பான்னரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்னரை
சியாமின் இளவரசி
பதவிக்காலம்1876 – 1 அக்டோபர் 1868
பிறப்பு(1838-05-09)9 மே 1838
பேங்காக், தாய்லாந்து
இறப்பு22 சூன் 1914(1914-06-22) (அகவை 76)
பேங்காக், தாய்லாந்து
துணைவர்மோங்குத் (நான்காம் ராமா)
குழந்தைகளின்
பெயர்கள்
கன்னிககேவ்
நரிசரா நுவட்டிவாங்
மரபுசக்ரி வம்சம்
தந்தைசிறிவாங்கின் இளவரசர் மட்டயாபிதக்
தாய்கிம் சாச்சியோ

பான்னரை (Phannarai) (மே 9, 1838 சூன் 22, 1914), சே சிரிவோங் என்றும் அழைக்கப்படும் முன்னாள் இளவரசியான இவர், சக்ரி வம்சத்தின் நான்காவது மன்னரான சியாமின் மோங்குத்த்தின் மனைவிகளில் ஒருவராவார். .

இவர், சிரிவோங்கின் இளவரசர் மட்டயாபிதக் (மூன்றாம் ராமாவின் மகன்) என்பவருக்கும், அவரது மனைவி கிம் சாச்சியோ ஆகியோரின் மகளாவார். இவரது சகோதரி தெப்சிரிந்திராவும், இவரும், 1851 ஆம் ஆண்டில் மோங்குத் மன்னரின் மனைவிகளாக மாறினர். 1861 ஆம் ஆண்டில் இவரது சகோதரி இறந்தபோது, மோங்குத்தின் மூத்த மனைவியாக இவர் பொறுப்பேற்றார்.

இவர் இராணி என்ற பதவிக்கு உயர்த்தப்படவில்லை என்றாலும், இவர் அரசவையில் பெண்கள் மீது தீர்ப்பளித்தார். மேலும்,வெளிநாட்டு தூதர்களுக்கான பல்வேறு விருந்துகளின் போது இராணியாக அவரது நிலைப்பாடு காணப்பட்டது. தி கிங் அண்ட் ஐ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் லேடி தியாங்கின் கதாபாத்திரம் இவரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கல்வியாளரான அன்னா லியோனோவன்ஸ் 1862 ஆம் ஆண்டில் அரசவைக்கு வந்து 1867 வரை இருந்த ஆறு வருட காலப்பகுதியில் இவரது குழந்தைகளுக்கும், மோங்குத்ட் மன்னரின் மற்ற குழந்தைகளுக்கும் பொறுப்பாக இருந்தார். [1]

மன்னர் மோங்குத்துடன் இவருக்கு கன்னிககேவ் என்ற ஒரு மகளும், நரிசரா நுவட்டிவாங் என்ற ஒரு மகளும் என இரு குழந்தைகள் பிறந்தனர். இவர் 1914 இல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்னரை&oldid=3628788" இலிருந்து மீள்விக்கப்பட்டது