முள்ளஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி கிராமம் நல்லூர் பேரூராட்சியில் 4வது வார்டில் பெரும் பகுதியையும் 3வது வார்டு 8வது வார்டின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது மேற்காக 19 ஏக்கர் அரசு புறம்போக்கு மலவாரம் பொற்றையையும் கிழக்காக மருதங்கோடு ஏலாவையும் தெற்கு பகுதியாக வெள்ளம்கட்டி பனங்கறச்சி ஏலாவையும் வடக்காக ஐரேனிபுரம் முளங்குழி சாலையையும் எல்லையாக கொண்டது. ஐரேனிபுரம் விரிகோடு சாலை முள்ளஞ்சேரி கிராமத்தை இரண்டாக பிரிக்கிறது .

பாரம்பரியம்[தொகு]

நெல்வேலி கிராமம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிலப்பிரபுக்களாகிய தம்புரான்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. தம்புரான் வசிப்பிடமாக நெல்வேலி இருந்தது. மதில் சுவர்களும் பெண்கள் குளிக்க அகழியும் (குளம்) பாதுகாப்பாக அரணும் அமைந்திருந்தது. நெல்வேலி மாகாதேவர் ஆலயம் புராதானமானது தம்புராக்கள் கட்டளைக்கு செயல்பட நாயர் இனத்தவர் இருந்தனர் அவர்கள் தம்புரான்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்பட்டனர். உழைக்கும் மக்கள் தம்புரான்கள் பார்வையில் படுவதோ எதிரே வருவதோ மிகவும் பாவமாகவும் பழியாகவும் கருதப்பட்டன. நெல்வேலி கிழக்கு நெல்வேலி மேற்கு அனைத்துப்பகுதிகளும் தம்புரான்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது வாழும் மக்கள் எல்லாம் பாட்டம் (வருமானத்தில் பங்கு ) அடிப்படையில் வாழ்ந்து வந்தனர் பஞ்சம் பட்டினி நேரத்தில் உழைக்கும் மக்கள் வருமானத்தில் பங்கு கொடுக்க அவதிபட்டு வந்தனர் அதனால் வறுமை மிஞ்சிய வாழ்க்கையே இருந்தது.

முள்ளஞ்சேரி[தொகு]

300 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மறைந்து வாழ்ந்த பகுதிதான் மலவாரம் பொற்றை அடிவாரம் உள்ள முள்ளஞ்சேரி. அடர்ந்த மரங்களும் பனைமரங்களும் வேனில் காலம்வரை ஒழுகும் நீருற்று களும் உள்ள பகுதி முள்ளஞ்சேரி.

குறுக்கும் நெடுக்குமாக நீரோடைகள் இருந்தன. அவைகள் இன்று சாலைகளாக மாறிவிட்டன. பிறமக்கள் தொடர்பு அற்ற வாழ்க்கை நடத்தி வந்தனர். குலதெய்வமாகிய செண்பக வல்லி அம்மன் ஆலயத்தை முன்வைத்து தங்களுடைய ஆரோக்கிய வாழ்க்கை முறை இருந்தது. ஏல்லா செயல்களும் அவள்கருனை என நம்பி வாழ்ந்தனர். எதிரி களிடமிருந்து பாதுகாப்பு நோய்களிலிருந்து பாதுகாப்பு நல்லசெயல்கள் வாழ்க்கை நலன் அனைத்தும் அன்னையின் அருள் என்ற நம்பிக்கை அடிப்படையில் வாழ்ந்தனர்.

