நிதி நடவடிக்கை பணிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதி நடவடிக்கை பணிக்குழு
சுருக்கம்FATF
துவங்கியது1989; 35 ஆண்டுகளுக்கு முன்னர் (1989)
வகைபன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு
Purpose/focusசட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுத்தல்
தலைமையகம்பாரிஸ், பிரான்சு
Region servedஉலகம் முழுவதும்
உறுப்புரிமை39
அலுவல் மொழிகள்ஆங்கிலம் பிரஞ்சு
தலைவர்மார்கஸ் லேயர்[1]
Affiliationsசட்டவிரோத பணப்புழக்கத்திற்கு எதிரான ஆசிய-பசிபிக் அமைப்பு, கரிபீரியன் பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு, பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி எதிர்பிற்கான ஐரோப்பியக் குழு தென் அமெரிகக பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி எதிர்பிற்கான குழு, (GAFISUD), பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி எதிர்பிற்கான மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க அமைப்பு (MENAFATF)
வலைத்தளம்www.fatf-gafi.org

நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task ForceFATF) என்பது சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கான, பன்னாட்டு அரசுகளிடையிலான அமைப்பாக உள்ள நிதி சார்ந்த செயல்பாட்டுப் பணிக் குழுவாகும். இதன் தலைமையிடம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது.

இது சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் அதை எதிர்ப்பதற்கான பிற நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. நிதி ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்கள். எஃப்ஏடிஎஃப்-இன் இர்ண்டு முக்கிய தடுப்புக் குழுக்களில் பணமோசடி தடுப்புக் குழு மற்றும் பயங்கரவாத நிதி தடுப்புக் குழுக்கள் ஆகும்.

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பாக 30 ஆகஸ்டு 2020 வரை வட கொரியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான்[2][3]உள்ளிட்ட 18 நாடுகளை இவ்வமைப்பு கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் பன்னாட்டு வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும்.

உறுப்பினர்கள்[தொகு]

குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகள்[தொகு]

பன்னாட்டு பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்புக் குழுவின் இணையதளத்தின் படி, தற்போது இந்தியா உள்ளிட்ட தற்போது 37 நாடுகளும், இரண்டு பிராந்திய அமைப்புகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.[4]

பார்வையாளர் நாடுகள்[தொகு]

தற்போது இந்தோனேசியா மட்டும் இவ்வமைப்பின் பார்வையாளர் உறுப்பினராக உள்ளது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FATF – Presidency". FATF-gafi.org. Archived from the original on 2020-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  2. 'கிரே' பட்டியலில் பாக்., நிதியுதவி பெறுவதில் சிக்கல்
  3. Why Pakistan continues to find itself in the black hole of FATF grey list
  4. "FATF Members and Observers". FATF. Archived from the original on 5 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "FATF Observers". FATF. Archived from the original on 19 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Indonesia obtains FATF observer status". The Jakarta Post. 5 July 2018. http://www.thejakartapost.com/news/2018/07/05/indonesia-obtains-fatf-observer-status.html. பார்த்த நாள்: 5 July 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]