எக்சா போரேன்(10)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சா போரேன்(10)
இனங்காட்டிகள்
23777-80-2
InChI
  • InChI=1S/B6H10/c7-1-2-6(1)3(7)9-5(6)10-4(6)8-2/h1-6H
    Key: JLQWWRKFGJQFTI-UHFFFAOYSA-N
பண்புகள்
B6H10
வாய்ப்பாட்டு எடை 74.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எக்சா போரேன்(10) (Hexaborane(10)) என்பது B6H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எக்சா போரேன்(12) சேர்மத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டவே எக்சாபோரேன்(10) என்று என்று குறித்துக் காட்டப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் காற்றில் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது [1].

தயாரிப்பு[தொகு]

பென்டாபோரேன்(11) சேர்மத்தை புரோமினேற்றம் செய்து தொடர்ந்து புரோட்டான் நீக்க வினைக்கு உட்படுத்தி அல்லது புரோமைடு [BrB5H7] அயனியை வழங்கச் செய்யும் வினைக்கு உட்படுத்தப்படுகிறது. உருவாகும் எதிர்மின் அயனி தொகுதியானது டைபோரேனுடன் சேர்த்து ஒடுக்கப்பட்டு நடுநிலையான எக்சா போரேன்(10) விளைபொருள் உருவாக்கப்படுகிறது.:[1]

K[BrB5H7] + 1/2 B2H6 → KBr + B6H10

பென்டாபோரேன்களை வெப்பத்தாற் பகுப்பு செய்தும் தயாரிக்கலாம்.

எக்சா போரேன்(10) சேர்மத்தை புரோட்டான் நீக்கம் செய்து [B6H9]− என்ற எதிர்மின் அயனியையும், புரோட்டானேற்றம் செய்து [B6H11]+ என்ற நேர்மின் அயனியையும் உருவாக்க முடியும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Remmel, R. J.; Johnson, H. D.; Brice, V. T.; Shore, S. G.; Gaines, D. F. (1979). "Hexaborane(10)". Inorganic Syntheses 19: 247. doi:10.1002/9780470132500.ch58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132500. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சா_போரேன்(10)&oldid=2934066" இலிருந்து மீள்விக்கப்பட்டது