ஜனாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனாபாய் (Janābāi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள விட்டலரின் பரம பக்தையும், நாமதேவரின் சீடரும் ஆவார். ஜனாபாய் பொ.ஊ. 13-ஆம் நூற்றான்டில் பிறந்து, பொ.ஊ. 1350-இல் சமாதி அடைந்தார்.[1] பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தையான ஜனாபாய், விட்டலர் மீது இயற்றி பாடியுள்ள பக்திப் பாடல்களை அபங்கம் என்பர்.

வரலாறு[தொகு]

மகாராட்டிரா மாநிலத்தின் பர்பணி மாவட்டத்தில் உள்ள கங்காகேத் எனும் ஊரில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் ஜனாபாய். ஜனாபாயின் சிறுவயதில் தம் தாயார் இறந்த பிறகு, தந்தையால் பண்டரிபுரம் அழைத்துச் செல்லப்பட்டு, நாமதேவரின் தந்தை வீட்டில் வீட்டு வேலைகள செய்யத் துவங்கினார். ஜனாபாய் நாமதேவரை விட வயதில் சில ஆண்டுகளே மூத்தவர். நாமதேவரைப் போன்றே ஜனாபாயும், பகவான் விட்டலர் மீது பெரும் பக்தி கொண்டு பதிகங்கங்கள் இயற்றினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dalbir Bharti (2008). Women and the Law. APH Publishing. பக். 18. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனாபாய்&oldid=3794079" இலிருந்து மீள்விக்கப்பட்டது