சூரி (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரி
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுபிளாக் பாந்தர் #2 (மே 2005)
உருவாக்கப்பட்டதுரெஜினோல்ட் ஹட்லின்
ஜான் ரோமிதா ஜூனியர்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஅஜா அதன்னா
பிறப்பிடம்வகாண்டா, ஆப்பிரிக்கா
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
வகாண்டா
P.R.I.D.E
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்க்ரியட், பிளாக் பாந்தர்
திறன்கள்
  • அதி புத்திசாலி
  • தற்காப்புக் கலைஞர்
  • விஞ்சானி
  • வைப்ரேனிய சீருடை உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஆயுதங்க ளை கண்டுபிடிப்பாளர் மற்றும் பயன்பாட்டாளர்
  • சுறுசுறுப்பு, ஆயுள், சகிப்புத்தன்மை, வேகம், சகிப்புத்தன்மை மற்றும் வலிமை

சூரி (ஆங்கில மொழி: Shuri) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கனவுருப்புனைவு பெண் மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ரெஜினோல்ட் ஹட்லின் மற்றும் ஜான் ரோமிதா ஜூனியர் ஆகியோர் உருவாக்கினார்கள். சூரியின் முதல் தோற்றம் மே 2005 இல் இருந்தது பிளாக் பாந்தர் #2 இருந்து தோற்றுவிக்கப்பட்டது.[1][2]

சூரி கற்பனையான ஆப்பிரிக்க இராச்சியமான வகாண்டாவின் இளவரசி. அவர் டி'சாக்காவின் மகள் மற்றும் டி'சல்லாவின் சகோதரி ஆவார். மாவல் திரைப் பிரபஞ்ச திரைப்படத்தில் நடிகை லெட்டிடியா ரைட் என்பவர் சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு முதல் பிளாக் பாந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (2022) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Black Panther vol. 5, #1-2 (April - May 2009). Marvel Comics (New York).
  2. Black Panther vol. 5, #3-6 (June - September 2009). Marvel Comics (New York).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரி_(வரைகதை)&oldid=3328351" இலிருந்து மீள்விக்கப்பட்டது