவில் உலகின் அதிக செலவாளிகளாக உள்ளனர். இது உலகளாவிய வெளிச்செல்லும் பயணங்களுக்கு வழிவகுக்கிறது. 2016 ஆம் ஆண்டில், உலகின் சர்வதேச சுற்றுலா செலவினங்களில் 21% அல்லது 261 பில்லியன் டாலர் செலவு செய்யும் நாடாக இருக்கிறாது. [6] 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனர்களில் 7% பேருக்கு மட்டுமே கடவுச் சீட்டு இருந்தது, எனவே "மேலும் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் திகைக்க வைக்கின்றன" என்று இங்கிலாந்து செய்தி அறிக்கை கூறுகிறது. [7]

பெய்ஜிங்கின் தடைசெய்யப்பட்ட நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகள்

சீனாவில் 1949 மற்றும் 1974 க்கு இடையில், மக்கள் குடியரசு அனைவருக்கும் சுற்றாலாவை மூடியது. 1970 களின் பிற்பகுதியில், அந்நிய செலாவணியைப் பெறுவதற்கான வழிமுறையாக சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிக்க டங் சியாவுபிங் முடிவு செய்தபோது, சீனா தனது சுற்றுலாத் துறையை வளர்க்கத் தொடங்கியது. முக்கிய விடுதி கட்டுமான திட்டங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களின் எண்ணிக்கையை பெரிதும் அதிகரித்தன. மேலும் வரலாற்று மற்றும் அழகிய இடங்கள் புனரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட்டன. மேலும் தொழில்முறை வழிகாட்டிகள் மற்றும் பிற சேவைப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சுடு மண்சிலைப் படை உள்ள சிய்யான் மாகாணம்.
தடைசெய்யப்பட்ட நகரத்தில் அதிகாரமிக்க மண்டபம்
கோடைகால அரண்மனையில் உள்ள நன்மை மற்றும் நீண்ட ஆயுளின் மண்டபத்தில் சிற்பங்கள்
இரவில் சாங்காய் நகரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. CEO, Dr Amarendra Bhushan Dhiraj (26 April 2016). "World’s Top 10 Most Visited Countries By International Tourists In 2015". CEOWORLD magazine. http://ceoworld.biz/2016/04/26/worlds-top-10-visited-countries-international-tourists-2015/. 
  2. "2017 China Tourism Facts & Figures". China Travel Guide. 21 October 2018.
  3. "China Inbound Tourism in 2016". China Travel News. 1 September 2018.
  4. "China Inbound Tourism in 2016". www.travelchinaguide.com.
  5. "Is China attracting foreign visitors?". http://chinapower.csis.org/tourism. 
  6. News, The PIE. "China accounts for 21% of international tourism spending - UNWTO" (in en). thepienews.com. https://thepienews.com/news/china-accounts-for-21-of-international-tourism-spending/. 
  7. Smith, Oliver. "The unstoppable rise of the Chinese traveller – where are they going and what does it mean for overtourism?". The Telegraph. https://www.telegraph.co.uk/travel/comment/rise-of-the-chinese-tourist/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_சுற்றுலா&oldid=3244991" இலிருந்து மீள்விக்கப்பட்டது