சத்யவிஜய தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யவிஜய தீர்த்தர்
இறப்பு1737
சத்தியவிஜயநகரம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
இயற்பெயர்பாண்டுரங்கி பாலாச்சார்யர்
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருசத்யபூர்ண தீர்த்தர்

சத்யவிஜய தீர்த்தர் (Satyavijaya Tirtha) (இறப்பு 1737) இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் 23வது தலைவராக 1726 முதல் 1737 வரை பணியாற்றினார்.

சுயசரிதை[தொகு]

குருபரம்பரையின்படி, இவர் பாண்டுரங்கி சீனிவாசாச்சார்யா என்பவருக்கு ஒரு முக்கிய அறிஞர் குடும்பத்தில் பாண்டுரங்கி பாலாச்சார்யா என்ற பெயரில் பிறந்தார். இவருக்கு சத்யபூர்வ தீர்த்தரால் சந்நியாசம் வழங்கப்பட்டது. இவர் வயதில் சிறியவராக இருந்ததால், சத்யபூர்ண தீர்த்தருக்குப் பிறகு உத்திராதி மடத்தின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. [1] இவர் மடத்தின் நிர்வாகத்தை 1726 முதக் 1737 வரை நிர்வகித்தார். இந்த நேரத்தில் கி.பி 1726 ஆம் ஆண்டு 1726 ல் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சில சலுகைகளுடன் கௌரவிக்கப்பட்டார். [2] 1737 ஆம் ஆண்டில் இவர் சத்தியப்பிரிய தீர்த்தரிடம் மடத்தின் பொறுப்பை ஒப்படைத்தார். இவர் 1737 இல் இறந்தார். மேலும் இவரது உடல் காவிரி ஆற்றின் கரையில் உள்ள சத்தியவிஜயநகரத்தில் (ஆரணி) ஒரு மடத்தில் வைக்கப்பட்டுள்ளன. [3]

மரபு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யவிஜய_தீர்த்தர்&oldid=3046775" இலிருந்து மீள்விக்கப்பட்டது