சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகாமேளர்
चोखामेळा
விட்டலர் கோயில் முக்கிய நுழைவாயில் அருகே சோகாமேளரின் சமாதி, பண்டரிபுரம்
பிறப்புதியோல்காவ்ன் இராஜா தாலுகா, புல்டாணா மாவட்டம், மகாராட்டிரா
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்சாது, (மராத்தி மொழியில் சந்த் (संत)
விட்டலர் கோயிலின் முதன்மை நுழைவாயிலுக்கு அருகே நீறக் கூரையில் கீழ் சோகாமேளரின் சமாதிக் கோயில்

சோகாமேளர் (Chokhamela) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் பான்டுரங்க விட்டலர் கோயிலில் குடிகொண்டுள்ள விட்டலரின் பக்தர் ஆவார். சோகாமேளர் பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில், தற்போதைய மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம், தியோல்காவ்ன் இராஜா தாலுகாவில் உள்ள மெகுனா இராஜா எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்தவர் ஆவார்.

நாமதேவரைப் பின்பற்றி சோகாமேளர் தனது மனைவி சோயாராபாய் மற்றும் மகன் கர்மமேளாவுடன் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்தில் வைணவ வர்க்காரி நெறிகளுடன் வாழ்ந்தவர்.[1] சோகாமேளர் விட்டலரைத் துதித்து அதிக பதிகங்களைப் பாடியுள்ளார்.

வரலாறு[தொகு]

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் பண்டரிபுரத்தில் உள்ள விட்டலர் கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.[2] பழமைவாதிகளான பிராமணர்கள் அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், சோகாமேளரின் கடும் விட்டலர் வழிபாட்டினால், அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் பாண்டுரங்க விட்டலர் கோயிலில் சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம், கோயிலில் இருந்த விட்டலர் சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த பழமைவாதிகள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, கோயிலினுள் அவரை செல்ல அனுமதித்தனர்.[3][4]

இதனையும் காண்க[தொகு]

திரைப்படம்[தொகு]

சோகாமேளர் வரலாற்றை தமிழில் சோகாமேளர் எனும் பெயரில் 1942-இல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

நூல்கள்[தொகு]

  • On the Threshold: Songs of Chokhamela, translated from the Marathi by Rohini Mokashi-Punekar.
  • B. R. Ambedkar dedicated his book The Untouchables: Who are They and Why They Became Untouchables to the memory of Chokhamela, Nandanar and Ravidas.*One

Hundred Poems of Mela, translated from Marathi by Chandrakant Kaluram Mhatre. ISBN 978-93-5212-597-5

மேற்கோள்கள்[தொகு]

  1. Eleanor Zelliot (2008). "Chokhamela, His Family and the Marathi Tradition". in Aktor, Mikael; Deliège, Robert. From Stigma to Assertion: Untouchability, Identity and Politics in Early and Modern India. Copenhagen: Museum Tusculanum Press. பக். 76–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8763507757. 
  2. Prasad, Amar Nath (2007). Dalit Literature. பக். 10–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-817-3. 
  3. சோகாமேளர்
  4. Zelliot, Eleanor (1981). "Chokhamela and Eknath: Two Bhakti Modes of Legitimacy for Modern Change". in Lele, Jayant. Tradition and Modernity in Bhakti movements. Leiden: Brill. பக். [https://archive.org/details/traditionmoderni0000unse_j6e8/page/136 136–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004063706. https://archive.org/details/traditionmoderni0000unse_j6e8. 

வெளி இணைப்புகள்[தொகு]