இராபர்ட்டோ ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட்டோ ஆபிரகாம்
Roberto Abraham
பிறப்பு12 ஏப்ரல் 1965 (1965-04-12) (அகவை 59)
துறைவானியல், வானியற்பியல், அண்டவியல்
பணியிடங்கள்டொராண்டோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரித்தானியக் கொலம்பியப் பல்கலைக்கழகம்
ஆய்வேடுபிஎல் லாக் (BL Lac) பொருள்களைப் படம்பிடித்தல் (1992)
ஆய்வு நெறியாளர்இயான் மெக்கார்தி, உரோசர் தேவீசு (வானியற்பியலாளர்)
அறியப்படுவதுநோக்கீட்டு அண்டவியல், பால்வெளிப் படிமலர்ச்சி, முதற் பால்வெளிகள்
இணையதளம்
www.astro.utoronto.ca/~abraham/Web/Welcome.html

இராபர்ட்டோ ஆபிரகாம் (Roberto Abraham), (பிறப்பு: 12 ஏப்பிரல் 1965, மணிலா, பிலிப்பைன்சு) ஒரு கனடிய வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் கனடிய அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்]].

கல்வி[தொகு]

ஆபிரகாம் 1987 இல் தன் இளம் அறிவியல் பட்டத்தைப் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்த்ல் இருந்து பெற்றார்,இவர் தன் முனைவர்பட்டத்தை 1992 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவரது ஆய்வு வழிகாட்டிகள் இயான் எம். மெக்கார்த்தியும் உரோசர் டேவீசும் ஆவர்.[1]

இவர் தன் முதுமுனைவர் பட்டத்தை தொமினியன் வானியற்பியல் நோக்கீட்டகத்திலும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் அரசு கிரீன்விச் நோக்கீட்டகத்திலும் ஆய்வு செய்து பெற்றார்.[1]

தொழில்[தொகு]

இவரது வாழ்க்கை அளவன்சாரா புள்ளியியல் முதல் பால்வெளி புறவடிவ வகைபாடு, குறிப்பாக உயர்செம்பெயர்ச்சி நெடுக்கத்திலான வகைபாடு வரையிலும் தொடக்கநிலை ஆழ்வெளிப் புலங்களின் ஆய்வுக்காகவும் பெயர்பெற்றதாகும். [2] இவர் "ஜெமினி ஆழ்வெளி ஆய்வில்" தலைமையாளர்களில் ஒருவர் ஆவார்.[3] இது மிகத் தொடக்கநிலை நீள்வட்ட பால்வெளிகளின் படிமலர்ச்சி உள்ளங்கிய பல குறிப்பிடத் தக்க முடிவுகளுக்கு வழிவகுத்தது. அவற்றில் பெரும்பாலாவை ஏன் மிகப் பழையனவாக அமைகின்றன என்பதற்கு விளக்கமும் தந்தது.[4]

இவர் நடப்பில் டிரேகான்பிளை தொலையொளிப்பட அணித் தொலைநோக்கியின் இணை முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக உள்ளார். இது மீவிரவல் பால்வெளிகளை அதாவது, மீத்தாழ் மேற்பரப்புப் பொலிவு பால்வெளிகளைக்கட்புல ஒளி அலைநீளங்களில் படிமமாக்குகிறது.[5]

இவர் 2016 முதல் 2018 வரை கனடிய வானியல் கழகத் தலைவராக இருந்தார்.[6] இவர் நடப்பு ஜேம்சு வெபு விண்வெளித் தொலைநோக்கி அறிவுரைக்குழுவில் பங்கேற்று வானியல் சமுதாயத்துக்குப் பணிபுரிகிறார்[7] இவர் கனடிய அரசு வானியல் கழகத்தின் தகைமைத் தலைவராகவும் விளங்கினார்.[8]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • 2005 – டொரான்ட்டோ பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியற்புலச் சிறப்பான கற்பித்தல் விருது [9]
  • 2011 – கனடிய வானியல் கழகத்தின் பி,ஜி. மார்ட்டின் தகைமை [10]
  • 2015 – கனடிய அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் [11] [12]
  • 2017 – கனடிய மன்றக் கில்லம் ஆய்வுநல்கை [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Abraham's departmental biography page
  2. Galaxy morphology to I=25 mag in the Hubble Deep Field, 1996, MNRAS, 279 L47
  3. Gemini Observatory - the Gemini Deep Deep Survey
  4. Casey Kazan; The early universe puzzle[தொடர்பிழந்த இணைப்பு], The Daily Galaxy (June 15th 2011).
  5. "Dragonfly - Dunlap Institute" (in en-US). Dunlap Institute. http://www.dunlap.utoronto.ca/instrumentation/dragonfly/. 
  6. "Past Officers and Directors of the Society - CASCA". casca.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  7. "JWST Advisory Committee (JSTAC)". jwst.stsci.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  8. "RASC Toronto Centre Organization | RASC Toronto". rascto.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  9. "OTA: Recipients — Site". www.artsci.utoronto.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  10. "Martin Award - CASCA". casca.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  11. "U of T's Abraham becomes new Fellow of the Royal Society of Canada - Dunlap Institute" (in en-US). Dunlap Institute. http://www.dunlap.utoronto.ca/u-of-ts-abraham-becomes-new-fellow-of-the-royal-society-of-canada/. 
  12. "FELLOWS DIRECTORY | The Royal Society of Canada". rsc-src.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
  13. "Roberto Abraham - using the Dragonfly Array telescope for new discoveries | Killam Laureates". killamlaureates.ca. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டோ_ஆபிரகாம்&oldid=3776480" இலிருந்து மீள்விக்கப்பட்டது