பாஜி பிரபு தேஷ்பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஜி பிரபு தேஷ்பாண்டே
பன்காலா கோட்டையில் பாஜி பிரபு தேஷ் பாண்டேவின் சிலை
சிவாஜியின் அமைச்சர்
அம்பர்நாத்தின் படைத்தலைவர்
பிறப்பு1615
சிந்த், போர் தாலுகா, புனே மாவட்டம், மகாராட்டிரா
இறப்பு14 சூலை 1660
பவன் கிந்த், கோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா

பாஜி பிரபு தேஷ்பாண்டே (Baji Prabhu Deshpande) (1615 - 1660) மராத்தியப் பேரரசர் சிவாஜியின் அமைச்சரும், படைத்தலைவரும் ஆவார். போரின் போது மன்னர் சிவாஜியை, எதிரிகளிடமிருந்து பன்காலா கோட்டையிலிருந்து காப்பாற்றி, தனது இன்னுயிரை துறந்தவர் ஆவார். மன்னர் சிவாஜியை விட 15 ஆண்டுகள் மூத்தவர் பாஜி பிரபு தேஷ்பான்டே. இவர் சந்திரசேன காயஸ்த பிரபு குடும்பத்தில் பிறந்தவர்.[1][2]

பவன் கிந்த் சண்டை[தொகு]

பவன் கிந்தில் சிவாஜியும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவும், 20-ஆம் நூற்றான்டின் சித்திரம்

அப்சல் கானை சிவாஜி கொன்றதால், பிஜப்பூர் சுல்தானகத்தின் படைகள் சிவாஜியின் பிரதாப்காட் கோட்டையை முற்றுகையிட்டனர். எனவே சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சிவாஜி தம்மை மறைத்துக் கொண்டார்.

சில நாட்களில் சிவாஜியின் மராத்தியப் படைகள் கோலாப்பூர் அருகே உள்ள பன்கலா கோட்டையை கைப்பற்றியது. இதனிடையே நேதாஜி பல்கார் தலைமையிலான மராத்தியப் படைகள் பிஜப்பூரை முற்றுகையிட்டது. அதே நேரத்தில் சிவாஜியின் படைகள் பன்கலா கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றியது.

எத்தியோப்பியோவைச் சேர்ந்த சித்திக் ஜோகர் எனும் பிஜப்பூர் படைத்தலைவர் சிவாஜி மறைந்திருக்கும் இடத்தை தேடி, பன்கலா கோட்டை முற்றுகையிட்டார். நேதாஜி பல்கார் தனது படைகளுடன் சித்திக் ஜோகரின் படைகளை தொடர்ந்து தாக்கினார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

இறுதியாக சிவாஜியும், பாஜி பிரபு தேஷ் பாண்டேவும் வகுத்த திட்டப்படி, இரவு நேரத்தில் குறைந்த படைகளுடன் விஷால்காட் கோட்டையை கைப்பற்றினர். பிஜப்பூர் படைகளை ஏமாற்றும் நோக்கில் சிவ நாவி என்பவர் சிவாஜியைப் போன்று மாறுவேடம் அணிந்து பிஜப்ப்பூர் சுல்தான் படைகளிடம் சரணடைந்தார். பாஜி பிரபு தேஷ் பாண்டே தலைமையில் 600 மராத்திய வீரர்கள் ஆடி மாத பௌர்ணமி அன்று, பிஜப்பூர் படைகளின் விஷால்காட் கோட்டை முற்றுகையை தகர்த்தனர்.

பிஜப்பூர் சுல்தானின் படைகள் தங்கள் தவறை உணர்ந்தவுடன், துரத்தல் மீண்டும் சிவாஜியின் படைகளை துரத்தத் தொடங்கியது. சித்தி ஜோஹரின் மருமகன் சித்தி மசூத் தலைமையில், பிஜப்பூர் படைகள் கோட்கிந்து கணவாய அருகில், மராட்டியர்களை எதிர்கொண்டனர். சிவாஜியும், மராத்தியப் படையில் பாதி பேரும் விஷால்காத்துக்குத் தள்ளப்பட்டனர், அதே நேரத்தில் பாஜி பிரபு, அவரது சகோதரர் புலாஜி மற்றும் மீதமுள்ள 300 பேர் கொண்ட படையினரை தடுத்த, பிஜப்பூர் சுல்தான் வீரர்களுக்கு எதிராக 18 மணி நேரத்திற்கும் மேலாக போராடினர்.

இந்த சண்டையின் போது பாஜி பிரபு "தண்ட் பட்டா" என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, சாகும் வரை போராடினார். விஷால்கந்து கோட்டைக்கு சிவாஜி தனத் 300 படைவீரர்களுடன் அணுகிய போது, ஏற்கனவே விஷால்கந்து கோட்டையை பிஜப்பூர் சுல்தான் படைத்தலைவர்களான சூர்ராவ் சர்வே மற்றும் ஜஸ்வந்த்ராவ் டால்வி முற்றுகையிட்டனர். அவர்களை சிவாஜி தனது 300 ஆட்களுடன் கோட்டையை அடைய சர்வேவை தோற்கடிக்க வேண்டியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kantak, M. R. (1978). "The Political Role of Different Hindu Castes and Communities in Maharashtra in the Foundation of the Shivaji's Swarajya". Bulletin of the Deccan College Research Institute 38 (1): 46. 
  2. Balkrishna Govind Gokhale (1988). Poona in the eighteenth century: an urban history. Oxford University Press. பக். 112. ""The early great hero of the CKP community was Baji Prabhu Deshpande, who sacrificed his own life in 1660 to enable Shivaji to escape the Mughals at Vishalgad."" 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baji Prabhu Deshpande
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜி_பிரபு_தேஷ்பாண்டே&oldid=3792696" இலிருந்து மீள்விக்கப்பட்டது