இராம்பன், ஜம்மு காஷ்மீர்

ஆள்கூறுகள்: 33°15′N 75°15′E / 33.25°N 75.25°E / 33.25; 75.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்பன்
நகரம்
அடைபெயர்(கள்): The 'AND' of J&K
இராம்பன் is located in ஜம்மு காஷ்மீர்
இராம்பன்
இராம்பன்
Location in Jammu and Kashmir, India
இராம்பன் is located in இந்தியா
இராம்பன்
இராம்பன்
இராம்பன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°15′N 75°15′E / 33.25°N 75.25°E / 33.25; 75.25
Countryஇந்தியா
ஒன்றிய பிரதேசம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்இராம்பன்
ஏற்றம்747 m (2,451 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,596
கல்வியறிவு விகிதம்
 • நகரம்82.23%
 • மாவட்டம்54.27%
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்182144
தொலைபேசி இணைப்பு எண்01998
வாகனப் பதிவுJK 19
ஜம்முவிலிருந்து தூரம்150 கிமீ
சிறீநகரிலிருந்து தூரம்150 கிமீ
இணையதளம்ramban.gov.in

இராம்பன் (Ramban) என்பது இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரின் இராம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது இராம்பன் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாகும். இது ஜம்முவிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், சிறிநகரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலை -1 ஏ (இப்போது தேசிய நெடுஞ்சாலை-44) இல் செனாப் பள்ளத்தாக்கிலுள்ள செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது ஜம்மு &சிறிநகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட மைய புள்ளியாக அமைந்துள்ளது. [1]

இராம்பனில் செனாப் ஆற்றின் மீது பழைய பாலம்
இராம்பன் வழியாக பாயும் செனாப் ஆறு

வரலாறு[தொகு]

1846 ஆம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீர் மாநிலம் உருவாவதற்கு முன்பு, செனாப் ஆற்றின் வலது கரையில் 15 வீடுகளைக் கொண்ட நாஷ்பாண்ட் (பின்னர் 'ராம்பன்') என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம் இருந்ததாக சி.இ. பேட்ஸ் காஷ்மீரின் வர்த்தமானி என்ற தனது புத்தகத்தில் எழுதுகிறார். ஜம்முவின் ராஜா குலாப் சிங் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் மகாராஜாவானபோது, ஜம்மு-உதம்பூர் -பனிஹால் வழியாக அரச குடும்பத்தினர் சிறீநகரை அடைய இந்த ஊரை பயன்படுத்தினர். தோக்ராக்கள் தற்போதைய இராம்பனுக்கு அருகில் ஒரு கட்டிடத்தையும், செனாப் ஆற்றைக் கடக்க ஒரு மரப் பாலத்தையும் கட்டினர். ஜம்முவிலிருந்து சிறீநகருக்கு பனிஹால் வழியாக ஒரு வண்டி சாலை மற்றும் இராம்பனில் செனாப் ஆற்றின் மீது ஒரு தொங்கு பாலம் போன்றவற்றை அமைக்க மகாராஜா உத்தரவிட்டார் என்று சுகதேவ் சிங் சடக் என்பவர் தனது ‘மகாராஜா ரன்பீர் சிங்’ புத்தகத்தில் எழுதுகிறார். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது அது நான்குவழி பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலையின் வளர்ச்சியுடன், இராம்பனும் நிறைய வளர்ச்சியடைந்தது. இப்போது அது மாவட்ட தலைமையகத்தின் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. [2]

நிலவியல்[தொகு]

சந்திரோக்கிலிருந்து பார்த்தபடி இராம்பனின் அகலப் பரப்பு காட்சி
மைத்ரா, இராம்பன்

இராம்பன் மாவட்டத்தின் சராசரி உயரம் 747 மீட்டர் (3792 அடி) ஆகும். இராம்பன் மாவட்டத்தின் எல்லைக் கோடுகள் அதன் தெற்கே பத்னிடாப், அதன் கிழக்கில் அசார், மேற்கில் கூல் மற்றும் அதன் வடக்கே பனிஹால் ஆகியவற்றிலிருந்து வரையப்பட்டுள்ளன. இராம்பன் மாவட்டத்தில் ஏழு வட்டங்கள் உள்ளன. அதாவது பனிஹால், காரி, உக்ரஹால், இராம்பன், ராஜ்கர்ஹண்ட்கூல் மற்றும் நான்கு சமூக மேம்பாட்டு தொகுதிகள், அதாவது பனிஹால், கூல், இராம்பன் மற்றும் ராம்சூ ஆகியன. இந்த மாவட்டம் 2001 இல் 116 மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராமங்களையும் 127 வருவாய் கிராமங்களையும் கொண்டிருந்தது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[3] இராம்பன் நகரத்தின் மக்கள் தொகை 3,596 பேர் என்ற அளவில் இருந்தது. இதில் 1,873 பேர் ஆண்கள், 1,723 பெண்களாவர். இராம்பன் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 82.23 சதவீதமாகும். இராம்பனில், ஆண்களின் கல்வியறிவு 90.42 சதவீதமாகவும் , பெண் கல்வியறிவு விகிதம் 73.52 சதவீதமாகவும் உள்ளது.[4]

கஜ்பத் கோட்டை[தொகு]

மலையின் உச்சியில் கஜ்பத் கோட்டை என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான கோட்டை உள்ளது. ஒருமுறை ஷேக் அப்துல்லா இந்த கோட்டையில் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. 1825 ஆம் ஆண்டில், குலாப் சிங் இந்த கோட்டையில் பிம்பரைச் சேர்ந்த ராஜா சுல்தான் கானை சிறையில் அடைத்தார். சுல்தான் கான் அங்கேயே இறந்து சந்தர்கோட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.

1858 ஆம் ஆண்டில் ரஜௌரியின் ஆளுநரும் மகாராஜாவின் நெருங்கிய உறவினருமான மீன் ஹத்து சிங் மாநில அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து மகாராஜா ரண்பீர் சிங்கைக் கொல்ல முயன்றார். மீன் ஹத்து கைது செய்யப்பட்டு கஜ்பத் கோட்டைக்கு மாற்றப்பட்டார். [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Statement showing the number of blocks in respect of 22 Districts of Jammu and Kashmir State including newly Created Districts பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம் dated 2008-03-13, accessed 2008-08-30
  2. 2.0 2.1 "Ramban From past to present" (in en-US). Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K. 2015-07-19. http://www.dailyexcelsior.com/ramban-from-past-to-present/. 
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. "Ramban City Population Census 2011 - Jammu and Kashmir". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்பன்,_ஜம்மு_காஷ்மீர்&oldid=3007569" இலிருந்து மீள்விக்கப்பட்டது