குறுக்க பலபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (பி.இ.டி) ஒரு பொதுவான குறுக்க பலபடி ஆகும்.

குறுக்க பலபடிகள் (Condensation polymers) என்பவை ஏதாவதொரு குறுக்க வினையின் மூலம் உருவான பலபடிகள் ஆகும். குறுக்க வினைகளில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்து அவற்றிலிருந்து மெத்தனால் அல்லது நீர் போன்ற சிறிய மூலக்கூறுகளை இழந்து ஒரு மூலக்கூற்றை உருவாக்கும். குறுக்க பலபடிகள் என்பவை குறுக்க பலபடியாக்கல் வினைகளால் உருவானவையாகும். இத்தகைய வினைகள் மூலக்கூறுகளுக்கிடையே வெவ்வெறு நிலைகளிலான பலபடியாக்கல் மற்றும் குறுக்க வினையால் உறுவான குறுக்க சங்கிலித்தொடர் பலபடியாக்கல் ஆகும். ஒரு பலபடியானது ஒற்றை மூலக்கூறுகளின் செயலுறு இடங்களில் தொடர் வினையின் காரணமாகவும் உருவாகின்றது. பலபடியாக்கல் வினையின் மிக முக்கியமான வடிவங்கள் கரியணுத் தொடர் பலபடியாக்கல் மற்றும் பல்சேர்க்கை வினைகள் ஆகும். இவை இரண்டுமே சேர்க்கைப் பலபடிகளைத் தருகின்றன.

குறுக்க பலபடியாக்கல் என்பது படிநிலை - வளர்ச்சி பலபடியாக்கலின் ஒரு வடிவம் ஆகும். இரு வேதிவினைக் குழுக்கள் கொண்ட ஒருமங்களைக் கொண்டு, அதாவது இரண்டு வினைத்திறன் மிக்க இறுதித் தொகுதிகளைக் கொண்ட சேர்மங்களைக் கொண்டு நேரியல் பலபடிகள் உற்பத்தி செய்ய முடியும். பொதுவான குறுக்கப் பலபடிகளில் பாலிஅமைடுகள், பாலிஅசிட்டால்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை அடங்கும். [1] [2]

பாலிஅமைடுகள்[தொகு]

குறுக்க பலபடிகளில் ஒரு முக்கியமான வகை பாலிஅமைடுகள் ஆகும். அவை கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு அமீன் ஆகியவற்றின் வினையிலிருந்து உருவாகின்றன. எடுத்துக்காட்டுகளில் நைலான்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை அடங்கும். அமினோ-கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படும் போது, எ.கா. அமினோ அமிலங்கள், பலபடியாக்கலின் விகிதக்கலவையில் நீரின் இணை உருவாக்கமும் அடங்கும்.

n H 2 NX-CO 2 H → [HN-XC (O)] n + n H 2 O.

டைஅமீன்கள் மற்றும் டைகார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து பலபடிகள் தயாரிக்கப்படும் போது, (எ.கா. நைலான் 66 இன் உற்பத்தி) பலபடியாக்கலானது மீண்டும், மீண்டும் வரும் ஒவ்வொரு அலகிற்கும் இரண்டு மூலக்கூறு நீரை உருவாக்குகின்றது.

n H 2 NX-NH 2 + n HO 2 CY-CO 2 H → [HN-X-NHC (O) -YC (O)] n + 2n H 2 O.
ஒரு வகை ஒடுக்கம் - பலபடியின் பொதுவான வேதியியல் அமைப்பு

பாலிஎசுத்தர்கள்[தொகு]

குறுக்கப் பலபடிகளில் மற்றுமொரு முக்கியமான வகைப்பாடானது பாலிஎசுத்தர்களாகும். அவை கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு ஆல்கஹால் ஆகியவற்றின் வினையிலிருந்து உருவாகின்றன. பாலிஎசுத்தர்களுக்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்று பின்வருமாறு, எ.கா. பாலிஎதிலீன்டெரிப்தாலேட்டு :

n HO-X-OH + n HO 2 CY-CO 2 H → [OXO 2 CYC (O)] n + (3n-2) H 2 O.
பாலி- ( <i id="mwUQ">ஆர்</i> ) -3-ஐதராக்ஸிபியூட்ரேட் (பி3 ஹெச்.பி), இயற்கையாக காணப்படும் பலபடியின் அமைப்பு.

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகள்[தொகு]

சேர்க்கைப் பலபடிகளைக் காட்டிலும் குறுக்கப் பலபடிகள் அதிக மக்கும் தன்மை கொண்டவை. ஒருமங்களுக்கிடையேயான பெப்டைடு அல்லது எசுத்தர் பிணைப்புகள், குறிப்பாக, வினையூக்கிகள் அல்லது பாக்டீரியா நொதிகள் முன்னிலையில் நீராற்பகுப்பு செய்யப்படலாம். [ மேற்கோள் தேவை ]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Introduction to Polymers 1987 R.J. Young Chapman & Hall ISBN 0-412-22170-5
  2. D. Margerison, G. C. East, J. E. Spice (1967). An Introduction to Polymer Chemistry. Pergamon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-011891-8. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்க_பலபடி&oldid=2958711" இலிருந்து மீள்விக்கப்பட்டது