இராபர்ட் கோலெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட் கோலெட், அண். 1896

இராபர்ட் கோலெட் (Robert Collett; திசம்பர், 2, 1842 - சனவரி, 27, 1913) நார்வேயைச் சார்ந்த விலங்கியலாளர் ஆவார். கோலெட் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில்[1] உள்ள அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் காப்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் நார்வே நாட்டின் தற்பொழுது ஓஸ்லோ எனப்படும் கிறிஸ்டியானா நகரில் பிறந்தார். பேராசிரியர் பீட்டர் ஜோனாஸ் கோலெட் (1813-51), காமிலா கோலெட்டின் (1813-95) தம்பதியரின் மூத்த மகனாவார். இவரது தாய்வழி மாமா ஜோஜப் பெர்னாட்ஸ் வெர்ஜிலாண்ட் மற்றும் ஹென்றிக் வெர்ஜிலாண்ட் ஆவார்கள். இவரது தந்தைவழி மாமா பீட்டர் செவரின் ஸ்டீன்ஸ்டரப் ஆவார். ராபர்ட் கோலெட்டுடன் உடன் பிறந்தவர்கள் மூவர். அவர்களுள் ஒருவர் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான அல்ப் கோலெட் ஆவார். கோலெட் திருமணமாகாதவராகத் தனது அறிவியல் பணியினைத் தொடர்ந்தார்.[2][3][4][5]

லில்லிஹெமரில் உள்ள இலத்தின் பள்ளியில் கல்வியினைத் தொடர்ந்தார். இவர் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராவார். 1864 முதல் விலங்கியல் அருங்காட்சியகக் காப்பாளராக பணியாற்றினார். 1982ல் அதன் இயக்குநராகவும், பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். இவரது ஆய்வின் சிறப்புப் பிரிவு முதுகெலும்பு உள்ள விலங்குகள், குறிப்பாக மீன்கள் ஆகும். இவர் சிலந்தி, மீன்கள் உள்ளிட்ட பல புதிய விலங்கள் குறித்து விவரித்துள்ளார்.[6][7]

இவர் நார்வே நாட்டு பாலூட்டிகள் குறித்து எழுதிய புத்தகமான 'நோர்ஜஸ் பட்டேடிர்', ஒரு சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. விலங்கு முழுமைத்தொகுதியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்ய சார்லஸ் எல்டனைத் தூண்டிய நூலாக இது விளங்குகிறது. சிறிய கொறிவிலங்கான லெமிங்கில் இயற்கைச் சமநிலைக் கோட்பாட்டினை விவாதத்திற்கு உள்ளாக்கச் செய்தது.[8]

டீனோட்டஸ் கோலெட்டி, சூடெசிஸ் கோலெட்டி எனும் இரண்டு ஊர்வன இவரை போற்றும் விதமாகப் பெயரிடப்பட்டுள்ளன.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arne Semb-Johansson. "Robert Collett". Norsk biografisk leksikon. பார்க்கப்பட்ட நாள் January 1, 2017.
  2. Robert Collett University of Oslo
  3. Sigurd Aa. AarnesKristin Ørjasæter. "Jonas Collett - 2". Norsk biografisk leksikon. பார்க்கப்பட்ட நாள் January 1, 2017.
  4. Kristin Ørjasæter. "Camilla Collett". Norsk biografisk leksikon. பார்க்கப்பட்ட நாள் January 1, 2017.
  5. Terje Bratberg. "Alf Collett, Jurist, Historiker, Genealog". Norsk biografisk leksikon. பார்க்கப்பட்ட நாள் January 1, 2017.
  6. Collett, R. (1879). "On a new Fish of the Genus Lycodes from the Pacific.". Proceedings of the Zoological Society of London 47: 381–382. doi:10.1111/j.1096-3642.1879.tb02667.x. 
  7. "Robert Collett". Store norske leksikon. அணுகப்பட்டது January 1, 2017. 
  8. Stenseth NC (1995). "The long-term study of voles, mice and lemmings: homage to Robert Collett". Trends Ecol. Evol. 10 (12): 512. doi:10.1016/s0169-5347(00)89218-6. பப்மெட்:21237126. https://archive.org/details/sim_trends-in-ecology-evolution_1995_10_12/page/512. 
  9. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. ("Collett", p. 56).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_கோலெட்&oldid=3761267" இலிருந்து மீள்விக்கப்பட்டது