நிடல் அல் அச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிடல் அல் அச்சர் (Nidal Al Achkar) (பிறப்பு 1934) ஒரு லெபனான் நடிகையும் மற்றும் நாடக இயக்குனருமாவார். மேலும் "லெபனான் நாடக அரங்கத்தின் மகத்தான டேம்" ஆவார். [1]

வாழ்க்கை[தொகு]

நிடால் அல் அச்சர் சிரிய சமூக தேசியவாத கட்சி அரசியல்வாதியான ஆசாத் அல்-அச்சரின் மகளாவார். இவர் இலண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட் என்றப் பள்ளியில் படித்தார். [2] 1967 ஆம் ஆண்டில் இவர் பெய்ரூட்டில் தனது முதல் நாடகத்தை இயக்கியுள்ளார். மேலும் 1960களின் பிற்பகுதியில் பெய்ரூட் நாடக அரங்க பட்டறை ஒன்றைக் உருவாக்கினார்.

லெபனான் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நிடால் அல் அச்சர் 1994 இல் அல் மதீனா நாடக அரங்கத்தை நிறுவினார். பழைய சரோல்லா திரைப்படத்தை வைத்திருந்த கட்டிடத்தை மீட்டெடுத்தார். [3]

நிடல் அல் அச்சர் 2012 மியூரெக்ஸ் டி'ஓரில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இந்த விருதை வழங்கிய லெபனான் கலாச்சார அமைச்சர் காபி லேயவுன் இவரை "லெபனானின் அறிவொளி மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான வெளிப்பாடு" என்று அழைத்தார். [4]

2019 இன் ஒரு நேர்காணலில், அரபு உலகில் "உண்மையான, உருமாறும் புரட்சிகள்" இல்லாமல் அரங்கத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை என்று எச்சரித்தார். இது பேச்சு சுதந்திரத்தையும் திறந்த தன்மையையும் அனுமதிக்கும். [5]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிடல்_அல்_அச்சர்&oldid=2934403" இலிருந்து மீள்விக்கப்பட்டது