செண்பக வல்லி அம்மன் ஆலயம் மிகச்சிறந்த கட்டமைப்போ பரிவாரமோ இல்லை. மண்ணினால் கோயில்கள் பனைஒலையினால் ஆன கூரைகள். மண்ணினால் குயவர்களால் வடிவமைத்த சிலைகள் இதுதான் ஆலயத்தின் தோற்றமாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகைக மாதங்களில் 41 நாட்கள் விளக்கு ஏற்றி முடிவில் கொடை கொண்டாடுவார்கள் கொடைநாளில் பங்காளிகள் உறவினர்கள் அனைவரும் கூடுவாவர்கள் குலை வாழை படையல்கள் குவித்திருப்பர்கள் கமுகுபு தேங்காய் உருக்கிய எண்ணெய் படைத்து வைப்பார்கள் பொங்கலிட்டு படையல் செய்வார்கள் செண்பகவல்லி அம்மன் காக்கும் நீலாம்பிகை சுடலைமாடன் ஸதாபகர் புதம் பெருமாள் காரண கர்த்தா(குலசாவு) முதலியவர்களுக்கு படையல் இடுவார்கள் ஊர் ஒதுக்குப்புறத்தில் கோழிகளை வெட்டி படைப்பார்கள் இப்படி படையல் போடும் நாளில் பெரும்பாலானவர்கள் கள் சாராயம் போன்ற போதையில் இருப்பாகள். பெண்கள் உறவினர்கள் சாமியாடுபவரின் அருள்வாக்குக்காக காத்திருப்பார்கள் அருள்வாக்கு ஒரு சிலருக்கு சொன்னாலோ வழங்கப்படும் எண்ணெய் சிலருக்கு கிடைக்க வில்லை என்றாலோ ரணகளமான யுக்தம் நடக்கும. உறவினர்கள் பெண்கள் சிதறி அடித்து ஓடுவார்கள் மொத்தத்தில் கொடைவிழா அமைதியாக நடைபெறாது. அடுத்த நாள் நேற்று நடந்தவைகள் மறந்து ஒரிரு நாட்களில் ஒற்றுமையாகவும் ஒன்று பட்டும் வாழ்வார்கள். இதுதான் வாழ்க்கை முறை.

தொழில்[தொகு]

பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பனைத்தொழில் அதிகம்செய்து வந்தனர் அது கடின உழைப்பாக இருந்தாலும் தெய்வீகமான தொழிலாகவே கருதிவந்தனர் காலை 4மணிக்கு பனை எற செய்பவர்கள் மதியம் 1மணிவரை பனை ஏறுவார்கள் காலையில் மட்டும் பதனீர் இறக்குவார்கள் வீட்டு தலைவி பிள்ளைகள் ஒவ்வொரு பனைக்கு சென்று பதனீர் கொண்டு வீட்டிற்கு சேர்க்க வேண்டும். மதியம் குளித்து விட்டு உணவருந்தி தூக்கம் போட்டுவிட்டு மீண்டும் 4மணிக்கு பனைமரம் எறி பாளை சீவி பராமரிப்பார்கள. இரவு 9மணிவரை வேலை செய்வார்கள். பகலில் வீடுசேர்த்த பதனீரை வீட்டுதலைவியும் பெண்களும் விறகு சேர்த்து பரந்த தகர பாத்திரத்தில் வைத்து காய்ச்சுவார்கள் மொத்த குடும்ப உழைப்பும் பனைமரத்தை நம்பியே இருக்கும். காய்ச்சி கட்டி ஆக்கிய கருப்புக்கட்டியை சீசன்நாளில் சிறிதளவே விற்பனை செய்து அன்றாட வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள் மீதம் உள்ளவைகளை மழைகாலத்தின் வாழ்வுக்காக சேகரித்து வைப்பார்கள்.

பரண்[தொகு]

கருப்புக்கட்டியை அடுப்பு வைக்கப்பட்ட கட்டிடத்தில் 5அடிக்கு மேல் பரண் அமைத்து சூடுபட பாதுகாத்து வைப்பார்கள் அவைகள் நல்ல விலை வரும்போது விற்பனை செய்வார்கள். ஒரு குடும்பத்தில் தகப்பன் பிள்ளைகள் 2 3 பேர்கள் பனை ஏறினால் செழிப்பானவர்களாக வாழ்வார்கள் இல்லையெனன்றால் வறுமையான வாழ்க்கைதான்.

பயிர்த்தொழில்[தொகு]

