தயா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயா ஆறு
Daya River
தயா ஆற்றங்கரை, கலிங்க நாடு, தளொலி மலையிலிருந்து
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம்குகாகை ஆறு
 ⁃ அமைவுஒடிசா
முகத்துவாரம்வங்காள விரிகுடா & சில்கா ஏரி

தயா ஆறு (Daya River) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் சரதீபூரில் (படாஹதிக்கு அருகில்) குவாக்கை ஆற்றின் ஒரு கிளையாகத் தொடங்குகிறது. இது மல்கூனி ஆறுடன் கோலாபாயிக்கு கீழ் இணைந்து கோர்த்தா மற்றும் பூரி மாவட்டங்களின் வழியாக பாய்ந்துப் சில்கா ஏரியின் வடகிழக்கு மூலையில் கலக்கிறது. இதன் தோற்றத்திலிருந்து சில்கா ஏரியில் கலப்பது வரை 37 கிலோமீட்டர்கள் (23 mi) நீளமுடையது.[1]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெளலி மலைகள் தயா ஆற்றின் கரையில் புவனேசுவரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் (5 mi) தொலைவில் தென்பகுதியில் அமைந்துள்ளன. இது பரந்த திறந்தவெளியைக் கொண்ட மலையாகும். அசோகாவின் முக்கிய கட்டளைகளை மலையின் உச்சிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள ஏராளமான பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கலிங்கப் போர் நடந்த பகுதி என்று தெளலி மலை கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daya River". India. Online Highways LLC. 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-12-23.
  2. Kainiraka, Sanu (2016-03-01) (in en). From Indus to Independence - A Trek Through Indian History: Vol I Prehistory to the Fall of the Mauryas. Vij Books India Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85563-14-0. https://books.google.com/books?id=1LJqCwAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_ஆறு&oldid=3800117" இலிருந்து மீள்விக்கப்பட்டது