ரோசனாரா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசனாரா பேகம்
முகலாயப் பேரரசின் ஷா
பாதுசா பேகம்
இளவரசி ரோசனாரா தனது உதவியாளர்களுடன்
பிறப்பு1617 செப்டம்பர் 3
புர்ஹான்பூர், இந்தியா
இறப்பு11 செப்டம்பர் 1671(1671-09-11) (அகவை 54)
தில்லி, இந்தியா
புதைத்த இடம்
மரபுதிமிரித்
தந்தைஷாஜகான்
தாய்மும்தாசு மகால்
மதம்இசுலாம்

ரோசனாரா பேகம் (Roshanara Begum) (பிறப்பு:1617 செப்டம்பர் 3 – இறப்பு: 1671 செப்டம்பர் 11) [1] இவர் ஒரு முகலாய இளவரசியாவார். மேலும்,பேரரசர் ஷாஜகான் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் மகால் ஆகியோரின் இரண்டாவது மகளாவார். ரோசனாரா ஒரு சிறந்த பெண் மற்றும் திறமையான கவிஞராகத் திகழ்ந்தார். இவர் தனது தம்பி ஒளரங்கசீப்பிடம் மிகவும் ஈடுபாடாக இருந்தார். மேலும் 1657இல் ஷாஜகானின் நோய்க்குப் பின்னர் நடந்த அடுத்தடுத்த போரின் போது தனது சகோதரனுக்கு ஆதரவளித்தார். 1658ஆம் ஆண்டில் ஒளரங்கசீப் அரியணைக்கு வந்த பிறகு, ரோசனாராவுக்கு அவரது சகோதரர் பாதுசா பேகம் என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் முகலாய பேரரசின் முதல் பெண்மணியும் ஆனார். மேலும் இவர் ஒரு சக்திவாய்ந்த அரசியல் பிரமுகராகவும் திகழ்ந்தார்.

இன்று, ரோசனாரா பெயரில் அமைக்கப்பட்ட ரோசனாரா பூந்தோட்டம், [2] இன்றைய வடக்கு தில்லியில் அமைந்துள்ள ஒரு மகிழ்ச்சியானத் தோட்டத்திற்கு மிகவும் பிரபலமானது.

குடும்பம்[தொகு]

ரோசனாராவின் நான்கு சகோதரர்களில், மூத்தவர், தாரா சிக்கோ, ஷாஜகானுக்கு பிடித்த மகனும், மயில் சிம்மாசனத்தின் வாரிசும் ஆவார் . இரண்டாவது மகனான ஷா சுஜா தனது தந்தையின் சிம்மாசனத்தை கைப்பற்ற பகிரங்கமாக எதிர்த்து வந்த வங்காளத்தின் கலகக்கார ஆளுநராக இருந்தார். மூன்றாவது மகனான ஔரங்கசீப் தக்காணத்தின் பெயரளவு ஆளுநராக இருந்தார். குஜராத்தின் ஆளுநர் பதவியில் இருந்த இளைய மகனான முராத் அந்த பதவியில் மிகவும் பலவீனமானவராகவும், மிகவும் பயனற்றவராகவும் இருப்பதை நிரூபித்தார். ஷாஜகான் அவரது பட்டங்களை பறித்துவிட்டு, அதற்கு பதிலாக தாரா சிக்கோவுக்கு அதை வழங்கினார். இது ஷாஜகானுக்கும் அவரது இளைய மகன்களுக்கும் இடையில் ஒரு குடும்பப் போராட்டத்தைத் தூண்டியது. அவர்கள் வயதான பேரரசரை பதவி நீக்கம் செய்து தங்களுக்கு அரியணையை கைப்பற்ற முடிவு செய்தனர். இந்த அதிகாரப் போராட்டத்தின்போது, தாரா ஷிகோ தனது மூத்த சகோதரி ஜகானாரா பேகமின் ஆதரவைப் பெற்றார். ரோசனாரா பேகம் அதற்கு பதிலாக ஔரங்கசீப்புக்கு ஆதரவாக இருந்தார்.