மருதங்கோடு ஏலா நெல்வேலி ஏலா நெல் விளைச்சல் உள்ள பகுதி சிலருக்கு மட்டுமே 10 சென்ட் 20 சென்ட் வயல் இருக்கும் இதில் பயிர்த்தொழில் செய்து அறுவடை செய்து பாதுகாத்து கொள்வாகள் குறைந்த நிலப்பரப்புகளே உள்ளன. மரங்கள் இல்லாத பகுதிகளில் மரச்சினி கிழங்கு (மரவள்ளிகிழங்கு)பயிரிடுவார்கள் அதில் உர ஊட்டமும் தண்ணீரும் கிடைப்பதற்காக கத்தரி மிளகு போன்றவைகளை பயிரிடுவார்கள் அதற்கு வேனில் காலங்களில் தண்ணிருக்காக இரட்டைகுளம் மற்றும் மருதங்கோடு ஏலாவில் நீராளி தோண்டி காக்கோட்டடை (பனை ஓலையினால் செய்யப்பட்ட நீர்பிடிக்கும் கலன் ) இரண்டை கம்பினால் கட்டி தோளினால் சுமந்து அதிக தூரம் உள்ள பயிர்களை பாதுகாத்து வந்து வருமானம் வந்தனர். மரச்சினி கிழங்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதில்லை விவசாயம் குன்றியகாலங்களில் வேனில் காலங்களில் உணவுத் தேவைக்காக அதைத் தோல் நீக்கி துண்டு துண்டாக வெட்டி பாறைகளில் போட்டு உலர வைப்பார்கள் எல்லோர்வீட்டிலும் ஒரு குதிர் இருக்கும் அதற்கு பத்தாயம் (பற்றாயம்) என்று பெயர். அந்த குதிருக்குள் சேர்த்து வைப்பார்கள். விளைச்சல் முடிந்த பின் வயலில் பூசணி கத்தரி வெண்டை வெள்ளரி மிளகாய் போன்றவை பயிரிடுவார்கள. கத்தரி வெண்டை வெள்ளரி மிளகாய் போன்றவை செவ்வாய் வெள்ளி சந்தையில் விற்பார்கள் பூசணி அதிகம் விளைச்சல் கொடுக்கும் அதை விளைச்ல் இல்லாத காலங்களில் விற்பதற்காக சேர்த்து வைப்பார்கள்.உலர்ந்த கிழங்கு குதிருக்குள்ளும் கருப்புகட்டி பரணிலும் பூசணிக்காய் வீட்டின் உள்பகுதியல் உழைக்கும் வாக்கத்தின் வீடுகளில் அதிகமாக இருக்கும். திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கும் பகுதி தூக்கம் போகும்.

உணவு முறை[தொகு]

அரிசி எட்டாக்கனியாக இருந்தாலும் சேர்த்து வைத்த நெல்மணிகள் தீரும் வரை சாப்பிடுவார்கள் தானியங்கள் பயிறு கொள்ளு (காணம்) துவரம் காய் முதலியவை மாலை நேரத்திற்கு ஈடு கொடுக்கும். பல குடும்பங்கள் நெல்அரிசி சோறாக சாப்பிட முடியாது. மதியம் வேளையில் கஞ்சியாகவே குடிப்பார்கள் 10,12 குடும்ப அங்கத்தினர்களுக்கு மண்கலனில் நிரப்ப வேண்டும். பயறு உழுந்து முதலியவை போட்டு கஞ்சியாகவே குடிப்பார்கள் அவித்த கிழங்கு மஞ்சள் உப்பு மிளாய் போட்டு இடித்து பதமாக்கிக் வைத்திரப்பார்கள். அந்தக் கஞ்சியில் போட்டு பிசைந்து குடிப்பார்கள் இரவு நேர சோறு கிழங்கு மீன் குழம்பாக வைத்து சாப்பிடுவார்கள். அது அதிக பலன் உடையதாக கருதுவார்கள. காலை பழைய சோறு முந்தைய நாள் மீன் குழம்புடன் சாப்பிடுவார்கள். பால் சில குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும் கருப்புக்கட்டி சுக்கு காப்பி அலுப்பை போக்கும் பானமாக சாப்பிட்டு வந்தார்கள்.

வைத்தியம்[தொகு]

