எம்ப்ராந்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ப்ராந்தி-துளு பிராமணர்களின் தலைவர் மத்துவர்

எம்ப்ராந்திரி (Embrandiri) என்பவர்கள் துளு வம்சாவளியைச் சேர்ந்த மலையாளி பிராமணத் துணைக்குழு ஆகும்.

இவர்கள் துளு நாட்டிலிருந்து ( கர்நாடகாவில் இன்றைய உடுப்பி ) கேரளாவுக்கு குடிபெயர்ந்தார்கள். கேரளாவில் குடியேறியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்னும் துளுவை தாய்மொழியாகப் பேசுகிறார்கள். மேலும் துளு பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இவர்களின் சில பிரிவுகள் கேரளாவுக்கு வந்தபின் மலையாளி பிராமண குடும்பப் பெயர்களான "நம்பூதிரி" மற்றும் "பொற்றி" ஆகியவற்றை ஏற்றுக்கொண்டன. இவர்கள் வைணவத்தை பின்பற்றுபவர்கள். இவர்களின் வைணவ தர்மத்தின் காரணமாக இவர்கள் முக்கியமாக விஷ்ணு கோயில்கள், கிருட்டிணர் கோயில்கள் மற்றும் யாகங்களில் மற்ற கடவுள்களை விட அதிகமாக சேவை செய்கிறார்கள்.

வரலாறு[தொகு]

கி.பி 1238–1317 காலப்பகுதியில் துளு நாட்டில் உள்ள சில பிராமணர்களின் குடும்பங்கள் தங்கள் ஆன்மீகத் தலைவரான மத்துவாச்சாரியரைப் பின்பற்றத் தொடங்கின. இவர்கள் சில குழுக்களை உருவாக்கி அவரது கருத்துக்களை பின்பற்றினர். பின்னர் அவர்கள் துளு பிராமணர்கள் அல்லது எம்ப்ராந்திரி என அழைக்கப்பட்டார்கள். மத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் சமூகம் வைணவத்தை கடுமையாக பின்பற்றியது. இவர்கள் கோயில்களில் விஷ்ணு பூஜைகள் மற்றும் யாகங்களை செய்தனர். வேதங்கள் மற்றும் மந்திரங்களில் பரந்த அறிவின் காரணமாக யாகங்களில் நிபுணத்துவம் பெற்றனர்.

மத்துவர், ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தையும், இராமானுசரின்விசிட்டாத்வைத போதனைகளையும் விமர்சித்தார். வங்காளம், வாரணாசி, துவாரகை, கோவா மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று, தத்துவ விவாதங்களில் ஈடுபட்டார். இந்துக்கள் கற்கும் மையங்களைப் பார்வையிட்டார். கி.பி 1285 இல் குசராத்தின் துவாரகையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிலையுடன் உடுப்பி கிருட்டிணன் மடத்தை நிறுவினார். அதன்பிறகு உடுப்பி கிருட்டிணன் இவர்களின் பிரதான கடவுளாகவும், மத்துவரின் உடுப்பி கிருட்டிண மடம் இவர்களின் தலைநகராகவும் ஆனது.

உடுப்பி, மத்துவரால் நிறுவப்பட்ட கிருட்டிணன் கோயில்

கலாச்சாரம்[தொகு]

இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரம், இவர்களுக்கு கலாச்சார மையம் அல்லது புனித இடமாகும். முக்கிய பகுதி ஒரு வாழ்க்கை ஆசிரமத்தை ஒத்திருக்கிறது. அன்றாட பக்தி மற்றும் வாழ்க்கைக்கான புனித இடமாக இருக்கிறது. கிருட்டிண மடத்தைச் சுற்றி பல கோயில்கள் உள்ளன. அதாவது 1,000 ஆண்டுகளுக்கு மேலான உடுப்பி அனந்தேசுவரர் கோயில் மத்துவரால் நிறுவப்பட்டது. கிருட்டிண மடம் 13 ஆம் நிறுவப்பட்டது.

தற்போதைய நாள்[தொகு]

பிரிட்டிசு இராச்சியத்தின் காலங்களில் இவர்களில் பல குடும்பங்கள் உடுப்பியில் இருந்து இந்தியாவின் பல இடங்களுக்கு சென்றன. கேரள பிராமணர்களின் (நம்பூதிரி) கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்தன. அவர்கள் கேரளாவின் பல இடங்களுக்குச் சென்று மங்களை நிறுவினர். பின்னர் அவர்கள் மடத்தை தங்கள் குடும்பப் பெயராகப் பயன்படுத்தினர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்ப்ராந்திரி&oldid=3022364" இலிருந்து மீள்விக்கப்பட்டது