சீனத் தொலைக்காட்சி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனத் தொலைக்காட்சி நாடகங்கள் அல்லது (中国电视连续剧) என்பது சீன நாட்டில் தயாரித்து ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும். இது வட அமெரிக்கா தொலைக்காட்சி நாடகங்களைப் போன்றவை, ஆனால் பெரும்பாலும் நீண்ட அத்தியாயங்களை கொண்டவை. மற்ற நாடுகளை விட சீனா அதிக தொலைக்காட்சி நாடகங்களை உருவாக்குகிறது. 2014ஆம் ஆண்டு கணக்கிண்டின் படி 15,000 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை உருவாகியுள்ளது.[1] சீனாவில் மிகவும் பிரபலமான நாடகங்கள் கற்பனை காதல் ஆகும், 2016 ஆம் ஆண்டில் நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட 50 நாடகங்களில் 47 நாடகங்கள் இந்த வகையிலேயே உள்ளன.[2] சீன தொலைக்காட்சி நாடகங்கள் ஆசியா முழுவதும், குறிப்பாக வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் பிரபலமாக உள்ளது.[3][4][5][6][7]

1990 களில் இருந்து, வரலாற்று சீரியல்கள் பிரதான நேர தொலைக்காட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் இந்த வகை தொடர்கள் அதிகம் பார்க்கப்பட்டது அதை தொடர்ந்து பல அரண்மனை (வரலாற்று அரச) நாடகங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[8]

காதல், வரலாறு, நகைச்சுவை, திகில், குடும்ப நாடகம், விளையாட்டு போன்ற ஒரு குறிப்பிட்ட வகையுடன் நாடகங்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது இவற்றின் கலவையை பண்டைய, வரலாற்றறு காலம் அல்லது நவீன வடிவத்தில் கருப்பொருளை முன்னிலைப்படுத்தவும் பார்வையாளர்களின் ஆர்வத்திற்கு ஏற்றவையாகவும் உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. CNTV (June 12, 2015). "Chinese TV Producers Look to Foreign Markets". english.entgroup.cn. பார்க்கப்பட்ட நாள் June 12, 2015.
  2. China Daily (April 14, 2017). "Spy Stories Get New Lease of Life on the Small Screen". english.entgroup.cn. EntGroup Inc. பார்க்கப்பட்ட நாள் April 15, 2017.
  3. "On Cambodian TV, a Buffet of Foreign Options but Little Local Fare". 2015-09-12.
  4. "The Current Situation of Sri lanka TV Media and the Challenges Ahead - 24th JAMCO Online International Symposium". Jamco.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  5. "Chinese Dramas Reach Thailand | China-Thailand – China Report ASEAN". Chinareportasean.com. 2017-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  6. "Chinese TV dramas and movies thrill Vietnamese - Culture". Chinadaily.com.cn. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  7. "After Jackie Chan and Jet Li, are we ready for the F4 boys?". Philstar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  8. Zhu, Ying (2005). ""Yongzheng Dynasty" and Chinese Primetime Television Drama". Cinema Journal 44 (4): 3–17. doi:10.1353/cj.2005.0038. https://archive.org/details/sim_cinema-journal_summer-2005_44_4/page/3.