புனித மேரி தேவாலயம், அதிரம்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மேரி தேவாலயம், அதிரம்புழா 2013 சூன்

புனித மேரி தேவாலயம் (st mary's church athirampuzha) என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள அதிரம்புழாவில் அமைந்துள்ள ஒரு கிருத்துவ தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் கி.பி. 835 ஆம் ஆண்டு கட்டபட்டதாக கருதப்படுகிறது. பின்னர் 1874 இல் புதுப்பிக்கபட்டது. இங்கு புனித செபாஸ்டியனை சிறப்பிக்கும் ஆண்டு விழாவின்போது நடக்கும் வாண வேடிக்கை, விளக்கு அலங்காரம் போன்றவை சிறப்பாக இருக்கும். இந்த விருந்து விழாவில் தங்க வில், அம்புகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]