போசடிகும்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போசடிகும்பே (Posadigumpe) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், காசர்கோடு மாடத்தில், மஞ்சேஸ்வரம் வட்டதில் உள்ள 600 மீட்டர் உயர மலைப்பகுதியாகும்.

சுற்றுலா[தொகு]

போசாடிகும்பேயானது காசராகோடுக்கு வடகிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள பேயர் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 487.68 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா பகுதியாகவும், சுற்றுலா விடுதிகள் கொண்ட பகுதியாகவும் உள்ளது. மலை உச்சியில் இருந்து அரபிக் கடல், மங்களூர், குதுரேமுக் போன்றவற்றைக் காணலாம். இந்த இடத்தை தேசிய நெடுஞ்சாலை 17 இருந்து பாண்டியோடு அல்லது உப்பாலா வழியாக எளிதில் அணுகலாம்.

மொழிகள்[தொகு]

இந்த இடமானது அடிப்படையில் பல் மொழி பகுதியாகும். இங்கே துளு முக்கிய மொழி என்றாலும் மக்கள் துளு, மராத்தி, கன்னடம் போன்ற மொழிகளை பேசுகிறார்கள்

நிர்வாகம்[தொகு]

இந்த கிராமமானது மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும், காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உடபட்டும் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போசடிகும்பே&oldid=3010780" இலிருந்து மீள்விக்கப்பட்டது