முன்னணி நடிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னணி நடிகர் அல்லது முன்னணி நடிகை (Leading actor) என்பது திரைப்படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கதாநாயகன் வேடத்தில் நடிப்பவர்களைக் குறிக்கும்.[1] முன்னணி என்ற சொல் நபர் ஒருவர் தொடரில் மிகப்பெரிய பாத்திரத்தில் நடிப்பவரைக் குறிக்கலாம் அல்லது முன்னணி நடிகரையும் பொதுவாகக் குறிக்கலாம்.

இவர்களின் கதாபாத்திரம் துணை அல்லது குணசித்திர பாத்திரங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சில நேரங்களில் ஒரு தொடரில் 2 முன்னணி கதாபாத்திரங்கள் தோன்றலாம். அதை துணை முன்னணி கதாபாத்திரம் என்று அழைக்கப்படும். முன்னணி கதாபாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளில், சில நேரங்களில் ஒரே செயல்திறன் கொண்ட இரண்டு நடிகர்களை சிறந்த நடிகர் அல்லது சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதாவது எடுத்துக்காட்டாக, 1935 ஆம் ஆண்டில் முயுட்டிணி ஆன் த பவுண்டி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கிளார்க் கேபிள், சார்ல்ஸ் லாக்டன் மற்றும் பிரான்செட் டோன் ஆகியோர் சிறந்த நடிகர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மேற்கோள்களை[தொகு]

  1. "lead noun (ACTOR) - definition in the British English Dictionary & Thesaurus - Cambridge Dictionaries Online". Dictionary.cambridge.org. 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னணி_நடிகர்&oldid=3421778" இலிருந்து மீள்விக்கப்பட்டது