அருணிதி கலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருணிதி கலியன் எனபவர் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் சோழ நாட்டின், மருதூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். என்பதை இவரை கல்வெட்டுகள் சோழ நாட்டவன், மருதூர் என்னும் ஊரவன், மருதூருடையான் என்று குறிப்பிடப்படுவதில் இருந்து அறியப்படுகிறது.

அறக்கொடைகள்[தொகு]

இவர் பல்வேறு அறக் கொடைகளை செய்துள்ளதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்றது. அருணிதி கலியன் ஆனைமங்கலம் என்ற ஊரில் உள்ள ஏரி நிலத்தையும் அந்த ஏரி நீர் பாயும் இரு வேலி நிலத்தையும் விலைக்கு வாங்கினார். இதிலிருந்து வந்த வருமானத்தில் நரசிங்க பெருமாள் கோயில் உள்ள நரசிங்கப் பெருமானுக்கு நிவேதனம் செய்விக்கவும், வேதப்பிராமணர்க்கு அன்னம் பாலிப்பு நடத்தவும் ஏற்பாடு செய்தார். வேதாரண்யத்தில் திருவிளக்கு எரிக்க 90 ஆடுகளை அருணிதி கலியன் தானமாக அளித்ததாகப் பராந்தக சோழனது 28-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியவருகிறது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 1-13, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, அருணிதி கலியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணிதி_கலியன்&oldid=3717942" இலிருந்து மீள்விக்கப்பட்டது