பெங் சிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங் சிக்சன் (Peng Sixun) என்பவர் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவ வேதியியலாளர் ஆவார். இவர் 1919 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் நாள் பிறந்தார்.

சீனாவின் பாவோயிங் மாகாணத்தின் துயியா மக்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே பெங் சிக்சன் ஆவார். இவர் 1942 ஆம் ஆண்டு தேசிய மருந்தியல் கல்லூரியில் பட்டம் பெற்றார், 1950 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தை முடித்தார். சீனா மருந்தியல் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் கண்டிருந்த தான் கற்ற பல்கலைக்கழகத்திற்கே கல்வி கற்பிக்க பெங் மீண்டும் திரும்பினார். 1996 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீன பொறியியல் கல்விக் கழகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் தனது 99 ஆம் வயதில் பெங் இறந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 蒋子文 (9 December 2018). "中国工程院院士、药物化学专家、中国药科大学教授彭司勋逝世" (in zh). The Paper. https://www.thepaper.cn/newsDetail_forward_2722455. பார்த்த நாள்: 10 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்_சிக்சன்&oldid=2975703" இலிருந்து மீள்விக்கப்பட்டது