கோலாப் அணைக்கட்டு

ஆள்கூறுகள்: 18°47′18″N 82°36′01″E / 18.78833°N 82.60028°E / 18.78833; 82.60028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாப் அணைக்கட்டு
କୋଲାବ ଜଳବନ୍ଧ
2007 ஏப்ரலில் கோலாப் அணைக்கட்டு
கோலாப் அணைக்கட்டு is located in இந்தியா
கோலாப் அணைக்கட்டு
Location of கோலாப் அணைக்கட்டு
କୋଲାବ ଜଳବନ୍ଧ in இந்தியா
அதிகாரபூர்வ பெயர்மேல் கோலார் அணைக்கட்டு அல்லது மேல் கோலாப் நீர்த்தேக்கம்
அமைவிடம்ஒடிசாவின் ஜெய்பூரிலிருந்து 5 கிமீ
புவியியல் ஆள்கூற்று18°47′18″N 82°36′01″E / 18.78833°N 82.60028°E / 18.78833; 82.60028
கட்டத் தொடங்கியது1976
திறந்தது1993
அணையும் வழிகாலும்
வகைநேரான, கொத்து ஈர்ப்பணை
தடுக்கப்படும் ஆறுகோலாப் ஆறு
உயரம்54.50 மீ (179 அடி)
நீளம்630.50 மீ (2,068.6 அடி)
வழிகால்கள்11
வழிகால் வகைOgee
வழிகால் அளவு10020 (cumec)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மேல் கோலாப் நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1000000000மீ3(810,000 ஏக்கர்-அடி)[1]
நீர்ப்பிடிப்பு பகுதி1630 சதுர கிலோமீட்டர் (630 சதுர மைல்)
மேற்பரப்பு பகுதி100மீ2(39 சதுர மைல்)
மேல் கோலாப் நீர்மின் நிலையம்
ஆள்கூறுகள்18°49′54″N 82°35′37″E / 18.83167°N 82.59361°E / 18.83167; 82.59361
இயக்குனர்(கள்)ஓஎச்பிசி
பணியமர்த்தம்1993
சுழலிகள்4 x 80 Francis-type
நிறுவப்பட்ட திறன்320 மெகா வாட்டு

கோலாப் அணை (Kolab Dam) என்பது இந்தியாவின் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஈர்ப்பு அணை ஆகும். கோதாவரி ஆற்றின் கிளை நதியான கோலாப் நதியின் நீரை இந்த அணை தேக்கி வைக்கிறது. [2] [3] [4] [5] [6] [7]

பண்புகள்[தொகு]

இந்த கம்பீரமான நீர்த்தேக்கமானது, கோதாவரி ஆற்றின் துணை நதியான கோலாப் நதியில் கடல் மட்டத்திலிருந்து மேலே சுமார் 914.4 மீ (3,000 அடி) உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த நீர்த்தேக்கமானது நீர்மின்சக்தி உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளது.[8] கோலாப் அணையானது 646 மீ (2,119 அடி) நீளமும் மற்றும் 55மீ (180 அடி) உயரமும் கொண்டுள்ளது.[9]

வரலாறு[தொகு]

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக கோராபுட் மாவட்டம் இருந்த போது கோலாப் அணைக்கட்டிற்கான முதல் யோசனை உதித்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, 1961 ஆம் ஆண்டில் ஒடிசா மாநில அரசாங்கத்தால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, 1976 ஆம் ஆண்டில் ஒடிசா மாநில அரசாங்கத்தின் பல முன்மொழிவுகளுக்குப் பிறகு ஒன்றிய திட்ட ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டமானது 1993ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. [10] [11]

மேல் கோலாப் நீர்மின்சக்தித் திட்டம்[தொகு]

மேல் கோலாப் மின் நிலையம்

இந்த திட்டம் கோதாவரி நதியின் துணை நதியான கோலாப் நதியின் நீர் திறனைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு 832.2 மில்லியன் யூனிட் உற்பத்தியுடன் 95 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், ஜெய்பூர் துணை நிலையத்தில் பல்நிலைய மின் தொடர் இணைப்பு பங்கீட்டிற்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.[12]

சுற்றுலா[தொகு]

கோலாப் அணை ஒடிசாவின் மிக அழகான இயற்கை இயற்கை ஈர்ப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அணைக்கு அருகில் கட்டப்பட்ட கோலாப் பூங்கா என்ற தாவரவியல் பூங்காவில் சுமார் 200 வகையான பூச்செடிகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 914.4 மீ (3,000 அடி) உயரத்தில் அமைந்துள்ள கோலாப் மின் உற்பத்தி நிலையம் இந்த இடத்தை இன்னும் அழகாக ஆக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் வார இறுதி சுற்றுலா மற்றும் படகு சவாரி செய்ய ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள். [13]

பரந்த காட்சிகள்[தொகு]

ஏப்ரல் 2007 இல் கோலாப் அணை
ஜூன் 2011 இல் கோலாப் அணை

குறிப்புகள்[தொகு]

  1. "Upper Kolab Dam D01660 -". india-wris.nrsc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  2. "KOLAB | Koraput District : Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  3. Bureau, O. B. (2017-11-21). "Four children drown in Kolab dam". ODISHA BYTES (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  4. "Power production hit at Kolab, Balimela - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  5. "No power generation at Kolab Dam till Dec 8". Orissa POST (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-28. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  6. "Odisha: Two shutters of Upper Kolab dam in Koraput have been opened today". ashokanews (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  7. "Cyclone 'Daye' lashes Odisha, 2 shutters of upper Kolab dam opened after rise in water level". WION (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  8. "People risk lives to cross Kolab reservoir in Koraput: A ground report". odishatv.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  9. "Upper Kolab Dam D01660 -". india-wris.nrsc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  10. "Odisha Hydro Power Corporation Ltd". www.ohpcltd.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  11. "Upper Kolab Project: Plan to release dam water rings flood alarm". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  12. "No power generation at Kolab Dam till Dec 8 - Orissa Post". DailyHunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  13. Buzz, Bhubaneswar (2015-08-01). "Kolab Dam Jeypore in Odisha - A travel blog by Santosh Panda". Bhubaneswar Buzz. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.

[புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாப்_அணைக்கட்டு&oldid=3616500" இலிருந்து மீள்விக்கப்பட்டது