தேவ்னி மோரி

ஆள்கூறுகள்: 23°32′N 73°08′E / 23.54°N 73.13°E / 23.54; 73.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவ்னிமோரி
கௌதம புத்தரின் சுடுமட்சிலை
தேவ்னி மோரி is located in இந்தியா
தேவ்னி மோரி
Shown within India
இருப்பிடம்தேவ்னி மோரி, ஆரவல்லி மாவட்டம், குசராத், இந்தியா
ஆயத்தொலைகள்23°32′N 73°08′E / 23.54°N 73.13°E / 23.54; 73.13
வகைவிகாரை மற்றும் தூபி
வரலாறு
கட்டப்பட்டதுகிபி 4-ஆம் நூற்றான்டு
கலாச்சாரம்கிரேக்க காந்தாரக் கலை
தேவ்னி மோரி விகாரை
தேவ்னி மோரி தொல்லியல் களத்தின் கல்வெட்டு பொறித்த கல் பேழை
தேவ்னி மோரி தொல்லியல் களத்தின் தூபியில் கண்டெடுக்கப்பட்ட மேற்கு சத்ரபதி மன்னர் இரண்டாம் ருத்திரசிம்மன் (கிபி 305-313) உருவம் பொறித்த நாணயம்

தேவ்னிமோரி (Devnimori, or Devni Mori), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்கில் அமைந்த ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள சாம்லாஜி நகரத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் தேவ்னி மோரி எனுமிடத்தில் உள்ள பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1][2] இவ்விடத்தில் கிபி 3 / 4-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மேற்கு சத்திரபதி அரசர்கள் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் நினைவாக பிக்குகள் தங்குவதற்கும், வழிபாடுவதற்கும் விகாரைகளும், தூபிகளும் நிறுவினார்கள்.[3] [4]

ஒன்பது கௌதம புத்தரின் சிலைகள் தேவ்னி மோரியின் தூபியில் கண்டெடுக்கப்பட்டது.[5]கிரேக்க காந்தாரக் கலைநயத்தில் இந்த கௌதம புத்தரின் சிலைகள் வடிகக்ப்பட்டிருந்தது.[6] இவைகள் மேற்கு சத்திரபதி மன்னர்களின் கலைநயத்திற்கு எடுத்துகாட்டாகும்.[6][2][7]தேவ்னி மோரி விகாரை சுட்ட செங்கற்களால் நிறுவப்பட்டுள்ளது. [1]

தேவ்னிமோரி குஜராத்திற்கும், இராஜஸ்தான் பகுதிகளுக்கும் இடையே ஒரு வணிக மையமாக விளங்கியது. [8]

தேவ்னிமோரி தொல்லியல் களத்தில் மேற்கு சத்ரபதிகள் (கிபி 4-ஆம் நூற்றான்டு வரை), கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 5-ஆம் நூற்றாண்டு) காலம் முதல் முகலாயப் பேரரசு (14-ஆம் நூற்றான்டு) காலம் வரையிலான இந்து மற்றும் பௌத்த சமய தொல்பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [1]இத்தொல்லியல் களம் 1960 மற்றும் 1963-ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழ்வாய்வு செய்யப்பட்டது..[1]பின்னர் இத்தொல்லியல் களம் மெஷவா ஆற்றின் நீர்த் தேக்க வெள்ள்த்தால் சிதைந்து போனது.[1][9]

தேவ்னிமோரி தொல்லியல் களத்தில் கிபி 3 அல்லது 4-ஆம் நூற்றான்டின் கௌதம புத்தரின் சுடுமட்சிலையின் தலைச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[1] [2][10]

இத்தொல்லியல் களத்தின் தூபிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று அலங்காரப் பேழைகளின் ஒன்றில் குறித்த கல்வெட்டில், மேற்கு சத்திரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் ஆட்சிக் காலம் குறிக்கப்பட்டுள்ளது. தூபிகளிலிருந்து நினைவுச் சின்னங்கள் அடங்கிய மூன்று கற்பேழைகள் கண்டெடுக்கப்பட்டது.[11][1]

"In the year 127 of the Kathika kings, when king Rudrasena was ruling, the erection of this stupa, which was banner of this earth, was done. It was the 5th day of Bhadrapada."