உழைக்கும் மக்களுக்கு உழக்கு கூட மிஞ்சாது. வறுமை பஞ்சம் ஏற்படும் காலங்களில் மிகவும் கஷ்டப்படுவார்கள் பனைத் தொழில் ஆபத்தான தொழில் எப்போது விபத்து ஏற்படும் என்று சொல்ல முடியாது. அந்தக்காலங்களில் பாரம்பரிய தம்புரான்களுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியர்கள் பாமரர்களுக்கு சிகிச்சை செய்ய முன் வர மாட்டார்கள். நம்பிக்கை அடிப்படையில் வைத்தியம் செய்யும் அடிப்படை அறிவில்லாதவர்களே சிகிச்சை செய்வார்கள். பிரசவம் மிகவும் கொடுமையானது. புழைத்துக் கொண்டால் பாக்கியம் என்ற முறையில் தான் இருக்கும் மருத்துவச்சி என்ற மூதாட்டி தான் பிரசவம் பார்ப்பாள். பெண் பிற்ந்தது என்றால் மிகவும் வருத்தப்படுவார்கள் நோய் ஏற்பட்டது என்றால் மாந்தரிகம் விபுதி போடுதலும் தான் முக்கிய பங்கு வகிக்கும் சுக்கு கசாயம் தான் முக்கிய மருந்து கல்வி என்பது எட்டாக்கனி குருகுலக்கல்வியும் இல்லை அதற்கான ஆயத்தமும் இல்லை நாகரிகம் தோன்றிய காலங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கூட கல்வியை பாகற்காயாகத்தான் பார்த்தார்கள் ஏன் என்றால் பனைத்தொழில் செய்தால் குடும்பம் வறுமையின்றி வாழம் என்பதால் பனைத்தொழில் செய்பவர்க்கே பெண்கொடுக்கவும் செய்வார்கள் பெண்களும் விரும்புவார்கள்.

விடுதலை[தொகு]

குமரிமாவட்ட விடுதலை 1956க்கு பின் சமூக்ப்புரட்சி ஏற்பட்டது. அதற்காக போராடும் உணர்வு ஏற்பட்டது. இளைஞர்களும் சக்தி பெறத் தொடங்கினார்கள். தம்புரானகள் பிடி தளர்ந்து அவர்கள் இடத்தை விட்டு நகரத் தொடங்கினார்கள் ஆண்டு அனுபவித்த சொத்துக்களை அந்தந்த பகுதி மக்களுக்கு விலையாக கொடுக்க எத்தனித்தார்கள் அதனால் வாழ்விடம் எல்லாம் விலை கொடுத்து உரிமை பெற்றனர்.

பஞ்சாயத்து[தொகு]

பஞ்சாயத்து அமைப்புகள் 1958 காலகட்டங்களில் கால்பதிக்க தொடங்கின கிள்ளியுர் ஊராட்சி ஒன்றித்தின் கீழ் பஞ்சாயத்துகள் நெல்வேலி முளங்குழி என்ற வார்டு உறுப்பினாகள் முறையில் இருந்தது. நெல்வேலி உறுப்பினராக முள்ளஞ்சேரி திரு.சாமி உறுப்பினராக இருந்ததால் மிகவும் பிரபலமானார். முள்ளஞ்சேரியில் பிறந்த திரு.சாமி அக்கால கட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றவர் முள்ளஞ்சுரி என்ற பகுதியை வெளி உலகுக்கு தெரிவித்தவர்களில் முதலானவா. பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தினர். காமராஜர் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்ததல் பள்ளிகூடங்களுக்கு குழந்தைகளை அனுப்பும் பணிகள் போன்ற பணிகளை செய்தார். காண்ட்ராகட் பணிகளில் ஈடுபட்டதால் பெருத்த நஷ்டங்ளும் கஷ்டங்களும் ஏற்பட்டு மதுபழக்கம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு தன்னை பாழ்படுத்திக்கொண்டார்.

சமூகசீரழிவு[தொகு]

தொழில்களில் சிரமம் கஷ்டம் நோய் விபத்து போன்றவைகளில் ஆட்பட்ட மக்களில் சிலர் கள் விற்பதிலும் சாராயம் விற்பதிலும் ஈடுபட்டனர் இவைகள் அதிக வருமானம் கொடுப்பதால் தொடர்ந்து பலர் அந்த தொழிலில் ஈடுபடத்தொடங்கினார்கள் குடும்ப கௌரவம் சட்டம் முதலிய வற்றிற்கு மதிப்பளித்தவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள்

சாராயம் காய்சும் தொழில் மிகவும் பிரபல மடைந்து இளைஞர்களும் ஈடுபடத் தொடங்கினார்கள் போலீஸ் கட்டுபடுத்துவதும் காவல் செய்து ஊக்கப்படுத்துவதுமாக இருந்தது. கிடைக்கும் வருமானம் கோர்ட்டு வழக்குமாக செலவழித்து சீரழிந்தார்கள் புலி வால் பிடித்த கதையாக விட முடியாமல் வாழவும் முடியாமல் தத்தளித்தார்கள்.

