விளிம்பு (கோட்டுருவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டுருவியலில் விளிம்பு (edge) என்பது கோட்டுருக்களை உருவாக்கப் பயன்படும் இரு அடிப்பபடை அலகுகளுள் ஒன்றாகும். மற்றொரு அலகு கணு. பொதுவாக கோட்டுரு வரைதலில் இரு கணுக்களை இணைத்து வரையப்படும் கோடு விளிம்பு எனப்படும். [1]எனினும் மீகோட்டுருக்களில் விளிம்புகள் இரண்டிற்கும் மேற்பட்டக் கணுக்களையும் கொண்டிருக்கும்.

விளிம்புகள் திசையுறு அல்லது திசையுறாதவையாக இருக்கலாம். திசையுறா விளிம்புகள் "கோடுகள்" எனவும் திசையுறு விளிம்புகள் "விற்கள்" அல்லது "அம்புகள்" எனவும் அழைக்கப்படுகின்றன. திசையுறா கோட்டுருவில் விளிம்புகள் அதன் கணுக்களின் கணமாகக் குறிக்கப்படுகிறது. திசையுறு கோட்டுருவில் விளிம்புகள் அதன் கணுக்களின் வரிச்சைச்சோடியாகக் குறிக்கப்படுகிறது.

கணுக்கள் இருந்தும் விளிம்புகள் இல்லாத கோட்டுருவானது "விளிம்பற்ற கோட்டுரு" எனப்படும். சில இடங்களில் விளிம்பற்ற கோட்டுருவானது வெற்று கோட்டுரு எனவும் அழைக்கப்படும். ஆனால் வெற்று கோட்டுரு என்பது கணுக்கள் இல்லாத கோட்டுருவையும் குறிக்கலாம்.

G என்ற கோட்டுருவின் விளிம்புகளின் கணத்தின் குறியீடு: E(G)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளிம்பு_(கோட்டுருவியல்)&oldid=3609745" இலிருந்து மீள்விக்கப்பட்டது