—Translation by Professor S.N. Choudhary[12][13]

இத்தொல்லியல் களத்தின் ஒரு கல் பேழையில் கிபி 204-ஆம் ஆண்டு காலத்திய மேற்கு சத்ரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் மற்றும் கிபி 375-ஆம் ஆண்டு காலத்திய மூன்றாம் ருத்திரசிம்மன் ஆகியவர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளது.[14]

மற்றொரு கல் பேழையில் மேற்கு சத்திரபதி மன்னர் விஸ்வசேனர் (294-305)[1]மற்றும் முதலாம் ருத்திரசிம்மன் (305-313) வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளது.[11]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Schastok, Sara L. (1985). The Śāmalājī Sculptures and 6th Century Art in Western India. BRILL. பக். 24-27 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004069410. https://books.google.com/books?id=jh1fF8HvJmMC&pg=PA24. 
  2. 2.0 2.1 2.2 Behrendt, Kurt A. (2004) (in en). Handbuch der Orientalistik. BRILL. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004135952. https://books.google.com/books?id=C9_vbgkzUSkC&pg=PA170. 
  3. Behrendt, Kurt A. (2004) (in en). Handbuch der Orientalistik. BRILL. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004135952. https://books.google.com/books?id=C9_vbgkzUSkC&pg=PA73. 
  4. Mishra, Susan Verma; Ray, Himanshu Prabha (2016) (in en). The Archaeology of Sacred Spaces: The Temple in Western India, 2nd Century BCE–8th Century CE. Routledge. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317193746. https://books.google.com/books?id=CtDLDAAAQBAJ&pg=PA17. 
  5. Le, Huu Phuoc (2010) (in en). Buddhist Architecture. Grafikol. பக். 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780984404308. https://books.google.com/books?id=9jb364g4BvoC&pg=PA200. 
  6. 6.0 6.1 The Journal of the International Association of Buddhist Studies, Volume 4 1981 Number I An Exceptional Group of Painted Buddha Figures at Ajanṭā, p.97 and Note 2
  7. Behrendt, Kurt A. (2004) (in en). Handbuch der Orientalistik. BRILL. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004135952. https://books.google.com/books?id=C9_vbgkzUSkC&pg=PA171. 
  8. Mishra, Susan Verma; Ray, Himanshu Prabha (2016) (in en). The Archaeology of Sacred Spaces: The Temple in Western India, 2nd Century BCE–8th Century CE. Routledge. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317193746. https://books.google.com/books?id=CtDLDAAAQBAJ&pg=PA44. 
  9. Meshwo Water Reservoir பரணிடப்பட்டது 2019-01-09 at the வந்தவழி இயந்திரம், Government of Gujarat (India)
  10. Behrendt, Kurt A. (2004) (in en). Handbuch der Orientalistik. BRILL. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004135952. https://books.google.com/books?id=C9_vbgkzUSkC&pg=PA171. 
  11. 11.0 11.1 Schastok, Sara L. (1985) (in en). The Śāmalājī Sculptures and 6th Century Art in Western India. BRILL. பக். 28–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004069410. https://books.google.com/books?id=jh1fF8HvJmMC&pg=PA28. 
  12. "Dev ni Mori". 19 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2017-11-04.
  13. Schopen, Gregory (2005) (in en). Figments and Fragments of Mahayana Buddhism in India: More Collected Papers. University of Hawaii Press. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780824825485. https://books.google.com/books?id=6Gq-IsWFpXkC&pg=PA244. 
  14. Ghosh, Amalananda (in en). An Encyclopaedia of Indian Archaeology. BRILL. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004092641. https://books.google.com/books?id=Wba-EZhZcfgC&pg=PA173. 
  15. (in en) Indian Archaeology 1960-61 a Review. பக். 58, item 19. https://dokumen.tips/documents/indian-archaeology-1960-61-a-review.html. 

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்னி_மோரி&oldid=3759608" இலிருந்து மீள்விக்கப்பட்டது