பயனர்:முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
வெல்க தமிழ்!
பெயர்தமிழ் முடியரசன்
இயற்பெயர்ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
பால்ஆண்
பிறந்த நாள்30/07/1984
பிறந்த இடம்முடியரசனார் தெரு, மானகிரி, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
தற்போதைய வசிப்பிடம்தேவகோட்டை
நாடு இந்தியா
நேர வலயம்+5:30
தேசியம்இந்தியன்
இரத்த வகைO Negative
உறவு
திருமணநிலைமணமானவர்
கல்வி, தொழில்
தொழில்ஆசிரியப் பணி, எழுத்துப் பணி.இதழியலாளர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கவிஞர், சமூகச்செயற்பாட்டாளர்'
கல்விஇளங்கலை தமிழ் இலக்கியம், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி.

தமிழாசிரியப்பயிற்சி, அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.

முதுகலை தமிழ் இலக்கியம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இளமுனைவர் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இளங்கல்வியியல், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தேசிய விரிவுரையாளர் தகுதி, UGC

முனைவர் பட்டம் - தமிழ்ப்பண்பாட்டுமையம், அழகப்பா பல்கலைக்கழகம்.

முதுகலைப்பட்டயம் தமிழ்ப்பண்பாடு - தமிழ்ப்பண்பாட்டுமையம், அழகப்பா பல்கலைக்கழகம்.
கல்லூரிஇராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.
பல்கலைக்கழகம்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம்
பாடசாலைலெ.அரு.நடுநிலைப்பள்ளி,மானகிரி.

ஜெ.வி.உயர்நிலைப்பள்ளி, நாச்சியாபுரம்.

ஸ்ரீ மீ.சு.வி ஆண்கள் மேனிலைப்பள்ளி,காரைக்குடி.
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகவிதை, கட்டுரை, சிறுகதை,
ஒளிப்படம், நூல் வாசிப்பு
சமயம்மனிதம்
அரசியல்தமிழ்த்தேசியம்
நூல்கள்திருக்குறள், வீறுகவியரசர் முடியரசன் படைப்புகள்
ஆர்வம்மொழி, அறிவியல்,
உளவியல், அரசியல், சமூகவியல், படைப்பிலக்கியம்
தொடர்பு விபரம்
வலைப்பதிவுhttp://stephenmickelraj.blogspot.com/search?updated-max=2017-08-02T05:09:00-07:00&max-results=7&m=1
மின்னஞ்சல்suzhalmonthly@gmail.com
முகநூல்https://www.facebook.com/stephen.mickelraj
யூடியூப்https://m.youtube.com/channel/UClgEtYEXYNMhIyFcz-eTSKA
விக்கி விபரம்
முதல் தொகுப்பு[1] தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி
கையொப்பம்Stephen

தமிழ் முடியரசன், சுழல் சத்தியப்பிரியன் ஆகிய புனைப் பெயர்களையும் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் என்னும் இயற்பெயரையும் கொண்ட இவர், மானகிரியில் சுழல் பதிப்பகம் என்னும் பெயரில் நூல் வெளியீடு செய்து வருகிறார்.

இதழியல் கலையிலும், சிறுகதை எழுதுவதிலும் விருப்பமுடைய இவர் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இளமுனைவர் பட்டமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வீறுகவியரசர் முடியரசனாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளதால் வீறுகவியரசர் குறித்த தகவல்களை விக்கி தளத்துக்குக் கொண்டு தருவதில் முனைப்புக் காட்டி வருகிறார்.

தமிழ் மற்றும் தமிழர் மரபு, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் தொடர்பான தளங்களில் பதிவுகளை அளித்து வருகிறார்.

இவர்தம் பதிவுகள் நாளிதழ்கள், வார, திங்கள் இதழ்கள், பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன.

இணையத்தில் இவை தொடர்புடைய பல பதிவுகளைச் செய்து வருகிறார்.

காணொளிக் காட்சிகளை யூட்யூப் பில் (Stephen Mickel Raj M) நிறையத் தந்திருக்கிறார். தம் மாணவர்களின் தொலைக்காட்சி உரைகள், கலை இலக்கிய மன்ற சாதனைச்சுவடுகள் முதலியன அவற்றுள் குறிப்பிடத் தகுந்தன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் 'சிறந்த எழுத்தாளருக்கான அண்ணா விருது', குமுதம் சிநேகிதி இதழின் 'கனவு ஆசிரியர்' விருது, வின் நியூஸ் தொலைக்காட்சியின் 'சிறந்த வழிகாட்டி' விருது, அவ்வை தமிழ் கோட்டத்தின் 'கதை ஆய்வுச் சுடர்' விருது, வேந்தர் தொலைக்காட்சியின் 'சிறந்த கல்வியாளர்' விருது, கல்வியாளர்கள் சங்கமத்தின் 'சமூகச் சிற்பி' விருது, கல்வி டுடே இரு மொழித் திங்களிதழின் 'சமூக- கல்வி நற்சிந்தனையாளர்' விருது, மதுரை கத்தோலிக்கக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் 'இலக்கியச் செல்வர்' விருது, இந்திய பண்பாட்டு அமைப்பிடம் 'சிந்தனைச் சுடர்' விருது, காரைக்குடி தமிழிசைச்சங்கத்தின் 'இளம் எழுத்தாளர்' விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

காரைக்குடி வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், வள்ளுவர் பேரவை, தமிழ்நாடு கல்வியாளர்கள் சங்கம் தமிழ் வளர்ச்சிக் குழுமம், தேவகோட்டை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளில் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சுழல் திங்களிதழ், தேமதுரம் மின்னிதழ் ஆகியவற்றில் பொறுப்பாசிரியராகவும், குறளமுதம், இணையட்டும் இதயம், திறவிழி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் , ஆனந்த கங்கைத் தூது, இளமைக்கனல், AVE MARIA ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பொறுப்பு வகித்துள்ளார். வளரும் இளமை என்னும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பீட்டுக்கல்வி பாட நூலாசிரியராகவும் பங்களித்துள்ளார்.

இவை தவிரவும் இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தியும் வழிநடத்தியும் மாணவர் செயற்களம் என்னும் மாநில இளையோர் இயக்கத்தின் அறிவுரைஞராகச் செயல்படுவதோடு, சமூகத்தளத்தில் கலை- இலக்கியத் தொடர்பணியாற்றி வருகிறார். பதிப்பகம், ஆவணக்காப்பு, படைப்பு ஆகியனவற்றில் முனைந்துள்ளார். மேலும் விவரங்கள் தேவைப்படின் இணையத்தில் இவரது பதிவுகளை அறிய ஸ்டீபன் மிக்கேல் ராஜ் என கூகுளில் தேடினால் விரியும் பக்கங்களில் காண இயலும்.