தென்னிந்திய இந்தி பிரச்சார சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்திய இந்தி பிரச்சார சபை
வகைபொது
உருவாக்கம்1918
உருவாக்குனர்மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட்
தலைவர்டாக்டர் நீதிபதி வி. எஸ். மாலிமத்[1]
அமைவிடம்,
வளாகம்ஆந்திரா, கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு
மொழிஇந்தி

தென்னிந்திய இந்தி பிரச்சார சபை (Dakshina Bharat Hindi Prachar Sabha) என்பது ஒரு கல்வி அமைப்பாகும். இந்தி பேசாதா தென்னிந்திய மக்களுடைய இந்தி மொழிக் கல்வியறிவை மேம்படுத்துவதே, இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதன் தலைமையகமானது சென்னை, தி.நகர், தாணிகாச்சலம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பை மகாத்மா காந்தி நிறுவினார். அவர் சபையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

தென்னிந்தியாவில், இந்தி இயக்கம் 1918 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. தேசத்தை ஒருங்கிணைக்கூடிய மிகுந்த ஆர்வத்தில் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், பெரும்பாலான பிரிவினர்களால் இந்தி பேசப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தார்.

ஆகவே, அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் பங்கனப்பள்ளி, கொச்சின், ஐதராபாத், மைசூர், புதுக்கோட்டை, சந்தூர் மற்றும் திருவிதாங்கூர் ஆகிய சுதேச மாநிலத்திலும் இந்தி கல்வியை பரப்புவதற்காக தென்னிந்தியா இந்தி பிரச்சார சபையை மெட்ராசில் நிறுவினார். சபையை அன்னி பெசன்ட் 17 சூன், 1918 அன்று தொடங்கி வைத்தார்.[2]

இந்த இயக்கத்தை மெட்ராசில் (சென்னை) உள்ள கோகலே ஹாலில் ஜனாதிபதி தலைமையில் அன்னி பெசன்ட் திறந்து வைத்தார். முதல் இந்தி வகுப்பை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி எடுத்தார். இந்தி பயிற்சிப் பள்ளிகள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன.

மாணவர்களின் எண்ணிக்கை 1919இல் 80 ஆக இருந்தது, அடுத்தடுத்த ஆண்டுகளில் நூறாயிரமாக அதிகரித்தது. இன்று இந்த இயக்கம் 6000 மையங்களில், 7000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்தம் 650,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 120 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது.

1927 வாக்கில், இந்தி பிரச்சார சபை ஒரு தன்னிச்சையான அமைப்பாக உருவெடுத்தது. மகாத்மா காந்தி 1948இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார். சபையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது, ​​காந்தி சபையின் வளாகத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் தங்கியிருந்தார்.[2]

தெற்கில் ‘இந்தி பிரச்சாரத்தை’ அந்தந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களை ஈடுபடுத்தி முன்னெடுக்க வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். 1920 வரை, இந்த சபை மெட்ராசில் உள்ள ஜார்ஜ் டவுனில் தனது அலுவலகத்தைக் கொண்டிருந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு மைலாப்பூருக்கும், பின்னர் திருவல்லிக்கேணிக்கும் மாற்றப்பட்டது, அங்கு அது 1936 வரை செயல்பட்டது. 1936 ஆம் ஆண்டில், சபை அதன் தற்போதைய தலைமையகமான தி.நகருக்கு மாற்றப்பட்டது. வழக்கமான தேர்வுகள் 1922 முதல் தவறாமல் நடத்தப்பட்டன.

முதல் பட்டப்படிப்பு தேர்வு ‘ராஷ்டிரபா விஷாரத்’ நடத்தப்பட்டு 1931இல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காகா காலேல்கர் உரையாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப், பின்னர் 1946 ஆம் ஆண்டில் சபை தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. காந்திஜி கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். சபையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது அவர் இருந்ததை நினைவுகூரும் விதமாகவும், அந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் விதமாகவும், கொண்டாட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு மண்டபம் கட்டப்பட்டது, அதை சூன், 1963இல் மொரார்ஜி தேசாய் திறந்து வைத்தார்.

சபையின் சமீபத்திய வரலாற்று முக்கியத்துவமாக, இந்திய அரசின் பொருளாதார உதவியுடன் ₹ 8.5 மில்லியன் செலவில் தேசிய இந்தி ஆராய்ச்சி நூலகக் கட்டிடம் கட்டமைக்கப்பட்டது. மற்றொரு முக்கியத்துவம் என்னவெனில் 'மகாத்மா காந்தி பட்டமளிப்பு விழா அரங்கம்' சபையின் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் பிற செயல்பாடுகளை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதும் ஆகும்.

பொறுப்புகள்[தொகு]

தென்னிந்திய இந்தி பிரச்சார சபையின் முன்னாள் தலைவர்கள் பின்வருமாறு:[1]

பிரச்சார பயிற்சி[தொகு]

ஐதராபாத், விசாகப்பட்டினம், தெனாலி, குண்டக்கல், அவணிகட்டா, விஜயவாடா, காக்கிநாடா, ஜங்காவ்ன், திருச்சி, ஊட்டி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்த மையங்களில் பிரச்சார பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அமைப்பு[தொகு]

சபை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு என மாநிலங்களுக்கு ஒவ்வொரு பகுதியில் அமைந்துள்ளது. தலைமையகம் சென்னை, தி.நகரில் உள்ளது. நான்கு மாநில, தலைமையகங்கள் பின்வருமாறு:

தேர்வுகள்[தொகு]

நிலைகள் வகுப்புகள்
முதல் நிலை பரிச்சய
இரண்டாம் நிலை ப்ராதமிக்
மூன்றாம் நிலை மத்யமா
நான்காம் நிலை ராஷ்ட்ர பாஷ
ஐந்தாம் நிலை ப்ரவேசிகா
ஆறாம் நிலை விஷாரத் பூர்வார்த்
ஏழாம் நிலை விஷாரத் உத்தராத்
எட்டாம் நிலை ப்ரவீன் பூர்வார்த்
ஒன்பதாம் நிலை ப்ரவீன் உத்தரார்த்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]