வள்ளண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளண்மையைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன.

வள்ளியம்
வள்ளியம் [1] என்னும் செருக்கு [2] ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஊக்கம் இருப்பவர்கள் மட்டுமே இந்தச் செருக்கைப் பெறமுடியும். [3]
வள்ளியன்
புலவர் ஒருவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் குட்டுவன் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் என்னும் சேர மன்னனைக் கண்டு பாடினார். அப்போது அவனை வள்ளியன் என்று குறிப்பிடுவிட்டு புலவர்கள் அவனிடம் பரிசில் பெறச் செல்லவேண்டாம் என்கிறார். காரணம் இவர் அவனைக் கண்டு பாடியபோது அவனது போர்யானைகளில் ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். புலவர் அதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கினாராம். ‘புலவர் பரிசில் போதாது என்று ஒதுங்குகிறார்’ என அவன் நினைத்துக்கொண்டு மேலும் பல யானைகளை அவன் நல்கினானாம். (தானே வறுமையில் வாடும்போது இவற்றிற்குச் சோற்றுக்கவளம் கொடுப்பது எப்படி என்பது புலவர் கவலை) [4]
வள்ளண்மையோடு இணைந்த சொற்கள்
மேலும் வள்ளியை, [5] வள்ளியோய் [6] வள்ளியோர் [7], வள்ளியோன் [8] என்பன போன்ற சொற்கள் வள்ளண்மையைக் குறிக்கத் தோன்றியவை.

இதையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நான் கொடையாளி
  2. மனச்செல்வம்
  3. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் சிறப்பு - திருக்குறள் 598,
  4. புறநானூறு 394,
  5. வள்ளியை ஆதலின் வணங்குவல் – புறநானூறு 211-8
  6. பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் – புறநானூறு 203,
  7. வள்ளியோர்ப் படர்ந்து (வள்ளலை நினைத்து) – புறநானூறு 47
  8. பாரியைக் கபிலர் வள்ளியோன் என்கிறார் - புறநானூறு 119
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளண்மை&oldid=1286161" இலிருந்து மீள்விக்கப்பட்டது