மத்வ பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்வ பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா
கருநாடகம், மகாராட்டிரம், கேரளம், கோவா (மாநிலம்), தமிழ்நாடு, தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
மொழி(கள்)
கன்னடம், தமிழ், துளு, கொங்கணி, தெலுங்கு, மலையாளம் மற்றும் மராத்தி
சமயங்கள்
இந்து சமயம் (வைணவர்கள்)

மத்வ பிராமணர்கள் (Madhva Brahmins) அல்லது மத்துவர்கள் (மேலும் மாத்வ பிராமணர்கள் அல்லது மாத்வர்கள் என்று உச்சரிக்கப்படும் இவர்கள் துவைதத்தை நிலைநாட்டிய மத்துவாச்சாரியரை பின்பற்றும் இந்தியாவின் இந்து பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சாத் வைணவத்தை பின்பற்றுபவர்கள் என்பதால் இவர்கள் சாத்-வைணவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். [1] இவர்கள் பெரும்பாலும் இந்திய மாநிலங்களான தெலங்காணா, கர்நாடகா, மகாராட்டிரா, கோவா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் காணப்படுகின்றனர் .

வரலாறு[தொகு]

மத்வ சமூகம் அதன் தத்துவ தோற்றத்தை 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியரான மத்வாச்சாரியரிடம் காண்கிறது . உடுப்பியின் எட்டு மடங்கள் மத்வாச்சாரியரால் நிறுவப்பட்டது. மத்வாச்சாரியருக்குப் பிறகு மடங்களை நிறுவிய மற்ற ஆச்சாரியர்களில் பத்மநாப தீர்த்தர், நரஹரிதீர்த்தர், அக்சோபிய தீர்த்தர், ஜெயதீர்த்தர், சிறீபாதராஜ தீர்த்தர், வியாசதீர்த்தர், வாதிராஜ தீர்த்தர், விஜயேந்திர தீர்த்தர், இராகவேந்திர தீர்த்தர் போன்றவர்கள் அடங்குவர் . [2] மத்வத் தத்துவத்தின் இணைப்புகள் தெற்கில் உடுப்பி முதல் வட இந்தியாவில் துவாரகை வரை கோயில்கள் மற்றும் மடங்கள் வடிவில் நீட்டிக்கப்பட்டுள்ளன. [3]

உடுப்பி நகரம் 13 ஆம் நூற்றாண்டின் கிருட்டிணர் கோயிலுக்கு பிரபலமானது. மனித ஆத்மா கடவுளின் கிருபையால் காப்பாற்றப்படுவதாகவும், உண்மையான பக்தர்களுக்கு கடவுள் காட்சி அளிக்கிறார் என்றும் மத்வர்கள் நம்புகிறார்கள். பக்தி வழிபாடு மத்வர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. [4]

தொழில்கள்[தொகு]

17 ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் சுல்தானக ஆட்சியின் போது, பல தேசஸ்த் மத்வ பிராமணர்கள், ஆந்திரா மற்றும் தெலங்காணா மாவட்டங்களில் தேசுமுக், தேசுபாண்டே, மசூம்தார், மன்னவர் போன்ற உயர் நிர்வாக பதவிகளை வகித்தனர். [5]

புள்ளிவிவரங்கள்[தொகு]

கர்நாடகாவில், துவைதத் தத்துவத்தைப் பின்பற்றும் பிராமணச் சமூகங்கள் தேசஸ்த் பிராமணர்கள், சிவல்லி பிராமணர்கள், [6] கோட்டா பிராமணர்கள், பதகநாடு பிராமணர்கள், ஆரவேலு பிராமணர்கள், கன்னட கம்மே, உலுச்சுகம்மே (உல்ச்சா) பிராமணர்கள், [7] ஆரவந்துவக்கலு பிராமணர்கள் ஆகியோர் . [8] தமிழ்நாட்டில், மத்வாச்சாரியரின் தத்துவத்தைப் பின்பற்றும் பிராமண சமூகங்கள் தேசஸ்தாக்கள், ஆரவந்துவக்கலு, படகநாடு, ஆருவேலா பிராமணர்கள், பென்னத்துரார் பிராமணர்கள், பிரதமசாகி பிராமணர்கள், படக பிராமணர்கள் ஆகியோர் அடங்குவர். [9] பீகாரில், கயாவால் பிராமணர்கள் துவைதத் தத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். [10] [11] கோவாவில், துவைத தத்துவத்தைப் பின்பற்றுபவர்களாக கவுட சாரஸ்வத் பிராமணர் உள்ளனர். சால்செட் அங்குள்ள மத்வ சாரஸ்வத்தின் கோட்டையாகும். மேலும் அவர்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர்கள். [12] [13]

கர்நாடகா, கடலோர மகாராட்டிரா மற்றும் கோவாவில் மத்வாச்சாரியரின் துவைத தத்துவத்தைப் பின்பற்றும் தெய்வத்ன பிராமணர்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. [14] [15]