கல்வி[தொகு]

ஆரம்பக்கல்வி முளங்குழி அரசு தொடக்கப்பள்ளியில் உயர்நிலைக்கல்வி ஐரேனிபுரம் வாசுதேவ விலாசம் உயர்நிலை பள்ளியும் மார்தாண்டம் அரசு உயர்நிலை பள்ளியமாக இருந்தன.

காமராஜர்[தொகு]

1969 இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காமராஜர் முள்ளஞ்சேரி வந்திருந்தார் 11 வயது சிறுவனாக இருந்த முள்ளஞ்சேரி வேலையன் காமராஜருக்கு மாலை போட்டு வரவேற்றார். உயர்நிலை கல்விக்கு எட்டக் கூடிய இளைஞர்கள் உருவான காலகட்டம் அதற்கு பின் உருவானது ஒரிரு நபர் மட்டுமே 11 வது வகுப்பை எட்டினார்கள் அவர்கள் பேருந்து நடத்துனர் ராணுவம் போன்ற பணியை எட்டினர்.

முள்ளஞ்சேரி ஸ்ரீகிருஷ்ணன் ஆலயம்[தொகு]

புராதன செண்பகவல்லி அம்மன் ஆலயம் இருந்தாலும் 1970 ஆண்டு கிருஷ்ணன் கோவில் ஏற்பட்ட பிறகுதான் முள்ளஞ்சேரி கிராமம் புத்துணர்வு பெற்றது. அதுசுவையான சம்பவம். கோவிலை முன் வைத்து தான் மக்கள் வாழ்க்கை முறை இருந்தது பங்காளிகள் சண்டை போட்டால் தனக்கென ஒரு கோவிலை கட்டிக் கொள்வார்கள்.

கார்த்திகை மாதத்தில் பஜனை பாடுவது என்பது தொடங்கியதே திரு.குஞ்சு மல்லன் என்பவர் சிந்தனையினால் 1967 வாக்கில் அவருக்கு சொந்தமான இடத்தில் கிருஷ்ணன் ஆலயம் அமைத்து இளைஞர்களை கூட்டி பஜனை பாடத் தொடங்கினார். திருவிழாக்கள் கூட நடைபெறும் சப்பரபவனி உறிவிளையாடல் போன்றவையும் நடக்கும். ஒலிப்பெருக்கி கூட இருக்கும். அது பெட்ரோலால் இயங்கும் ஜெனரேட்டரால் இயங்கும். குமிழ் விளக்குகள் ஒளி அதிசயம் போல் இருக்கும. ஏன் என்றால் 1972 தான் முள்ளஞ்சேரி பகுதிக்கு மின்சாரமே வந்தது. திருவிழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் சூளுரைத்து புறப்பட்டு இரவோடு இரவாக முள்புதர்களை அகற்றி இரண்டு ஓடுகளை வைத்து விளக்கேற்றி பஜனை தொடங்கி விட்டார்கள் அப்போதைய 16 வயது 20 வயது வரையிலான இளைஞர்கள். இதன் வளர்ச்சி படிப்படியாக வளர்ந்த போது திரு குஞ்சுமல்லன் நடத்திய ஆலயம் கைவிடப்பட்டது.

41 நாட்கள் ஊர் பஜனை பாடுவார்கள் கடைசி நாளில் சப்பரபவனி நடைபெறும் இரவு ஹரிகதை இசைத்தட்டு நடனம் நடக்கும. மறுநாள் காலை வரை சப்பரபவனி உறிவிளையாடல் நடக்கும். உறிவிளையாடுபவர் கிருஷ்ணன் வேடம் அணிந்திருப்பார் வாத்தியத்துக்கு ஏற்ற இசை அசைவுகளுடன் விளையாடுவார். உறிபிடிப்பவர் விடாமல் கடைசி வரை ஆட்ட வைப்பா. திரளான மக்கள் கூடுவா. பொழது போக்கு வசதிக்காக சினிமாவுகுசெல்ல வேண்டுமானால் மார்த்தாண்டம் செல்ல வேண்டும். இளைஞர்கள் மட்டுமே செல்ல முடியும். உழைக்கும் வர்க்கத்திற்கு நேரம் இருக்காது ஊர் திருவிழாவுக்கு பெரும் கூட்டம் கூடும்.

