ஏ. என். பிரகலாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.என். பிரகலாத ராவ் (பிறப்பு: 1953 சூலை 24) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் கன்னட மொழி மொழி குறுக்கெழுத்துப் புதிர் தொகுப்பி/கட்டமைப்பாளர் ஆவார்.

தொழில்[தொகு]

ஏ.என். பிரகலதா ராவ் இந்தியாவின் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அபானியில் பிறந்தார். பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஹொனுடி என்னும் பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருந்தார்.[1]

குறுக்கெழுத்து தொகுப்பில் ராவின் ஈடுபாடு ஒரு பொழுதுபோக்காகும். இது 1970களின் நடுப்பகுதியில் ஒரு மாணவராக இருந்தபோது கன்னடம் மற்றும் ஆங்கில குறுக்கெழுத்துக்களைத் தீர்ப்பதற்கான ஆர்வத்திலிருந்து வளர்ந்தது. இவர் 1983ஆம் ஆண்டில் கர்நாடக தகவல் துறையில் ஒரு மக்கள் தொடர்பு அலுவலராகச் சேர்ந்தார். அந்த நேரத்தில் இவர் தீவிரமாக குறுக்கெழுத்துகளைத் தொகுக்கத் தொடங்கினார். இவர் இப்போது கர்நாடக அரசின் சமூக நலத்துறை அமைச்சருக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். மேலும் தினமும் புதிர்களைத் தொகுக்கிறார். சில நேரங்களில் இவரது மனைவியின் உதவியுடன் இப்பணியை செய்து வருகிறார். இவர் கருப்பொருள் புதிர்களில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் திரைப்படங்கள் மீது விருப்பம் கொண்டவர். பிரஜா வாணி, சம்யுக்த கர்நாடகா, சக்தி, மங்களா, விஜய கர்நாடகா மற்றும் ஈ சஞ்சே போன்ற தினசரி, வார மற்றும் பதினைந்து வெளியீடுகளில் இவரது குறுப்புப்புதிர்கள் வெளிவந்துள்ளன. இப்போது இவர் விஜய கர்நாடகா, சம்யுக்தா கர்நாடகா மற்றும் பிரஜாவணி (சகாபதி) ஆகியவற்றுக்குத் தினசரி குறுக்கெழுத்துக்களை உருவாக்கி வருகிறார். 2018 சூலை இறுதிக்குள் இவர் 42,000 குறுக்கெழுத்துக்கள் மற்றும் வினாடி வினா புதிர்களைத் தொகுத்துள்ளார். ஆரம்பத்தில் குறுக்கெழுத்துப்புதிர்களைத் தொகுக்க இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்ட இவர் தற்போது 20 நிமிடங்களே எடுத்துக்கொள்கிறார்.[2][3]

குறுக்கெழுத்துக்களைத் தயாரிப்பதைத் தவிர, ராவ் பல வெளியீடுகளுக்கான வினாடி வினாக்களையும் அமைத்துள்ளார்.. இவரது வீட்டின் முன் சுவரில் கருப்பு மற்றும் வெள்ளை ஓடுகளின் குறுக்கெழுத்து கட்டம் உள்ளது. 2016 முதல் 25 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட கன்னட பத்திரிகைகளுக்கு இவர் தனது குறுக்கெழுத்துக்களை வழங்கியுள்ளார். [4]

குறுக்கெழுத்து புத்தகங்கள்[தொகு]

ராவ் தொகுத்த கன்னட குறுக்கெழுத்து புதிர்களின் முதல் தொகுதிகள் 2008 பிப்ரவரி 14 அன்று வெளியானது. [5] ஐந்து கன்னட குறுக்கெழுத்து புத்தகங்களில் மூன்று பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை, ஒன்று கன்னட சினிமா, மற்றொன்று குழந்தைகளுக்கானது.

முதல் குறுக்கெழுத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2013 ஆம் ஆண்டில் ராவ் இரண்டு கன்னட குறுக்கெழுத்து புத்தகங்களை எழுதினார். அவை பாடா க்ரீட் மற்றும் பாடா லுக்கா . ஒவ்வொன்றிலும் 160 குறுக்கெழுத்துக்கள் இருந்தன. [6] [7]

மேலும் 5 கன்னட குறுக்கெழுத்து புத்தகங்கள் 15.01.2017 அன்று பதஜாலா, பதஜாகா, பதரங்கா, பதசம்படா மற்றும் பதவ்யுகா என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கவிஞரும் பேராசிரியருமான தோடரங்கேகவுடா, என்பவர் இப்புத்தகங்களை வெளியிட்டார்.

லிம்கா புத்தக சாதனை[தொகு]

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிராந்திய மொழியில் அதிக எண்ணிக்கையிலான குறுக்கெழுத்துக்களை உருவாக்கியதற்காக லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார். [8]

பிற படைப்புகள்[தொகு]

2009 ஆம் ஆண்டில், கர்நாடக திரைப்பட சம்மேளனம் ஏற்பாடு செய்த பிளாட்டினம் ஜூபிலி கன்னட சினிமா -75 இன் ஒரு பகுதியாக கன்னட சினிமாவுக்கு பங்களித்த நபர்களைப் பற்றிய 75 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அந்த புத்தகங்களில் ராவ் எழுதிய இரண்டு புத்தகங்கள், ராஜகுமார் [9] மற்றும் டி.எஸ். கரிபசையா ஆகியோரின் முந்தைய படைப்புகளாகும்.

இவர் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ளார். மேலும் 2018 மார்ச்சில் புனேவில் நடைபெற்ற 12 வது உலகளாவிய தொடர்பு மாநாட்டில் மதிப்புமிக்க பி.ஆர்.சி.ஐ விருதுகளை பெற்றார். [10]

குறிப்புகள்[தொகு]

  1. "Edit -Details Displayed". Rni.nic.in. Archived from the original on 27 December 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-28.
  2. "The face behind the chequered grids". The Hindu. 22 September 2002 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103015103/http://www.hinduonnet.com/thehindu/lf/2002/09/22/stories/2002092200070200.htm. பார்த்த நாள்: 2014-07-07. 
  3. "Making clues". The Hindu Businessline. 14 May 2001. http://www.thehindubusinessline.com/2001/05/14/stories/101444g3.htm. பார்த்த நாள்: 2014-07-07. 
  4. "Limca Book of Records". Limcabookofrecords.in. Archived from the original on 4 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-28.
  5. "Kannada crossword puzzles launched". The Hindu. 17 February 2008 இம் மூலத்தில் இருந்து 2009-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090724083952/http://www.hindu.com/2008/02/17/stories/2008021753500400.htm. பார்த்த நாள்: 2014-07-07. 
  6. "Pada Kreede". Vasantha Prakashana. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
  7. "Pada Loka". Vasantha Prakashana. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
  8. "MOST CROSSWORDS CREATED (REGIONAL LANGUAGE)". Limca Book of Records. limcabookofrecords.com. Archived from the original on 4 May 2016.
  9. "Book on Rajkumar to be released in New Jersey". 2 May 2008 இம் மூலத்தில் இருந்து 2008-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080506050102/http://www.hindu.com/2008/05/02/stories/2008050262220400.htm. பார்த்த நாள்: 2014-07-07. 
  10. http://www.vikypedia.in/barun-jha-pti-adfactors-madan-bahal-win-top-honours-prci-global-conclave/ பரணிடப்பட்டது 2020-06-26 at the வந்தவழி இயந்திரம் http://www.vikypedia.in/barun-jha-pti[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._என்._பிரகலாத_ராவ்&oldid=3546467" இலிருந்து மீள்விக்கப்பட்டது