கேரளாவில், மத்வாச்சாரியரின் துவைத வேதாந்தத்தைப் பின்பற்றும் எம்ப்ராந்திரிகள் உள்ளனர். குறிப்பாக மத்திய கேரள பிராந்தியத்தில் மத்வ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் பிராமணர்களின் பிற பிரிவுகளும் உள்ளன. [16]

சமூகம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

உடுப்பியில் சாம்பார் மற்றும் சட்னியுடன் மசாலா தோசை

மொழி[தொகு]

பிரதான தெற்கு திராவிட மொழிகள் குழுவின் முக்கிய மொழிகளில் ஒன்றான கன்னடத்தை பெரும்பான்மையான மத்வர்கள் பேசுகிறார்கள். மத்வ பிராமணர்கள் பலவிதமான கன்னடங்களைப் பேசுகிறார்கள்.[17] கன்னடம் அல்லாத மாநிலங்களில் கூட இவர்கள் தங்கள் வீடுகளில் கன்னடம் பேசுகிறார்கள். ஆனால் வெளியாட்களுடன் அவர்கள் அந்த மாநிலத்தின் சொந்த மொழியைப் பேசுகிறார்கள்.[18] மராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் மத்வ பிராமணர்கள் தேசஸ்தா மத்வ பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் மகாராட்டிராவிலும் தென்னிந்தியா முழுவதும் பரவி வருகின்றனர்.[19] துளு பேசும் மத்வ பிராமணர்கள், சிவள்ளி மத்வ பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் கரையோர மாவட்டங்களான உடுப்பி, இன்றைய கர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதி, காசர்கோடு மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளனர். கொங்கணி பேசும் மத்வ பிராமணர்கள் கவுட சாரஸ்வத் பிராமணர் எனப்படுகின்றனர். இவர்கள் கரையோர கர்நாடகா, கோவா மற்றும் கேரளா முழுவதும் பரவியுள்ளனர்.[20] பிகாரி, மாககி மற்றும் இந்தி பேசும் மத்வ பிராமணர்கள் கயாவல் பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் கயா மற்றும் வாரணாசி முழுவதும் பரவியுள்ளனர்.[21][13]

சிவள்ளி மற்றும் தேஸ்தா மத்வர்கள் பிற சமூகங்களால் கடவுளின் சேவைகளுக்காக அதிகம் தேடப்படுகிறார்கள். கவுட சாரஸ்வத் மத்வர்கள் ஒரு மத ரீதியாக தன்னிறைவான சமூகமாகும். இந்த மூன்று துணைப்பிரிவுகளுக்கும் இடையே ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் உள்ளன. [22]

உணவு முறை[தொகு]

இவர்கள் தூய சைவ உணவு உண்பவர்கள். மேலும் இவர்களின் பிரதான தானியம் அரிசி மற்றும் கோதுமை போன்றவை. [23] உடுப்பி சமையல் என்பது மத்வ உணவுக்கு ஒத்த பெயர். இது கர்நாடகாவின் ஒரு முக்கிய சைவ உணவு வகையாகும். இதில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன. [24]

வழக்கமான மத்வ சமையல் வகைகளில் ரசம், சாம்பார் , புளிக்குழம்பு மற்றும் அரிசி ஆகியவை உள்ளன. [25] புளிக்குழம்பு பொதுவாக முழு மத்வ சமூகத்திற்கும் ஒரு பிரியமான உணவாகும். [26] இனிப்புகளில், அயக்ரீவா என்பது பெரும்பாலான மத்வ பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் மிகவும் பொதுவான இனிப்பு உணவாகும். இது வெல்லம் மற்றும் தேங்காயுடன் வங்காள கிராம் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. [27]

சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள்[தொகு]