கம்புக்களியல்[தொகு]

1972 ஆம் ஆண்டு லெச்சுமணன் ஆசானிடம் கம்புக்களியல் என்ற விளையாட்டு முறையை கற்றார்கள் 8 பேர் நின்று விளையாட வேண்டும். கையில் இரண்டு குறு கம்பு வைத்திருப்பார்கள் 4 பேர் பாடல் பாடுவார்கள் தாளம் ஒருவர் இசைப்பார். தாளத்துக்கும் பாட்டுக்கும் ஏற்ப 8 பேரும் முறைதவறாமல் விளையாடுவார்கள் ஒருவர் தவறினால் விளையாட்டு நின்று விடும். இது ஒரு சிறந்த கலை விருந்தாக அமைந்தது. இதனால் பிரபலம் அடைந்து பல ஊர்களில் திருவிழாக்களுக்கு அழைப்பார்கள். கூட்டத்தினரை கவரும் வண்ணம் சிறப்பாக விளையாடி பாராட்டை பெறுவார்கள். இதனால் முள்ளஞ்சேரி கிராமம் பக்கத்து ஊர்களியல் பிரபலமானது. அப்போதைய அணியில் மிக இளம் வயதினராக முள்ளஞ்சேரி வேலையன் இருந்தார்.

நாடகக் கலை[தொகு]

1974 நாடகக் கலை தோன்றியது ஆலயவிழாவில் நாடகம் நடத்த வேண்டும் என்ற சிந்தனையின் ஒட்டத்தில் அந்தக்காலத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான திரு.தங்க நாடார் எழுதி வெளியுர்அனுபவங்களும் பழைய திரைபடங்களையும் பார்த்த அனுபவம் கொண்ட திரு.கோபாலன் இயக்கத்தில் நகைச்சுவை எழுதும் ஆற்றல் பெற்ற அன்றைய புலவர் படிப்புக்கு ஆயத்தமாகி கொண்ட சிவராகவன் முனைப்பும் நாடகம் அமைய இருந்தன. சிறுவனாக இருந்த முள்ளஞ்சேரி வேலையன் .மு. வேலையனுக்கு கிழவி வேடம் கிடைத்தது.

முள்ளஞ்சேரியும் மு.வேலையனும்[தொகு]

கல்வியில் கிராமத்த எல்லா சிறுவர்களை போல் இருந்தலும் மனதில் ஏற்படும் சிந்தனைகளை பதித்து கொண்டவர் ஊர் மக்கள் தொழில் சிரமங்கள் முதலியவைகளை மனதில் பதித்து காரணம் தேடி தீர்வு காண முனைந்தவர் 13 வயதில் கம்புக் களியல் கற்றவர். சிறுவயதில் நாடகத்தில் ஏற்பட்ட தாக்கம் தன்னை 17 வயதிலேய நாடக எழுத்தாளனாக மாற்றிது. தாய்மேல் ஆணை என்ற நாடகம் அரச நாடகமாக இருந்தாலும் அவலங்களை எடுத்த கூறியது சிறுவன் எழுதிய நாடகம் என்பதால் மிகுந்த போராட்டத்திற்குபின்தான் ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து. சமூக சீர்திருத்த நாடகம் அரச நாடகங்கள் புராண நாடகங்கள் என 20 மேற்பட்ட நாடகங்களை முத்திரை பதித்தவர் தனது ஊர் பிரபலமாக வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவர் 11 வயதில் பெருந்தலைவர் காமராஜருக்கு மாலையிட்டு வரவேற்றார். சாமிநாடார் அவர்களுக்கு ஊர்பிரச்சினைகளுக்கான மனு எழுதிக்கொடுப்தும் சமூக தாக்கங்களாக பதிந்தன. நாடகம் எழுதும் தாக்கத்தை பழைய சினிமா படம் பார்த்தும் கலைஞர் எழுதிய வசனங்களை படித்தம் சிந்தனை மலர்ந்ததது கல்லூரி படிக்கும் போது நாடகத்தாக்கத்தால் தொடர்ந்து படிக்க மனம் இல்லாமல் இருந்த நிலையில் வாழ்க்கைக்காக தொழில் பட்டையபடிப்பு படித்து இயந்திர பட வரைவாளரக அரசு பணியாளர் ஆனார் சென்னை சென்று கம்பெனிகளில் பணிபுரிந்தார். சென்னையில் இருக்கும் போது ஊர்மக்கள கோவில நாடகம் என்ற நாட்டத்தால் ஊரில் வந்தார் 1984 இல் படவரைவயளர் பணியல் சேர்ந்தா பணியினால் குடும்ப வளாச்சி பொருளாதாரம் குடும்பவளர்ச்சி ஏற்பட்டது பல்முகசிந்தனை கொண்ட இவரால் பணி நேரம் போக தான் பிறந்த மண்ணுக்கும் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற விரும்பினார் கோவில் விழாக்களில் இளைஞர்கள் வளர்ச்சி குழந்தைகள் நலன் மகளீர் ஒருங்கிணைப்பு முதலியவைகளில் கவனம் செலுத்தினார். மேடைகளில் பேசுதல் பேசவைத்தல் பல்துறை பேச்சாளர்களை உருவாக்குதல் குழந்தைகளுக்கு சமயக்கல்வி பெண்களுக்கு திருவிளக்குபுஜை முதலியவைகளை ஏற்படுத்த முனைந்திருந்தார் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார் அதன் தொடாச்ச் பரிணாமம் பெற்று சிறப்புடன் சிறந்த விளங்கி வருகிறது.

