ராசித் பீபீசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அகமது ரசித் பீபீசான்

இந்தியப் பெருங்கடலின்
முக்கிய நட்சத்திரம்
மொரிசியசின் துணைப் பிரதமர்
பதவியில்
7 சூலை 2005 – 2010
குடியரசுத் தலைவர்அனெரூட் ஜக்நாத்
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
Vice Presidentஅங்கிடி செட்டியார்
இரௌப் பந்தன்
முன்னையவர்பிரவிந்த் ஜக்நாத்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும்,
பொது பயன்பாட்டுத் துறை
அமைச்சர்
பதவியில்
3 அக்டோபர் 2008 – 2010
குடியரசுத் தலைவர்அனெரூட் ஜக்நாத்
பிரதமர்நவின்சந்திரா ராம்கூலம்
Vice Presidentஅங்கிடி செட்டியார்
முன்னையவர்அபு கசெனலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 திசம்பர் 1935 (1935-12-22) (அகவை 88)
ரிவியர் டு ரெம்பார்ட்,
பிரித்தானிய மொரிசியசு
அரசியல் கட்சிமொரிசிய தொழிலாளர் கட்சி
துணைவர்(பிபி) காதிஜன் ராவத்
பிள்ளைகள்சலீம் பீபீஜான்
இரைசுமா டிசோசா
ஆரூன் பீபீசான்
தொழில்குழந்தை சுகாதார ஆலோசகர்(1971–1993)[1]
இணையத்தளம்www.gov.mu/portal/site/mpusite/menuitem.9d0d39ffd0e7ba1261f5fbbea0208a0c/

அகமத் ராசித் பீபீசான் (Ahmed Rashid Beebeejaun) (மொரிசியசு அரசாங்கத்தில் உயரிய கௌரவ விருது பெற்றவர்) [2] (1935 திசம்பர் 22 அன்று பிறந்தார்) இவர் ஓர் மொரிசியசு முன்னாள் துணைப் பிரதமராகவும் [3], மொரிசியசின் பொது பயன்பாட்டு அமைச்சராகவும் 2008 முதல் இருந்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு முதல் மொரிசியசு தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் மொரிசியசு நாட்டின் அடுத்த பிரதமர் பதவியை வகித்த அதிக வாய்ப்புள்ள நபர் ஆவார். 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இவர் நவீன் ராம்கூலம் மூலம் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இவர் ரிவியர் டு ரெம்பார்ட் என்ற இடத்தில் பிறந்தார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு நாட்டில் மருத்துவராக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் அதிபரான அனெரூட் செகநாத் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கிய நட்சத்திரம் என்ற[4] பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். மேலும் பேரரசின் மருத்துக் கல்லூரியின் சக உறுப்பினராக உள்ளார்.

2011 ஆம் ஆண்டில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தால் இவருக்கு ஒரு கௌரவ விருது வழங்கப்பட்டது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Honorable members of the government". பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
  2. "The Minister". Ministry of Energy and Public Utilities. Archived from the original on 29 September 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
  3. "Archived copy". Archived from the original on 23 October 2009. பார்க்கப்பட்ட நாள் 30 September 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Home". 23 February 2012. Archived from the original on 23 February 2012.
  5. "Honorary Graduates of the University of Birmingham since 2000" (PDF). University of Birmingham. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசித்_பீபீசான்&oldid=3926745" இலிருந்து மீள்விக்கப்பட்டது