யானைக் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானைக் கட்டிடம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவுற்றது
நிறைவுற்றது1997
மேலாண்மைஅருண் சாய்சாரி குழு & யானைக் குழு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஆங்-அட் சத்ரபான்

யானை கட்டிடம் அல்லது சாங் கட்டிடம் ( Elephant Building; தாய் மொழி: ตึกช้าง) என்பது தாய்லாந்தின் பாங்காக்கில் பஹோலியோதின் சாலை மற்றும் ராட்சாடாபிசெக் சாலையில் உள்ள உயரமான கட்டிடம் ஆகும். இது வடக்கு பாங்காக் வணிக மாவட்டம் மற்றும் சதுசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் யானைபோல இருப்பதால் இப்பெயர் பெற்றது. பாங்காக்கில் நன்கு அறியப்பட்ட கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கட்டிடம் டாக்டர் அருண் சாய்சாரி (தாய் மொழி: ดร.อรุณ ชัยเสรี) மற்றும் கட்டிடக் கலைஞர் ஓங்-ஆர்ட் சத்ரபந்து (தாய் மொழி: องอาจ สาตรพันธุ์  ; RTGS : ஆங்-அட் சத்ரபான்) ஆகியோரின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 32 தளங்களைக் கொண்டுள்ளது, இந்த கட்டிடத்தின் உயரம் 102 மீட்டர் (335) ஆகும். இந்தக் கட்டிடம் 1997ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி.என்.என்.கோவால் "20 உலக வானளாவிய கட்டிடங்களின் வரிசையில் [sic]" நான்காவது இடத்தை யானைக் கட்டிடம் பிடித்தது. [1]

யானை கட்டிடம் ஏழு பகுதிகளைக் கொண்டுள்ளது: அவையாவன:

  • டவர் ஏ (அலுவலகங்கள்)
  • டவர் பி (அலுவலகங்கள்)
  • டவர் சி (குடியிருப்பு)
  • மேல் மாடி (குடியிருப்பு அறைகள்)
  • பொழுதுபோக்கு மைதானம் (நீச்சல் குளம், தோட்டங்கள்)
  • வணிக வளாகம், வங்கி, தபால் அலுவலகம்
  • கேரேஜ்

அருகில்[தொகு]

மேஜர் சினிப்ளெக்ஸ் ராட்சாயோதின் இக்கட்டிடத்திற்கு எதிரே உள்ளது. இச்சாலையில்டெஸ்கோ தாமரை மற்றும் சென்ட்ரல் பிளாசா லார்ட்பிராவ் உள்ளது .

போக்குவரத்து[தொகு]

  • பி.டி.எஸ் ஸ்கைட்ரெய்ன் - பஹோனோதின் 24 நிலையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chang (Elephant) Building". BKK Kids. 9 October 2013. Archived from the original on 9 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்_கட்டிடம்&oldid=3792711" இலிருந்து மீள்விக்கப்பட்டது