சமூக ஈடுபாடு: ஊர்முன்னேற்றத்திற்கு அமைப்பு ஒன்று எற்படவேண்டும் என்று பெரியார்கள் இளைஞர்கள் மகளிர்கள் கூட்டி கிராம மக்கள் மன்றம் என்ற ஏற்படுத்தினார்.அரசு பணியாளர் என்பதால் பொறுப்பாளர்கள் பிறரை வைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார் கிராமத்திற்கு சாலை மேம்பாடு பஸ் வசதி சுயதொழில் இளைஞர் நலன் முதலியவைகளை முன் வைத்து பணிகள் செய்ததார். யாரிடமும் நன்கொடை பெறாமல் செர்ந்த செலவிலேயே பணிகள் செய்தார் அதற்காக சொந்த வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்து வருகிறா. முள்ளஞ்சேரி சாலை மேம்பாடு முதல்பணியாக இருந்தது ஊர்மக்களைத் திரட்டி பணி செய்தனர் கொல்லக்குடி விளை சாலை அடுத்த கட்டமாக இருந்தது. குடிநீர்வசதிக்காக நிறுவனங்களை அழைத்து குழாய்கிணறு அமைக்க முயன்றார் சுகாதார மேம்பாடுக்காக திட்டங்களை தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அமைக்க வைத்தார்.

எழுத்தறிவுப் பணி: ஓன்பது வார்டுகளை முன் வைத்து பணிகள் செய்து எழுத்தறிவு இல்லாதவர்களை குறைந்த பட்சம் கையெழுத்து போட வேண்டும் என்ற நோக்கோடு 950 பேர்களுக்கு முகாம் அமைத்து எழுத்தறிவு வழங்கப் பட்டது. 1988 ஆம் காலகட்டத்தில் ஒரு புரட்சி ஆகும். அப்போது அறிவொளி திட்டம் தொடங்கப் படவில்லை என்பது சிறப்பு. முடியும் நாளில் கரவிளாகம் முதல் இலவுவிளை வரை பெண்கள் சிறுவர்கள் இளைஞர்களை திரட்டி கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்தப் பட்டது. இந்த எழுத்தறிவுப் பணியை கொல்லங்கோடு ஆசிரியர் பயிற்சி மாணவிகளைக் கொண்டு நடத்தப் பட்டது.

தொழில் பயிற்சி: தையல் பயிற்சி நிலையம் அமைக்கப் பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. வீட்டுப் பெண்களுக்கு கயிறுத்தொழில் நடத்தப் பட்டது. இளைஞர்கள் தொழில் கல்வி பெற தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ரேடீயோ டிவி பயிற்சி நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப் பட்டது. வருடந்தோறும் விளையாட்டு விழா வருடந்தோறும் சுதந்திர தினவிழா குடியரசு தினவிழா சத்பவனநிவாஸ் (நல்லிணக்க விழா) இந்திப் பயிற்சி பாலர் பள்ளி மாதந்தோறும் அடிப்படை சட்டப் பயிற்சி இடைவிடாது சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகள் கலெட்டர்கள் அரசு ஊழியர்கள் பேராசிரியர்கள் மருத்துவர்கள் முள்ளஞ்சேரி நிகழ்ச்சிகளுக்கு வருகை தருவார்கள். மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் கவிதைப் போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் நடனப் போட்டிகள் சிறப்பாக நடைபெறும். இடைவிடாத செயல்பாடுகளால் முள்ளஞ்சேரி கல்வித்திறன் தொழில் முதலியவைகளில் வளர்ச்சி அதிகரித்தது. வளர்ச்சியின் சீர் கேட்டிற்கு முக்கிய காரணம் சாராயம் காய்ச்சுதல் என்பதை உணர்ந்து போலீஸ் பொதுமக்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வுஏற்படுத்தி சாராயம் காய்ச்சுதலைக் கைவிடுபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம். வழங்கப்பட்டது சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஊர்மக்களைக் கொண்டு விழிப்புணர்வு உண்ணாவிரதம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது.

