இந்திய சுதந்திர வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சுதந்திர வானொலி (Azad Hind Radio) என்பது ஒரு பிரச்சார வானொலி சேவையாகும். இது சுதந்திரத்திற்காக போராட இந்தியர்களை ஊக்குவிப்பதற்காக 1942 இல் ஜெர்மனியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜெர்மனியை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் தலைமையகம் தென்கிழக்கு ஆசியாவில் போரின் போக்கைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் பின்னர் யங்கோனுக்கும் மாற்றப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவிற்கு நேதாஜி சென்ற பின்னர், ஜெர்மனியின் நடவடிக்கைகளை ஜெர்மனியில் இந்திய படையணியின் தலைவரும் பின்னர் ஜெர்மனியில் உள்ள நாடு கடந்த இந்திய அரசின் தூதருமான ஏ.சி.என் நம்பியார் தொடர்ந்தார். [1] [2] [3]

இந்த நிலையம் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, பஷ்தூ, உருது போன்ற மொழிகளில் வாராந்திர செய்திகளை ஒளிபரப்பியது. ஜெர்மனியில் உள்ள இந்திய படையணியும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்திய தேசிய இராணுவத்திற்கான மிகவும் சாத்தியமான தன்னார்வலர்கள் பேசும் மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது.

இவ்வானொலி நேச நாட்டு வானொலி நிலையங்களின் ஒளிபரப்பை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. வானொலியில், நேதாஜி பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை புளஃப் அண்ட் பிளஸ்டர் கார்ப்பரேஷன் என்றும் அகில இந்திய வானொலியை இந்திய எதிர்ப்பு வானொலி என்றும் குறிப்பிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Netaji's Addresses on Azad Hind Radio". oocities.org. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  2. Afridi, Sahroz. "Freedom struggle on air". Hindustan Times. Archived from the original on 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Netaji to come alive on Azad Hind Radio". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

Netaji's speeches on Azad Hind Radio:

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சுதந்திர_வானொலி&oldid=3333007" இலிருந்து மீள்விக்கப்பட்டது