மகிந்த யாப்பா அபேவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிந்த யாப்பா அபேவர்தன
Mahinda Yapa Abeywardana
21-வது நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 ஆகத்து 2020
Deputyரஞ்சித் சியம்பலாபிட்டிய
முன்னையவர்கரு ஜயசூரிய
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
பெப்ரவரி 2015 – மே 2015
முன்னையவர்சுமேதா ஜயசேன
பின்னவர்லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
விவசாய அமைச்சர்
பதவியில்
2010 – 12 சனவரி 2015
முன்னையவர்மைத்திரிபால சிறிசேன
பின்னவர்துமிந்த திசாநாயக்க
கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
2005–2010
முன்னையவர்விஜித ஹேரத்
சுகாதாரநல, சத்துணவுத்திட்ட துணை அமைச்சர்
பதவியில்
2004–2005
முன்னையவர்சஜித் பிரேமதாச
தெற்கு மாகாண முதலமைச்சர்
பதவியில்
1994–2001
முன்னையவர்அமரசிறி தொடங்கொட
பின்னவர்எச். ஜி. சிறிசேன
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 அக்டோபர் 1945 (1945-10-10) (அகவை 78)
பேரகமை, மாத்தறை
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை பொதுசன முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
பிள்ளைகள்5
முன்னாள் கல்லூரிகொழும்புப் பல்கலைக்கழகம், மாத்தறை இராகுல கல்லூரி, தெலிஜவில மத்திய கல்லூரி
வேலைவணிகர்
தொழில்அரசியல்வாதி

மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena; பிறப்பு: அக்டோபர் 10, 1945) இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1] இவர் முதல் தடவையாக 1983 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாத்தறை, அக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

மகிந்த யாப்பா அபேவர்தனா 1987 இல் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை வெளிப்படையாக எதிர்த்தார். இந்த ஒப்பந்தத்திற்கெதிராக நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தார். இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கினார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் இவரும் இணைந்தார். இக்கட்சியின் சார்பாக இவர் தெற்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1993 இல் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். 1994 இல் தெற்கு மாகாணசபையின் முதலமைச்சரானார். இரு தடவைகள் இவர் முதலமைச்சராக 1994 முதல் 2001 வரை பதவியில் இருந்தார்.

2001 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 2004 வரை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும், பின்னர் கலாச்சார அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

2010 தேர்தல் வெற்றியின் பின்னர் இவர் விவசாய அமைச்சரானார். இவர் அமைச்சராக இருக்கும் போது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துணைத் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராக நாடாளுமன்றத்தின் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • "MAHINDA YAPA ABEYWARDENA". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.
  • மஹிந்த யாப்பா அபேவர்தன பரணிடப்பட்டது 2009-03-12 at the வந்தவழி இயந்திரம்
  1. "New Speaker of Parliament appointed". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_யாப்பா_அபேவர்தன&oldid=3915599" இலிருந்து மீள்விக்கப்பட்டது