சுலா சக்ரபோங்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலா சக்ரபோங்சே
பிறப்பு(1908-03-28)28 மார்ச்சு 1908
பருஸ்கவன் அரண்மனை, பேங்காக், தாய்லாந்து
இறப்பு30 திசம்பர் 1963(1963-12-30) (அகவை 55)
கார்ன்வால் மாவட்டம், இங்கிலாந்து
துணைவர்எலிசபெத் கர்லிங் ஹண்டர்
குழந்தைகளின்
பெயர்கள்
நரிசா சக்ரபோங்சே
மரபுசக்ரபோங்சே குடும்பம் (சக்ரி வம்சம்)
தந்தைசக்ரபோங்சே புவனாத்
தாய்எகடெரினா தெசுனித்சுகாயா
இராணுவப் பணி
சார்பு தாய்லாந்து
சேவை/கிளைதாய் பேரரசின் இராணுவம்
தரம் தலமை தளபதி[1]

சுலா சக்ரபோங்சே (Chula Chakrabongse) (28 மார்ச் 1908 - 30 திசம்பர் 1963) இவர் தாய்லாந்தின் சக்ரி வம்சத்தின் குடும்பத்திலும், சக்ரபாங் மாளிகையின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் இளவரசர் சக்ரபோங்சே புவனாத், அவரது உருசிய மனைவி எகடெரினா தெசுனித்சுகாயா (பின்னர் மாம் கேத்தரின் நா பிட்சானுலோக்) ஆகியோரின் ஒரே மகனாவார். மேலும், இவர் சுலலாங்கொர்ன் மன்னரின் பேரன்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1936இல் எலிசபெத் ஹண்டருடன் இளவரசர் சூலா

இவர், 1908 மார்ச் 28 அன்று பேங்காக்கின் பருஸ்கவன் அரண்மனையில் மாம் சாவோ என்ற தலைப்பில் பிறந்தார். இவரது பாட்டி, சாவோபா போங்ஸ்ரி இவருக்கு போங்சாக் என்ற பெயரிட்டார். பின்னர் இவரது மாமா, அரசர் வஜிராவுத், இவரை பிரா சாவோ வோராவோங் தோ பிரா ஓங் சாவோ (மாண்புமிகு இளவரசர்) என்ற உயர் பட்டத்தை வழங்கினார். மேலும், இவரது பெயரை சுன்லச்சக்ராபோங் என்றும் மாற்றினார். அரண்மனை அதிகாரிகள் இவரை "லிட்டில் பிரின்ஸ்" (தான் பிராங் நு) என்று அன்போடு அழைத்தனர்.

இவர் சிறுவனாக இருந்தபோதே, ஐக்கிய இராச்சியத்தில் படிக்க இவர் அனுப்பப்பட்டார். அங்கு இவர் தனது இளமை வாழ்க்கையை கழித்தார். ஹாரோ பள்ளியில் பயின்ற பின்னர், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் திரித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பிற்கால வாழ்வு[தொகு]

1938 ஆம் ஆண்டில் இவர் எலிசபெத் ஹண்டர் என்ற ஆங்கிலப் பெண்ணை மணந்தார் (லிஸ்பா என்றும் அழைக்கப்படுகிறார்). இவர்களது மகள் மாம் ராஜவோங்சே நரிசா சக்ரபோங்சே 1956 இல் பிறந்தார்.[2][3] இவர்கள் 1940 கள் மற்றும் 1950 களில் கார்ன்வாலில் உள்ள செயின்ட் மாபின் திரெதெதியில் வாழ்ந்தனர்.[4]

இவரது உறவினரான இளவரசர் பிரபொங்சே பானுதெச் ("பி. பீரா") 1927 இல் இங்கிலாந்து சென்றபோது, இவர் ஒயிட் மவுஸ் ரேசிங் என்ற பந்தயக் குழுவிற்கு அழைத்துச் சென்றார்.[5] இளவரசர் பீரா இவருக்காக வாகனம் ஓட்ட முடிவு செய்தார்.

1936 ஆம் ஆண்டில், சூலாவின் வெள்ளை மவுஸ் குழு பீராவுக்கு ஒரு ERA ஐ வாங்கியது, மேலும் அவர் இந்த வகை சர்வதேச பந்தயத்தின் முன்னணி அதிபர்களில் ஒருவரானார். சூலாவுடன் பீராவின் கூட்டு 1948 இன் பிற்பகுதியில் முடிந்தது.

சக்ரி வம்சத்தின் வரலாறு, பந்தயக்கார் ஓட்டுநர் ரிச்சர்ட் சீமான் பற்றிய சுயசரிதை,தனது சுயசரிதை உட்பட பதின்மூன்று புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

இவர் புற்றுநோயால் 1963 இல் தனது 55 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2502/D/087/2148_1.PDF
  2. Soravij. "Chakrabongse". Archived from the original on 14 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 May 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. HRH Prince Chula CHAKRABONGSE பரணிடப்பட்டது 2018-03-06 at the வந்தவழி இயந்திரம். genealogy.rootsweb.com
  4. "New Zealand Cornish Association newsletter" (PDF). Archived from the original (PDF) on 11 July 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2009.
  5. "His Highness (Pra Worawongse Ther Pra Ong Chao) Prince Birabongse Bhanutej". Archived from the original on 2012-04-13. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.

நூலியல்[தொகு]

Autobiography
Other works

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chula Chakrabongse
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலா_சக்ரபோங்சே&oldid=3930101" இலிருந்து மீள்விக்கப்பட்டது