தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி
தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.[1] டிசம்பர் 12 1992 அன்று கார்முகில் தலைமையில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். நீண்ட காலமாக தேர்தல் நடவடிக்கையில் யாரையும் ஆதரிக்கவும் இல்லை[2] [3]. தேர்தலில் பங்கேற்கவும் இல்லை. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் உருவான கூட்டணியை ஆதரித்து. இக்கட்சியின் சித்தாந்த தலைவராக தோழர் கார்முகில் உள்ளார். தோழர் கார்முகில் 7-5-1969 ஆண்டு பாவலரேறு பெருஞ்சிதிரனார், தமிழக விடுதலைப் படை ஒன்றை அமைக்கும் நோக்கில் கூட்டப்பட்ட நிகழ்வில் இரத்தக் கையழுத்து இட்டதாக பெருஞ்சித்திரனாரின் வாழ்கை குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவே தோழர் கார்முகில் அரசியல் வாழ்வு தொடக்கமாக கருதப்படுகிறது. இக்கட்சியின் முக்கிய வெளிப்படை அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகும்[4]. 1977 இறுதியில் கார்முகில் மாநில அமைப்புக் குழு(தமிழ் நாடு, இ.பொ.க.(மா-லெ)) வில் இணைந்தார். 1981 ஆண்டு மாநில அமைப்புக் குழுவில் பிளவு ஏற்பட்டு தமிழ் நாடு அமைப்புக் குழு தோன்றியது. தமிழ் நாடு அமைப்புக் குழுவின் அரசியலுக்கு முதன்மையான பங்களிப்புச் செய்தவர் தோழர் ராகவன். தோழர் ராகவனும் வேறு மூன்று தோழர்களும் இணைந்து தமிழ் நாடு அமைப்புக் குழுவைத் தோற்றுவித்தனர். அவர்களில் ஒருவராக கார்முகில் இருந்தார். பிறகு அதன் செயலராகவும்ஆனார்.. பிறகு ராகவனும் பிற தோழர்களும் தமிழ்நாடு அமைப்புக் குழுவிலிருந்து வெளியேறிய பிறகு கார்முகில் தமிழ் நாடு அமைப்புக் குழுவின் அரசியலைக் கைவிட்டு, தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி எனப் பெயரை மாற்றிக் கொண்டார். இவ்வாறு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் செயல்கள் தமிழ் தமிழ் நாடு என்றுள்ளது. இதன் திட்டம் தமிழகத்தில் சோசலிச கம்யூனிச வாழ்வை ஏற்படுத்துவதாகும். இவ்வமைப்பு 2012ல் நமது கட்சி என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இப் புத்தகம் காரல்மார்க்ஸ் தொடங்கி வைத்த முதல் அகிலத்தின் கருத்துகளில் தொடங்கி இக்கட்சியின் நிலைபாடுகள் வரை தொடர்ச்சியாக விளக்குகிறது. இது இந்திய அரசியல் சட்டத்தின்படி பதிவு செய்யாத ஓர் அரசியல் அமைப்பு கமுக்க அமைப்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இளமாறன், ed. (2001). தமிழ் தமிழர் உறவுகள். மெய்யப்பன் தமிழ் ஆய்வக வெளியீடு. p. 231.
- ↑ ஈழத் தமிழர் ஆதரவு - எழுச்சி மாநாடு. ஆதி அருள் நெறி மன்ற சிறப்பு வெளியீடு. 07 மார்ச் 1999. p. 3.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ சுந்தர் ராஜன், ed. (1999). நூற்றாண்டு தமிழ் வளர்ச்சி. மாணிக்கவாசகர் பதிப்பகம். p. 225.
{{cite book}}
: no-break space character in|title=
at position 11 (help) - ↑ முரளிதரன் காசிவிஸ்வநாதன், ed. (1 ஜூன் 2019). முகிலன் என்கிற சண்முகம்: யார் இவர்? பின்னணி என்ன? - விரிவான தகவல்கள். பிபிசி தமிழ்.
இந்த காலகட்டத்தில், அதாவது 1987 - 88ல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மாவோயிசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய லெனினிய கட்சியான தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தீவிரமாக இயங்கிவந்தது. அதன் இளைஞர் அமைப்பான புரட்சிகர இளைஞர் முன்னணி
{{cite book}}
: Check date values in:|year=
(help)