பிலிஸ் ஸ்பிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிஸ் ஸ்பிரா (Phyllis Spira) (பிறப்பு: 1943 18 அக்டோபர் - இறப்பு: 2008 மார்ச் 11) இவர் ஓர் தென்னாப்பிரிக்க பாலே நடனக் கலைஞர் ஆவார். இவர் இங்கிலாந்தில் ராயல் பாலேவுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியதும், கேப் டவுனில் உள்ள ஒரு தொழில்முறை நிறுவனத்தில் பாலேவின் முதன்மை நடன கலைஞராக இருபத்தெட்டு ஆண்டுகள் கழித்தார்.[1] 1984ஆம் ஆண்டில் இவர் முதல் (தற்போது வரை) தென்னாப்பிரிக்க பிரிமா பாலேரினா அசோலூட்டா என்று பெயரிடப்பட்டார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

ஜோகானஸ்பேர்க்கில் பிறந்த பிலிஸ் பெர்னிஸ் ஸ்பிரா, லாசர் மற்றும் பென்னி பவுலின் (ரோசன்) ஸ்பிராவின் முதல் மகள் மற்றும் இரண்டாவது குழந்தையவார். தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர், ஆரஞ்சு தோப்பின் இனிமையான புறநகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வந்தனர். இவருக்கு 4 வயதாக இருந்தபோதே பாலே வகுப்புகளில் சேர்க்கப்பட்டார் .அங்கு, அந்த சிறு வயதிலும் கூட, இவர் நடனத்தில் திறமையைக் காட்டினார். ஒரு எபிரேய மழையர் பள்ளியில் படித்த பிறகு, இவர் ஆரஞ்சு க்ரோவ் தொடக்கப்பள்ளி மற்றும் சிறுமிகளுக்கான வேவர்லி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு பாலே வகுப்புகள் மற்றும் ஈஸ்டட் போட்களுக்கான பயிற்சி ஆகியவை பாடநெறி நடவடிக்கைகளாகும். இவருக்கு 15 வயதாக இருந்தபோது, இவரது தலைமையாசிரியர், இவரது விதிவிலக்கான திறமையை உணர்ந்து, தனது நடனப் பயிற்சியைத் தொடர பத்தாம் வகுப்பு முடிவில் பள்ளியை விட்டு வெளியேற அதிகாரப்பூர்வ அனுமதியை அளித்தார். விரைவில், லண்டனில் உள்ள ராயல் பாலே பள்ளியில் சேர இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரு இளம் வயது மகள் ஒரு பெரிய வெளிநாட்டு நகரத்தில் தனியாக வசிக்கும் வாய்ப்பில் பெற்றோரின் அக்கறை இருந்தபோதிலும், அந்த வாய்ப்பைப் பெற அவள் அனுமதிக்கப்பட்டாள்.[3]

1959 மே மாதத்தில் லண்டனுக்கு வந்த ஸ்பிரா, தனது 16 வயதில் ராயல் பாலே பள்ளியில் பயிற்சியைத் தொடங்கினார். நடனத்தில் இவரது சிறப்பு குணங்கள் விரைவில் இவருக்கு சாதகமான கருத்தை ஏற்படுத்தின. பள்ளியின் இயக்குனரான நினெட் டி வலோயிஸ் இவரை "ஒரு குழந்தை மார்கோவா" என்று குறிப்பிட்டார். (இவரை பிரபல பிரித்தன் நடன கலைஞர் அலிசியா மார்கோவாவுடன் ஒப்பிட்டார்).[2] இவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஸ்பிரா படிப்பின் மூலம் விரைவாக முன்னேறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கோவன்ட் கார்டனில் ஸ்வான் லேக்கின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானார். அதன்பிறகு இவர் ராயல் பாலே சுற்றுலா நிறுவனத்தில் சேர அழைக்கப்பட்டார். அப்போது இவருக்கு 17 வயது மட்டுமே ஆகியிருந்தது.

தொழில் வாழ்க்கை[தொகு]

இவ்வாறு இங்கிலாந்தில் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நடனக் கலைஞரின் தொழில் தொடங்கப்பட்டது . மேலும் "தென்னாப்பிரிக்காவில் பாலேவின் மறுக்கமுடியாத ராணி" ஆனார்.[4]

பிற்கால வாழ்வு[தொகு]

1988 ஆம் ஆண்டில் மேடையை விட்டு வெளியேறிய பிறகு, ஸ்பிரா 1999 வரை கேப்டவுன் நகர பாலே நிறுவனத்தில் முதன்மை பாலே ஆசிரியராக பணியாற்றினார். அந்த நேரத்தில் நிறுவனம் கேப் டவுன் சிட்டி பாலே என மறுபெயரிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் கேப்டவுன் நகர பாலே நிறுவன நடனக் கலைஞரான பிலிப் பாய்ட் என்பவர திருமணம் செய்து கொண்டர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே இவர்கள் தங்கள் ஆற்றலை சமூக சேவைக்கு அர்ப்பணித்தனர். டேவிட் பூல் அறக்கட்டளை இளைஞர் பயிற்சி திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இவரும் பாய்ட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு பூல் தொடங்கிய டான்ஸ் ஃபார் ஆல் என்ற நிகழ்ச்சியை நடத்தினர். வெள்ளையர்கள் அல்லாத நகரங்களில் வசிக்கும் வறிய குழந்தைகளுக்கு நடனமாட அமைக்கப்பட்ட இது, கேப்டவுனின் எல்லையில் உள்ள குகுலேத்து, நயங்கா, மற்றும் கெயிலிட்சா மற்றும் கிராமப்புற உள்நாட்டுப் பகுதிகளான பாரிடேல் மற்றும் மொன்டாகு ஆகிய இடங்களில் செயலில் இருந்தது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏழு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை சென்றடைந்தது.[5]

இறப்பு[தொகு]

2007 ஆகத்தில் லண்டனில் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, ஸ்பிரா தனது இரு கால்களிலும் தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். சிக்கல்கள் ஏற்பட்டன, இவர் மீண்டும் வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் உயிர் பிழைக்கவில்லை. தனது 64 வயதில் கேப் டவுன் மருத்துவமனையில் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Debra Craine and Judith Mackrell "Spira, Phyllis," in The Oxford Dictionary of Dance (Oxford University Press, 2000).
  2. 2.0 2.1 Amanda Botha, Phyllis Spira: A Tribute (Cape Town: Human & Rousseau, 1988), p. 1.
  3. Milton Shain and Miriam Pimstone, "Phyllis Spira," Jewish Women's Archive, website, http://jwa.org/encyclopedia/article/spira-phyllis. Retrieved 22 November 2015.
  4. Marina Grut, The History of Ballet in South Africa (Cape Town: Human & Rousseau, 1981), p. 201.
  5. Sulcas, "Phyllis Spira, 64, Cape Town Ballerina, Dies," obituary, 17 March 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிஸ்_ஸ்பிரா&oldid=3931434" இலிருந்து மீள்விக்கப்பட்டது