அதிகாரத்திற்கு உயருதல்[தொகு]

ஔரங்கசீப்பைக் கொல்ல இவரது தந்தை மற்றும் தாரா சிக்கோவின் சதித்திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து ரோசனாரா அதிகாரத்திற்கு வந்தார். குடும்ப நெருக்கடியை தீர்ப்பதற்காக ஷாஜகான் டெல்லிக்கு வருகை தருமாறு ஔரங்கசீப்பிற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். எவ்வாறாயினும், ஷாஜகான் தனது மூன்றாவது மகனை தனது அரியணைக்கு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதியதால் சிறையில் அவுரங்கசீப்பைக் கைது செய்யவும், சிறையில் அடைத்து கொல்லவும் திட்டமிட்டார். ரோசனாரா தனது தந்தையின் சதிகளைக் அறிந்து, ஒரு தூதரை ஔரங்கசீப்பிடம் அனுப்பினார். அவர்களின் தந்தையின் உண்மையான நோக்கங்களை கோடிட்டுக் காட்டினார். மேலும் ஔரங்கசீப்பை டெல்லியில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்தார்.

ரோசனாரா தன்னை சரியான நேரத்தில் எச்சரித்ததற்காக ஔவுரங்கசீப் இவர் மீது மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார். ஔரங்கசீப்பிற்கு ஆதரவாக அடுத்தடுத்த போர் நடத்த திட்டமிட்டபோது, இவர் அரசவையில் ஒரு சக்திவாய்ந்த நபராக இருந்தார். தாரா சிக்கோ ஆட்சிக்கு வந்தால், தன்னைக் கொன்றுவிடுவார் என்று அஞ்சிய ரோசனாரா, ஔவுரங்கசீப்பிடம் தாராவை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தாரா சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, சாந்தினி சௌக்கைச் சுற்றி வந்து, தலை துண்டிக்கப்பட்டதாக கதைகள் கூறுகிறது. ரோசனாரா தாராவின் தலையை பரிசாக தனது தந்தைக்கு அனுப்பினார். ஷாஜகான், தனக்கு பிடித்த மகனின் தலையைப் பார்த்ததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார், அவர் மயக்கமடைந்து தரையில் விழுந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பல நாட்கள் அவர் ஒரு மன நோய்க்கு ஆளானவராக இருந்தார்.

இறப்பு[தொகு]

ரோசனாரா பேகம் கல்லறை, தில்லி
ரோசனாராவின் கல்லறையின் உட்புறம்

ஔவுரங்கசீப்பின் ஆட்சி நிறுவப்பட்ட பின்னரும், ரோசனாரா தனது செயல்களின் தாக்கங்களுக்கு இன்னும் பயந்து, சுவர் நகரத்திலிருந்து விலகி தனக்காக ஒரு அரண்மனையை கட்டுமாறு ஔரங்கசீப்பைக் கேட்டுக் கொண்டார். ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். ரோசனாரா தில்லியில் உள்ள தனது அரண்மனையில் ஒரு அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு வாழ்க்கையை செலவிடத் தேர்ந்தெடுத்தார். ரோசனாரா தோட்டத்தின் நடுவில் உள்ள இவரது அரண்மனை இந்திய வரலாற்றில் இவர் ஆற்றிய முக்கிய பங்கை நினைவூட்டுகிறது. இவர் தனது 54 வயதில் இறந்தார். ஔரங்கசீப் மூலம்ரோஷனாரா பூந்த்தோட்டத்தில் தன்னை வடிவமைத்துக் கொண்டார்.

காட்சிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Nath, Renuka (1990). Notable Mughal and Hindu women in the 16th and 17th centuries A.D. (1. publ. in India ). Inter-India Publ.. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788121002417. 
  2. Dalrymple, William: "City Of Djinns: A Year In Delhi", Page 198, 1993. Harper Collins, London. ISBN 0-00-215725-X

மேலும் படிக்க[தொகு]

  • Dalrymple, William: "City of Djinns: A Year in Delhi". 1993, Harper Collins, London. ISBN 0-00-215725-X.
  • Eraly, Abraham: "The Mughal Throne". 1997. Penguin Books, India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசனாரா_பேகம்&oldid=2953004" இலிருந்து மீள்விக்கப்பட்டது