சிதெரோட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதெரோட்டில்
Siderotil
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe2+SO4•5H2O
இனங்காணல்
நிறம்வெளிர் பச்சை, மஞ்சள், வெண்மை
படிக இயல்புஇழை முதல் தூள் வரை, அரிதாக ஊசி படிகங்கள்
படிக அமைப்புமுச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுகண்ணாடி அல்லது பட்டு பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.1 - 2.2
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.513 - 1.515 nβ = 1.525 - 1.526 nγ = 1.534 - 1.536
இரட்டை ஒளிவிலகல்δ = 0.021
2V கோணம்அளக்கப்பட்டது 50°, கணக்கிடப்பட்டது: 80° முதல் 86°
கரைதிறன்நீரில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3]

சிதெரோட்டில் (Siderotil) என்பது FeSO4•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு(II) சல்பேட்டு என்ற சேர்மத்தின் நீரேற்று வடிவமாக இந்த சல்பேட்டு கனிமம் கருதப்படுகிறது. மெலாண்டெரைட்டு கனிமத்திலிருந்து நீர் மூலக்கூறு இழக்கப்படுவதால் சிதெரோட்டில் உருவாகிறது[1]. பொதுவாக இதன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இரும்புக்கு மாற்றாக தாமிரம் இடம்பெறுவதுண்டு. குறிப்பாக இழை அல்லது தூள் ஆக்கிரமிப்புகளாக சிதெரோட்டில் கனிமம் தோன்றுகிறது. ஆனால் ஊசிவடிவ முச்சரிவச்சு படிகங்களாக தோன்றவும் வாய்ப்பு இருக்கிறது.

சுலோவேனியா நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இத்ரிசா நகரத்தின் இத்ரிசா சுரங்கத்தில் சிதெரோட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இரும்பு என்ற பொருள் கொண்ட சிதெரோசு என்ற கிரேக்க மொழிச் சொல் இழை என்ற பொருள் கொண்ட டிலோசு என்ற சொல்லிலிருந்தும் சிதெரோட்டில் என்ற பெயர் உருவாக்கப்பட்டது[1]. இருப்பினும் இத்ரிசாவில் கிடைத்த கனிமப்பொருள் சிதெரோட்டிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இத்தாது பல்வேறு வகையான உலகளாவிய இடங்களிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதெரோட்டில்&oldid=2941223" இலிருந்து மீள்விக்கப்பட்டது