முலான் (2020 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலான்
இயக்கம்நிக்கி கரோ
தயாரிப்பு
  • கிறிஸ் பெண்டர்
  • டெண்டோ நாகெண்டா
  • ஜேசன் டி. ரீட்
  • ஜேக் வீனர்
மூலக்கதை
திரைக்கதை
  • ரிக் யாஃபா
    அமண்டா சில்வர்]]
  • லாரன் ஹைனெக்
  • எலிசபெத் மார்ட்டின்
இசைஹாரி கிரெக்சன்-வில்லியம்ஸ்[1]
நடிப்பு
  • லியு யிஃபை
  • டோனி யென்
  • ஜேசன் ஸ்காட் லீ
  • யோசன் ஆன்
  • காங் லீ
  • ஜெட் லி
ஒளிப்பதிவுமாண்டி வாக்கர்
படத்தொகுப்புடேவிட் கோல்சன்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 9, 2020 (2020-03-09)(Hollywood premiere)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்[2]
மொத்த வருவாய்$874[3]

முலான் (Mulan) என்பது 2020 ஆம் ஆண்டய அமெரிக்க அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், லாரன் ஹைனெக் மற்றும் எலிசபெத் மார்ட்டின் ஆகியோர் திரைக்கதை அமைக்க, நிக்கி கரோ இயக்க வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்ததள்ளது. இந்த திரைப்படம் சீன நாட்டுப்புறக் கதையான "தி பேலட் ஆஃப் முலான் " ஐ அடிப்படையாகக் கொண்டது. மேலும் 1998 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் இதேபெயரில் தயாரித்த அனிமேஷன் படத்தைத் தழுவி இப்படத்தை லைவ் ஆக்சனில் தயாரித்தள்ளது. இந்த படத்தில் முதனமை வேடத்தில் லியு நடிக்க இஃபெய், டோனி யென், ஜேசன் ஸ்காட் லீ, யோசன் ஆன், காங் லீ, மற்றும் ஜெட் லீ ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

லைவ்-ஆக்சன் முலான் படத்தின் மறு ஆக்க திட்டமானது 2010 இல் தொடங்கியது, ஆனால் இது அப்போது நிறைவேறவில்லை. 2015 மார்ச்சில், இதற்கான தயாரிப்பு முயற்சி அறிவிக்கப்பட்டு, படத்தை இயக்க காரோ 2017 பிப்ரவரியில் பணியமர்த்தப்பட்டார். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க ஆயிரத்துக்கும் மேறபட்ட சீன யுவதிகளைப் பரிசீலித்து, 2017 நவம்பரில் லியூ இஃபெய் என்பவர் தேர்வானார். மீதமுள்ள நடிகர்கள் அடுத்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்டனர். படப்பிடிப்பானது 2018 ஆகத்தில் தொடங்கி நவம்பர் வரை நீடித்தது, படப்பிடப்பானது நியூசிலாந்து மற்றும் சீனாவில் நடைபெற்றது.

எம்பி.ஏ.ஏ ஆல் பி.ஜி -13 மதிப்பீடு வழங்கப்பட்ட டிஸ்னியின் முதல் லைவ்-ஆக்சன் மறு ஆக்கப் படம் முலன் ஆகும். [4] இப்படமானது 2020 மார்ச் 27 அன்று அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 2019–20 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வெளியீடு தாமதமானது. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப்படுகிறது.

கதைச்சுருக்கம்[தொகு]

பண்டைய சீனத்தில் வடக்கில் இருந்துவரும் எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும்விதமாக. வீட்டுக்கு ஒருவர் சீன இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று சீனப் பேரரசர் ஹன்சி ஆணையிடுகிறார். அப்போது ஒரு கெளரவமான போர்வீரனின் மூத்த மகள் ஹுவா முலான், நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு பதிலாக ஆண் வேடமிட்டு படையில் இணைகிறாள். இரக்கமற்ற எதிரிகள், சூனியக்காரியார் வழிநடத்தப்படும் சேனை என அனைத்தையும் முலான் எதிர் கொள்கிறாள். இதன் முடிவில் தாயகமும், தந்தையும் காப்பாற்றப்படனவா என்பதே கதை.

குறிப்புகள்[தொகு]

  1. "Harry-Gregson-Williams to Score Disney's 'Mulan' Live-Action Movie". Film Music Reporter. Archived from the original on August 24, 2018. பார்க்கப்பட்ட நாள் August 24, 2018.
  2. Pallotta, Frank (February 14, 2020). "Disney's 'Mulan' was supposed to be a big hit in China. The coronavirus could threaten that". CNN Business. https://amp.cnn.com/cnn/2020/02/13/media/disney-mulan-coronavirus/index.html. 
  3. "Mulan (2020)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் March 31, 2020.
  4. Rico, Klaritza (2020-02-19). "'Mulan' Is Disney's First Live-Action Remake to Get a PG-13 Rating". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  5. "Mulan (2020)". Disney Movies.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலான்_(2020_திரைப்படம்)&oldid=3315876" இலிருந்து மீள்விக்கப்பட்டது