இந்திய வணிக அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வணிக அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது2013
அமைவிடம்கேரளம், கோழிக்கோடு
வகைசிறப்பு அருங்காட்சியகம்
மேற்பார்வையாளர்எம். ஜி. ஸ்ரீகுமார் (குழுத்தலைவர்)
உரிமையாளர்இந்திய மேலாண்மை நிறுவனம் கோழிக்கோடு
வலைத்தளம்www.iimk.ac.in

இந்திய வணிக அருங்காட்சியகம் (Indian Business Museum) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரில் உள்ள ஐ.ஐ.எம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 2013 இல் திறக்கப்பட்டது. [1] இந்த அருங்காட்சியகம் இந்திய வணிகத்தின் வளமான மரபுகளைக் காண்பிப்பதற்காக உருவாக்கபட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வளமான வணிக வரலாற்றை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பாதுகாக்கவும் இந்த அருங்காட்சியகம் விரும்புகிறது. இந்த அருங்காட்சியகம் இளைஞர்களிடையே வணிக தொழில்முனைவோராக ஊக்குவிக்கவும் தூண்டவும் முயல்கிறது. அருங்காட்சியகத்தைப் பார்வையிட, ஐஐஎம்கே இன் அனுமதி சீட்டு தேவைப்படலாம்.

பின்னணி[தொகு]

இந்த அருங்காட்சியகத்தை 2013 ஆம் ஆண்டில் அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பாலம் ராஜு திறந்து வைத்தார். கோழிக்கோட்டின் வளமான வர்த்தக வரலாற்றை காட்டுவதன் மூலமும், இந்திய துணைக்கண்டத்தின் வணிகத்தைப் பற்றியும் வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் இந்த அருங்காட்சியகம் விரும்புகிறது. டாடா, கோத்ரேஜ், ரிலையன்ஸ், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் அருங்காட்சியகத்திற்குள் தங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. [2] [3] 23,000 சதுர அடிகள் (2,100 m2) பரப்பளவில் பரவியிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் , மலபார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிதியுதவியுடன் மலபார் காட்சி அரங்கம் அமைக்கபட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]