இரண்டாம் மன்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் மன் சிங்
ஜெய்பூரின் மகாராஜா
இரண்டாம் மன் சிங் தனது சிறு வயதில்
ஜெய்பூரின் மகாராஜா 17ஆவது மகாராஜா
ஆட்சி1922 – 1948
முடிசூட்டு விழா18 செப்டம்பர் 1922
முன்னிருந்தவர்இரண்டாம் சவாய் மாதோ சிங்
பின்வந்தவர்சாவாய் பவானி சிங்
பதவிக் காலம்1948 – 1970
மனைவிகள்மகாராணி மருதர் கன்வர், மகாராணி கிசோர் கன்வர், காயத்திரி தேவி
வாரிசு(கள்)பிரேம் குமாரி சிங்
சவாய் பவானி சிங்
சவாய் ஜெய் சிங் III
சவாய் பிருத்விராஜ் சிங்
சவாய் ஜகத் சிங்
மரபுகச்சுவாகா
தந்தைசுவாய் சிங் (உயிரியல் தந்தை)
சுவாய் இரண்டாம் மதோ சிங் (தத்தெடுத்தவர்)
தாய்சுவாய் கன்வர் சிங் (உயிரியியல்)
பிறப்புசுவாய் மோ முகுத் சிங்
21 ஆக்த்து 1912
இசர்தாவின் திக்கானா, பிரிட்டிசு இந்தியா
இறப்பு24 சூன் 1970(1970-06-24) (அகவை 57)
சைரன்செஸ்டர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
சமயம்இந்து சமயம்

இரண்டாம் மான்சிங் (Man Singh II) ( 21 ஆகத்து 1912 - 24 சூன் 1970) இவர் ஜெய்ப்பூர் மாநிலத்தை கடைசியாக ஆண்ட மகாராஜா ஆவார். இவர் 1922 மற்றும் 1949 க்குமிடையில் சுதேச அரசாக ஆட்சி செய்தார். பின்னர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. அதன்பிறகு, 1949 மற்றும் 1956 க்குமிடையில் ராஜஸ்தானின் அரசப்பிரதிநிதியாக பதவியில் இருந்தார். பிற்கால வாழ்க்கையில், எசுப்பானியத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். இவர் ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரராக இருந்தார். இவர் போலோ விளையாட்டில் புகழ் பெற்றிருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், உத்தரபிரதேசத்தின் கோட்லா கிராமமான இசர்தாவைச் சேர்ந்த தாகூர் சவாய் சிங்குக்கும் அவரது மனைவி சுகன் குன்வாருக்கும் இரண்டாவது மகனாக மோர் முகுத் சிங் என்றப் பெயரில் பிறந்தார். இவரது தந்தை ராஜபுத்திரர்களின் கச்வாகா குலத்தைச் சேர்ந்த ஒரு பிரபு ஆவார். இன்றைய ராஜஸ்தானில் சவாய் மாதோபூர் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இசர்தா நகரத்தில் மோர் முகுத் வளர்ந்தார். இவரது குடும்பம் ஜெய்ப்பூர் மற்றும் கோட்டாவின் ஆளும் அரச இல்லத்துடன் தொடர்பிலிருந்தது (அங்கு இவரது தந்தையின் சகோதரி திருமணம் செய்து கொண்டார்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மன்சிங்&oldid=3018927" இலிருந்து மீள்விக்கப்பட்டது