ரிஷிவந்தியம்

ஆள்கூறுகள்: 11°49′01″N 79°06′00″E / 11.817°N 79.100°E / 11.817; 79.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஷிவந்தியம்
கிராம ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி
வட்டம்சங்கராபுரம்
ஊராட்சி ஒன்றியம்ரிஷிவந்தியம்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்18,665
மொழிகள்
 • அதாகாரப்பூரவமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்606 205
தொலைபேசி குறியீடு04151
வாகனப் பதிவுTN-15
கடற்கரை60 கிலோமீட்டர்கள் (37 mi)
அருகில் உள்ள நகரம்கள்ளக்குறிச்சி
பாலின விகிதம்0.98 /
எழுத்தறிவு72%
மக்களவை தொகுதிகள்ளக்குறிச்சி
Civic agencyகள்ளக்குறிச்சி
தட்பவெப்ப நிலைதட்பவெப்ப நிலை (கோப்பென்)
கோடைக்கால சராசரி வெப்பநிலை35 °C (95 °F)
குளிர்கால சராசரி வெப்பநிலை30 °C (86 °F)

ரிஷிவந்தியம் (Rishivandiyam) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

ரிஷிவந்தியம் ஏரி

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரானது கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1822 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8225 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 4178, பெண்களின் எண்ணிக்கை 4047 என உள்ளது. எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

ரிஷிவந்தியத்தில் பழமையான அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.மேலும் ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். pp. 287–288. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
  2. http://www.onefivenine.com/india/census/village/Viluppuram/Sankarapuram/Rishivandiyam
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷிவந்தியம்&oldid=3625376" இலிருந்து மீள்விக்கப்பட்டது