நந்தசங்கர் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தசங்கர் மேத்தா
பிறப்புமேத்தா நந்தசங்கர் துல்சாசங்கர்
(1835-04-21)21 ஏப்ரல் 1835
சூரத்து, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு17 சூலை 1905(1905-07-17) (அகவை 70)
சூரத்து, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தொழில்புதின ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகரன் கெலோ (1866)
துணைவர்நந்தகௌரி
பிள்ளைகள்மனுபாய் மேத்தா
வினாயக் மேத்தா
குடும்பத்தினர்அன்சா சிவ்ராஜ் மேத்தா]] (பேத்தி)
சுமந்த் மேத்தா (பேரன்)

நந்தசங்கர் துல்சாசங்கர் மேத்தா (Nandshankar Tuljashankar Mehta) (1835 ஏப்ரல் 21 - 1905 சூலை 17) இவர் ஓர் இந்திய குசராத்தி மொழி எழுத்தாளரும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். குசராத்தியின் முதல் புதினமான கரண் கெலோவுக்கு இவர் பெயர் பெற்றவர். [1] [2] [3]

வாழ்க்கை[தொகு]

நந்தசங்கர் மேத்தா 1835 ஏப்ரல் 21 ஆம் தேதி சூரத்தில் கங்கலட்சுமி மற்றும் துல்சாசங்கர் மேத்தா ஆகியோருக்கு நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பத்து வயதில் ஆங்கிலப் பள்ளியில் படிப்பைத் தொடங்கினார். 1855 இல் நந்தகௌரியுடன் திருமணமான பிறகு, அதே பள்ளியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். [4]

1858ஆம் ஆண்டில், பள்ளியின் முதல் இந்திய தலைமை ஆசிரியரானார். பின்னர் இவர் சூரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1867 வரை பணியாற்றினார். சூரத் நகராட்சியில் சேர்ந்த அரசாங்க பாடப்புத்தகக் குழுவின் உறுப்பினர் சர் தியோடர் ஹோப், இந்திய ஆட்சிப் பணியில் சேர மேத்தாவை ஊக்குவித்தார். அங்கலேஷ்வரின் நிர்வாக அலுவலராக வருவாய் துறையில் சேர்ந்தார். 1880இல் கட்ச் மாநிலத்தின் திவானாகவும் மற்றும் 1883இல் கோத்ராவில் உதவி அரசியல் முகவராகவும் பணியாற்றினார். [1] [4] இவருக்கு 1877இல் ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது.

இவர் ஒரு சமூக மற்றும் மத சீர்திருத்தவாதியாக இருந்தார். இவர் மேற்கத்திய கல்வியாளர்களிடம் கல்வி கற்றார்.இவர் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் பல சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்; விதவை மறுமணம்; வெளிநாட்டு பயணங்களுக்கு சாதி தடையை நீக்குதல்; தீண்டாமையின் எதிர்ப்பு, மூடநம்பிக்கைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டது போன்ற நடவடிக்கைக்கும் ஆதரவாக இருந்தார். இவர், துர்காராம் மேத்தா, தல்பத்ராம் மற்றும் பிற இரண்டு சகாக்களுடன்; சமூக மற்றும் மத சீர்திருத்தங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மானவ் தர்ம சபையை நிறுவினார். 1851 இல் மும்மையில் நிறுவப்பட்ட புத்திவர்தக சபையின் உறுப்பினராகவும் இருந்தார். [4]

1890இல் ஓய்வு பெற்ற பிறகு, இவர் பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். 1905 சூலை 17 அன்று சூரத்தில் இறந்தார். [4] இவர் மனுபாய் மேத்தாவின் தந்தை மற்றும் அன்சா மேத்தாவின் தாத்தாவுமாவார். இவர் மருத்துவரும், சுதந்திர ஆர்வலரும் மற்றும் சமூக சேவகருமான சுமந்த் மேத்தாவின் தாய்வழி தாத்தாவும் ஆவார். [5]

படைப்புகள்[தொகு]

இவர் கரண் கெலோ என்ற நூலை எழுதினார். இவர் 1863 இல் தொடங்கி 1866 இல் இதை நிறைவு செய்தார். 1298 இல் அலாவுதீன் கில்சியின் துருக்கியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட குசராத்தின் கடைசி ராஜபுத்திர ஆட்சியாளர் (சி .1296 - 1304) கரண் வகேலாவை இந்த நூல் சித்தரிக்கிறது. [1] [4]

ஆர்.ஜி. பண்டார்கரின் சமசுகிருத மார்கோபதேசிகா மற்றும் முக்கோணவியல் குறித்த ஆங்கில பாடப்புத்தகத்தை குசராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். இவர் செய்தித்தாள்களில் பல கட்டுரைகளை எழுதியிருந்தார். இவரது மகன் விநாயக் மேத்தா இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். [3] [4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "પહેલી ગુજરાતી નવલકથા 'કરણ ઘેલો' : ઉંમર વર્ષ ૧૫૦" (in குஜராத்தி). 24 January 2016. Archived from the original on 30 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  2. "પહેલી ગુજરાતી નવલકથાના લેખક". Mumbai Samachar (in குஜராத்தி). Archived from the original on 1 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "Book Review: 'Karan Ghelo'– Gujarat's 'Game of Thrones'". 21 June 2015. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Vatsal, Tulsi; Mukherji, Aban (15 March 2016). "'Karan Ghelo': Translating a Gujarati classic of love and passion, revenge and remorse". Scroll.in. Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
  5. Vaghela, Arun (2018-07-01). "૨૦મા સૈકાના ગુજરાતનો અરીસો : ડો.સુમંત મહેતા (1877-1968)" [The Mirror 20th Century Gujarat: Dr. Sumant Mehta (1877-1968)]. Divya Bhaskar (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தசங்கர்_மேத்தா&oldid=3559991" இலிருந்து மீள்விக்கப்பட்டது