இராதா பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Radha Balakrishnan
பிறப்பு
வதிவுஇந்தியா
தேசியம்இந்தியன்
துறைஇயற்பியல்
நிறுவனம்Department of Theoretical Physics, சென்னைப் பல்கலைக்கழகம்
கணித அறிவியல் கழகம், சென்னை
Alma materதில்லி பல்கலைக்கழகம்
Brandeis University

இராதா பாலகிருஷ்ணன் (Radha Balakrishnan) என்பார் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையில் உள்ள கணிதவியல் அறிவியல் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தொகையற்ற இயக்கவியல் மற்றும் இயற்பியல் பயன்பாடு குறித்து நிபுணத்துவம் பெற்றவர்.[1][2][3][4]

கல்வி[தொகு]

பாலகிருஷ்ணன் டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 1965ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியினை (பிஎச்.டி) பிராண்டிஸ் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை குவையம் படிகங்களின் விளைவுகளை 4ஈலியம், திட ஈலியம் அசுத்தங்கள் குறித்த ஆய்வின் மூலம் பெற்றார்.[5]

பணி[தொகு]

தனது முனைவர் பட்ட ஆய்வு முடிவிற்குப்பின் 1980ல், இந்தியாவிற்குத் திரும்பிய இராதா பாலகிருஷ்ணன் சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவார்த்த இயற்பியல் துறையில் ஆராய்ச்சி இணையாளராக பணியாற்றினார். பின்னர் 1987 ஆம் ஆண்டில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் 2004 ஆம் ஆண்டில் அகவை முதிர்வு காரணமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் இவரது ஆராய்ச்சி பணியினைப் பெருமைப்படுத்தும் விதமாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சிஎஸ்ஐஆர்) தகைமைப்பேறு அறிவியலார் விருது வழங்கி ஆராய்ச்சியைத் தொடரச் செய்தது.[5] இவரது தற்போதைய ஆராய்ச்சி, நேரியல் அல்லாத இயக்கவியல், சொலிட்டான்கள் மற்றும் இயற்பியலில் உள்ள பயன்பாடுகள், மரபுசார் வேறுபட்ட வடிவியலாகும்.[1]

குடும்ப வாழ்க்கை[தொகு]

இராதா பாலகிருஷ்ணன் இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் வி. பாலகிருஷ்ணனைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அரி பாலகிருஷ்ணன் என்ற மகனும் அம்சா பாலகிருஷ்ணன் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை தொழில்நுட்ப நிலையத்தில் பேராசிரியர்களாக உள்ளனர்.

விருதுகள் & மரியாதை[தொகு]

1990லிருந்து இவர் நேர்கோட்டுத்தன்மை மற்றும் வளைவுகள் மற்றும் மேற்பரப்புகளின் வேறுபட்ட வடிவியலுக்கு இடையிலான ஆழமான தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். பாலகிருஷ்ணனின் அறிவியல் பங்களிப்பிற்காக இயற்பியல் அறிவியல் பிரிவில் 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு விஞ்ஞானிகள் விருதைப் பெற்றார். நேரியல் அல்லாத இயக்கவியலில் அசல் மற்றும் முன்னோடி பங்களிப்புகளுக்காக ஐஎன்எஸ்ஏவின் பேராசிரியர் தர்ஷன் இரங்கநாதன் நினைவு விரிவுரை விருதினை 2005ஆம் ஆண்டு பெற்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Radha Balakrishnan". பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  2. "Radha Balakrishnan". பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
  3. G. Caglioti, A. Ferro Milone, தொகுப்பாசிரியர். Mechanical and Thermal Behaviour of Metallic Materials Enrico Fermi International School of Physics. Elsevier, 1982. பக். 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080983837. https://books.google.com/books?id=6Qh4AAAAQBAJ&dq. பார்த்த நாள்: 25 February 2014. 
  4. Selected Topics in Mathematical Physics: Professor R. Vasudevan Memorial Volume. Allied Publishers, 1995. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170234883. https://books.google.com/books?id=ZuvY_53X45IC&dq. பார்த்த நாள்: 25 February 2014. 
  5. 5.0 5.1 5.2 "Autobiographical article" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_பாலகிருஷ்ணன்&oldid=3045428" இலிருந்து மீள்விக்கப்பட்டது