2017 ஆம் ஆண்டில், கர்நாடக அரசு மூடநம்பிக்கைக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்து, கர்நாடக தடுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகளை ஒழித்தல் மற்றும் அமானுஷ்ய சக்திகளை அல்லது தீய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக மந்திரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் மசோதா, 2017 ஆகியவற்றை சட்டசபையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அனைத்து தீய நடைமுறைகளையும் தடை செய்ய திட்டமிட்டது. பல விவாதங்களுக்குப் பிறகு, மத்வ பிராமணர்களின் 'முத்ரதாரணம்' போன்ற நடைமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின்படி, வழக்கமாக தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட 'முத்திரைகள்' தீயில் சூடாக்கப்பட்டு உடலில் குத்தப்படுகின்றன. [28]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Sadhus of India: The Sociological View. 
  2. O. P. Bhatnagar, India. University Grants Commission, University of Allahabad. Dept. of Modern Indian History (1964). Studies in social history: modern India. St. Paul's Press Training School. பக். 133–135. 
  3. Nataraja Guru (1990). Life and Teachings of Narayana Guru: In Two Parts. Narayana Gurukula Foundation. 
  4. Yamuna Lingappa, Banadakoppa T. Lingappa (1992). Wholesome nutrition for mind, body, and microflora: the goal of lacto-vegetarianism (recipes of Udipi cuisine included). Ecobiology Foundation International. 
  5. Appasaheb Ganapatrao Pawar (1971). Maratha History Seminar, May 28-31, 1970: papers. Shivaji University. "The ascendancy of the Qutb-shahis of Golkonda resulted in several Maratha Brahmins of the Madhwa sect, generally called Desasthas, being appointed to high positions. This is evident from several terms such as Deshmukh, Deshpande, Majumdar, Mannavar etc.used in the district's of Andhra to signify certain administrative posts" 
  6. B. N. Sri Sathyan (1973). Karnataka State Gazetteer: South Kanara. Director of Print., Stationery and Publications at the Government Press. 
  7. Mysore Narasimhachar Srinivas (1978). Marriage and Family in Mysore. AMS Press. 
  8. Karnataka State Gazetteer: Mysore. Director of Print, Stationery and Publications at the Government Press. 1988. 
  9. Kumar Suresh Singh (1998). India's Communities, Volume 6. Oxford University Press. 
  10. A. M. Shah. The Structure of Indian Society: Then and Now. Routledge. 
  11. T. N. Madan (1992). Religion in India. Oxford University Press. https://archive.org/details/religioninindia0000unse. 
  12. Vithal Raghavendra Mitragotri (1999). A socio-cultural history of Goa from the Bhojas to the Vijayanagara. Institute Menezes Braganza. 
  13. 13.0 13.1 Sharma 2000.
  14. K. S. Singh (1998). India's Communities. Oxford University Press. பக். 738. https://books.google.co.in/books?id=Jw9uAAAAMAAJ. "The Daivadnya accepted Vaishnavism during the twelfth century under the spiritual influence of Madawacharya, a great Vaishnava saint, but as they were looked down upon by other communities, they began to migrate to Maharashtra and, later, to Goa... ... They have two sects, i.e. Smartha and Vaishnava. Those living in Karnataka and Goa are mostly Vaishnava." 
  15. Oliver Godsmark. Citizenship, Community and Democracy in India: From Bombay to Maharashtra, c. 1930 - 1960. Routledge. பக். 203. https://books.google.co.in/books?id=CCpKDwAAQBAJ&pg=PT203. "daivadnya brahman sub-caste originally from coastal Maharashtra, Karnataka and Goa" 
  16. Raj Kumar (1999). Survey of Ancient India: Literary and cultural perspectives on ancient. Anmol Publications. பக். 267. https://books.google.com/books?id=JyIwAQAAIAAJ. 
  17. Dr. Amith Kumar P.V.. Bakhtin and Translation Studies: Theoretical Extensions and Connotations. Cambridge Scholars Publishing. பக். 83. 
  18. R. Thirumalai, S. Manoharan (1997). Tamil Nadu, Part 2. Anthropological Survey of India. பக். 854. 
  19. Studies in the Linguistic Sciences, Volumes 8-9. Department of Linguistics, University of Illinois. 1978. பக். 199. https://books.google.com/books?id=CK0oAQAAIAAJ. 
  20. Hebbar 2005.
  21. Lalita Prasad Vidyarthi (1978). The Sacred Complex in Hindu Gaya. Concept Publishing Company. பக். 54. https://archive.org/details/sacredcomplexinh00vidy. 
  22. Charisma and Canon: Essays on the Religious History of the Indian Subcontinent. Oxford University Press. 2001. பக். 123. https://books.google.co.in/books?id=nnvXAAAAMAAJ. "While the GSBs tend to be a religiously self-contained community, the Taulavas and Desasthas are more sought after for priestly services by other communities. There are numerous cultural difference between these three subdivisions." 
  23. India's Communities, Volume 5. Oxford University Press. https://books.google.com/books?id=g9MVAQAAMAAJ. 
  24. Secrets From The Udupi Kitchen
  25. "A Peek Into A Madhwa Brahmin Kitchen". India Food Nerwork.
  26. Madhur Jaffrey. Curry Easy Vegetarian. https://books.google.com/books?id=lo2JBAAAQBAJ&pg=PT63&dq=madhwa+brahmin+vegetarian&hl=en&sa=X&ved=0ahUKEwjE6K-Hjf7WAhUD6Y8KHRTGA3wQ6AEIJzAA#v=onepage&q=madhwa%20brahmin%20vegetarian&f=false. 
  27. Sweets from Karnataka that deserve Geographical Indication (GI)
  28. "Karnataka Takes Stand Against Superstition, Bans All Evil Practices Including Black Magic". Indiatimes. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
  29. The quarterly journal of the Mythic society (Bangalore). 56. Mythic Society. 1966. p. 94. 
  30. Life Sketch of Rajacharitha Visharada Rao Bahadur C.Hayavadana Rao கூகுள் புத்தகங்களில் at page 94; Quote - "Rao Bahadur C.Hayavadana Rao was born on Tenth of July 1865 at Hosur, Krishnagiri talk in a Madhwa Deshastha Family.His father was C.Raja Rao"
  31. Kashinath laid to rest: Shivaraj Kumar, Darshan and entire Sandalwood bids tearful adieu
  32. The mind and metaphors of U.R. Ananthamurthy - The Hindu

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்வ_பிராமணர்கள்&oldid=3739698" இலிருந்து மீள்விக்கப்பட்டது