ஓர்டா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர்டா இச்சென் (ஓர்டா பிரபு, Орд эзэн ("ஓர்ட் எசென்")), (அண். 1206 – 1251) என்பவர் ஒரு மங்கோலியக் கான் ஆவார். 13 ஆம் நூற்றாண்டின் போது மங்கோலியப் பேரரசின் தங்க நாடோடி கூட்டத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார்.[1]

மங்கோலியக் குதிரை வில்லாளர்கள்

வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் முதல் கான்[தொகு]

ஓர்டா இச்சென் (அண். கி. பி. 1206-1251) வெள்ளை நாடோடிக் கூட்டத்தை நிறுவியவராகக் குறிப்பிடப்படுகிறார். சூச்சியின் மூத்த மகன் மற்றும் செங்கிஸ் கானின் முதல் பேரன் ஆவார். தனது அப்பா மற்றும் தாத்தா ஆகியோரின் இறப்பின்போது ஓர்டா கான் தனது தந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் கிழக்குப் பகுதிகளைப் பெற்றார். இவர் மூத்தவராக இருந்தபோதிலும், சூச்சி வழித்தோன்றல்களின் உளூஸ் என்றழைக்கப்பட்ட முழு தங்க நாடோடிக் கூட்டத்தையும் இவரது தம்பி படு கான் ஆள்வதற்கு ஓர்டா ஒப்புக்கொண்டார். அந்த அரசு பால்காஷ் ஏரி மற்றும் வோல்கா ஆறு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த நிலங்களில் தான் ஓர்டா இறுதியாகத் தனது வெள்ளை நாடோடிக் கூட்டத்தை நிறுவினார். வோல்கா ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் இருந்த நிலங்கள் இவரது தம்பி படு கானின் ஆட்சியின் கீழ் இருந்தன. படு நீல நாடோடிக் கூட்டத்தின் முதல் ஆட்சியாளர் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைமைக் கான் ஆனார்.

அண். 1246 ஆம் ஆண்டு அரியணையைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்த தெமுகேவை ஓர்டா மற்றும் மோங்கே விசாரிக்க குயுக் கான் ஆணையிட்டார்.

உசாத்துணை[தொகு]

  1. (in உக்குரேனிய மொழி) "K" பரணிடப்பட்டது 2012-07-21 at the வந்தவழி இயந்திரம். Handbook on history of Ukraine.
ஓர்டா கான்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சூச்சி (தங்க நாடோடிக் கூட்டம்)
வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கான்
1226 – அண். 1251
பின்னர்
குன் குரான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்டா_கான்&oldid=3539580" இலிருந்து மீள்விக்கப்பட்டது