மருத்துவ முகாம்கள்: இலவச மருத்துவ முகாம்கள் கண் மருத்துவ முகாம்கள் கிராம சேவை முகாம் முதியோர் உதவித் தொகை பெற்றுக் கொடுத்தல் ஆதரவற்றோருக்கு உதவுதல் ஏழைப் பெண்கள் திருமண திட்டம் முதலியவற்றை பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகள் சிறப்புடன் செய்யப் பட்டன. படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு எட்டாவது வகுப்பு தேர்வு எழுத பாடம் நடத்தி தேர்வு எழுத ஊக்குவித்தல் படிப்பகம் நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளால் சிறப்புற்றன. மக்கள் பணிசெய்யும் போது பயனாளிகள் யாரும் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்கிறார்கள் என உணர்ந்து கொள்வதில்லை. அதனால் வந்த எதிர்ப்புகளும் தொல்லைகளும் ஏராளம். சுராய தொழில் செய்து வருபவர்களை பாதுகாத்து பலன் கண்டவர்களின் நெருக்கடிகள் மிகவும் காயப் படுத்தின. இதனால் பொருளாதார நஷ்டமும் மன உழைச்சலும் ஏற்பட்டன. வுழ்க்கைக்கு உத்தரவாதமான பணிக்கே வேட்டு வைக்கவும் தாக்கவும் முயன்றனர். பணியிடத்தில் பண்பான நடத்தையும் நேரம் தவறாமையும் நேர்மையும் உழைப்பும் பாதுகாத்தன. சமூக பாதுகாப்பும் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு என்.டென்னீஸ் அவர்களின் பாதுகாப்புதான் பக்க பலமாயிருந்தது.

முள்ளஞ்சேரி கிராமம் புரண மது பெற்ற கிராமம்: முள்ளஞ்சேரி கிராமம் புரண மது பெற்ற கிராமமாக மாறியது. கல்விபொருளாதாரம் ஆரோக்கியம் முதலியவைகளில் மாற்றம் ஏற்பட்டன. பொருளாதார வளர்ச்சிக்குப் பின் கிராம கயிறு தொழில்கள் கைவிடப் பட்டன. பெண்கல்வி கல்வி உயர்ந்ததால் தையல் பயிற்சி நலிவுற்றது. மெட்ரிக் பள்ளிகளின் தாக்கம் பாலர் கல்வி கைவிடப் பட்டது. அறிவுத்திறன் மேம்பாடும் சுயஉதவிக் குழுக்களின் வருகையும் பஞ்சாயத்து அமைப்புகளின் பணியும் உள்ளதால் தன்னார்வப் பணியின் தேவைகள் குறைந்துள்ளன. வளர்ச்சியின் வேகம் சிறந்த வீடுகளும் தனிநபர் வருமானமும் பெருகி உள்ளன. தச்சுத் தொழில் பட்டறைத் தொழில் கொத்தனார் வேலை அடிப்படை மக்களுக்கு ஆதாயம் கொடுக்கின்றன. போக்குவரத்து வாகனங்களும் தொழில் கடன்கள் படிப்புக் கடன்கள் பெறுவதில் தன்னிச்சையாக பெறும் வாய்ப்புகள் பெற்றுள்ளன. ஒழுக்கம் நல்லபழக்க வழக்கங்கள் முதலியவைகளில் இளைஞர்களை வழிகாட்ட வேண்டியது சமூக கடமையாக உள்ளது. படிப்பகம் நலிவுற்ற போது இளைஞர்கள் புத்துணர்வு பெற்று பராமரித்து புதுப்பித்து நடத்தி வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளஞ்சேரி&oldid=2764747" இலிருந்து மீள்விக்கப்பட்டது