எஸ். மகாராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதியரசர் மகாராஜன் (Justice. S.Maharajan) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1 ஏப்ரல் 1913 அன்று பிறந்தவர். இவரது தாய்-தந்தையரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிகவும் புலமை பெற்ற இவர் தமிழ் இசை அறிஞரும் கூட. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பும், பின்னர் சட்டப் படிப்பு முடித்த மகாராஜன் 1935-இல் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார். 8 ஆண்டுகள் வழக்கறிஞராக தொழில் செய்த பின்னர் 1943-இல் நீதித்துறை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் 1969-இல் பதவி உயர்வு பெற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசராக பணியில் சேர்ந்தார்.[1] 1975-இல் ஓய்வு பெற்ற பின்னர் நீதியரசர் மகாராஜன் பிற மொழி செவ்விலக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் அறிஞர்கள் குழுவின் தலைவரானார். [2]இவர் முத்தொள்ளாயிரம் மற்றும் கம்ப இராமாயாணத்தில் மிகவும் புலமை பெற்றவர். சேக்ஸ்பியரின் ஆங்கில மொழி நாடக நூல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்தவர் ஆவார். இவர் கம்பராமாயணம் மற்றும் திருமூலரின் திருமந்திரங்கள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். இவர் தமிழசைச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.

சூன் 2012-இல் இவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.[3]இவரது இலக்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இராஜாஜி, ரசிக மணி டி. கே. சி மற்றும் சிலம்புச் செல்வர் ம. பொ. சி ஆவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  1. Kamban - 1972 - சாகித்திய அகாதமி வெளியிடு
  2. Thiruvalluvar - 1979 - சாகித்திய அகாதமி வெளியிடு
  3. Culture of Tamils - 1972
  4. THE INNER MEANING THE INNER MEANING OF HUMAN HIST OF HUMAN HISTORY - 1974
  5. ஆடத் தெரியாத கடவுள்
  6. சொல் இன்பம்
  7. ஓளிச் செல்வம்

தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]

இவர் தமிழில் மொழி பெயர்த்த வில்லியம் சேக்ஸ்பியரின் நாடக நூல்கள்:[4]

  1. ஹாம்லெட் - 1961
  2. லீயர் அரசன் - 1965
  3. மாக்பெத் - 1970

மேற்கோள்கள்[தொகு]

  1. நீதியரசர் மகாராஜன் நினைவுச் சொற்பொழிவு கட்டுரை
  2. Justice. S.Maharajan
  3. Rich tributes paid to Justice Maharajan
  4. Books Written by Justice Maharajan

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மகாராஜன்&oldid=3059230" இலிருந்து மீள்விக்கப்பட்டது